Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2016
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,211 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…

sweeperஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.

அங்கு கூட்டிப் பெருக்கும் ஏழைத் தொழிலாளிக்கோ என்ன முயன்றும் எழுதப்படிக்க வரவில்லை. கையெழுத்து கூட போட் முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் மதகுரு மசியவில்லை. வேலையை விட்டு நீக்கிவிட்டார். மிகுந்த வருத்ததுடன் சோர்வாகத் தேவாலயத்தைவிட்டு வெளிய வந்த ஏழைக்கு வேதனை. சொல்லமுடியாத வேதனை. பலவருட பந்தம் பறிபோய்விட்டது. அழுதபடி திரும்பி திரும்பி தேவாலையத்தை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார். மனவேதனை மறைய ஒரு சிகரேட் பிடிக்கலாம் என்று நினைத்தால் பாக்கெட்டில் ஒரு சிகரெட் இல்லை. பக்கத்தில் பார்த்தால் சிகரெட் கடைகூட ஓன்றும் இல்லை. நெடுந்தூரம் நடந்துவிட்டார் ம்ஹ�ம்… சிகெரட் கடையே இல்லை.

பட்டென்று அவருக்கு பொறித் தட்டியது. ” நாம் ஏன் இங்கு சிறிய பெட்டிக் கடை வைக்கக் கூடாது… இங்கே வருகிற பலபேருக்கு பயன்படுமே” என்று முடிவு செய்தார். வெளியே அனுப்பும் போது மதகுரு கொடுத்த சிறிய தொகையை முதலாக்கி சிகரெட்டுடன் மற்றும் பல பொருட்களுடன் கடை ஆரம்பித்தார். வியாபாரம் அமோகமாக நடந்தது… சிறிது காலத்தில் கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தை பெரியதாக்கினார். சில மாதங்களில் பெரிய பணக்கரார் ஆகிவிட்டார்.

இவரிடம் பணம் இருப்பது தெரிந்து ஒரு வங்கியின் மேலாளர் தங்கள் வங்கியில் சேமிக்கும்படியும் வட்டி கிடைக்கும் என்றும் சொல்லி சம்மதிக்க வைத்தார். முடிவில் சேமிக்க விண்ணப்பபடிவங்கள் நிறைவு செய்துவிட்டு பணக்காரரிடம், ” கையொப்பம் போடுங்கள் ” என்றார். பணக்காரருக்கு வந்ததே கோபம்… நிறைய சத்தம் போட்டுவிட்டு முடிவில், தனக்கு கையெழுத்து போடத் தெரியாது என்று முடித்தார்.

வங்கி மேலாளர் ” அட… கையெழுத்து கூட போடத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய வியாபாரியாகி விட்டீர்கள்… உங்களுக்கு அதுவும் தெரிந்திருந்தால் அடடா நீங்கள் எங்கேயோ இருந்திருப்பீர்கள்? ” என்று புகழ்ந்ததும் ” வாயை மூடுங்கள்.. எனக்கு மட்டும் கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் கூட்டி பெருக்கும் தொழிலாளியாகத்தான் இன்னும் இருந்திருப்பேன் ” என்று கர்ஜித்தார்.

இது வெறும் கதையல்ல. குறைகூட ஒருநாளில் நிறைவாகலாம். நம்மில் பலருக்கு பல குறைகள் இருக்கும் அதை நினைத்து வருத்தபடுவது உண்டு. வருத்தபடுவதால் எந்த மாற்றமும் நிகழப்போதில்லை.

அந்த குறையை நமது பலமாக மாற்ற என்ன செய்யலாம் என்று எண்ணி அதை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்…