- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

மனம் மாறினால் குணம் மாறலாம்!

images [1]உலகம் ஒன்றுதான். ஆனால், அதே உலகம் ஒருவருக்கு நரகமாகவும், மற்றவர்களுக்கு சொர்க்கமாகவும் தெரிகிறது  என்ர்சன்.

நமக்குப் பிடித்தவை எல்லாம் பிறருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒருவரது உணவு இன்னொருவருக்கு விஷமாகி விடுகிறது.

இன ரீதியாக, மதம் மற்றும் மொழி வகையில் அவரவர் சார்ந்த விஷயங்கள் தான் மிகவும் உயர்ந்தவை. மற்றவைகள் எல்லாம் அதற்கும் கீழே தான் என்று எண்ணுகிறோம். எல்லோருமே தங்களது அடையாளங்களை பேணிக்காக்கத் துடிக்கிறார்கள். ஒத்த எண்ணங்கள் நம்பிக்ன்ப்ப்ள், மதிப்புகள் கொண்டவர்களாக எல்லாம் ஒருங்கிணைந்து பல்வேறு குழுக்களாக செயல்படுகிறார்கள்.

சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் இனிப்பான அனுபங்களின் அடிப்படையில் எந்த ஒன்றின் மீதும் அளவற்றவெறுப்போ, விருப்பமோ இயல்பாகவே அமைந்து விடுகிறது. அந்த மதிப்பீட்டுத் தளத்திலிருந்து எளிதில் எவரும் வெளியே வர விரும்புவதில்லை.

இவற்றுக்கெல்லாம் அடித்தளமாக அமைவது எது…? அவரு மனப்பான்மை என்ற மனோநிலை தான்…

மனப்பான்மை என்றால் பிறரிடம் உங்கள் மனோநிலையை தெரிவிப்பதுதான். ஏதேனும் ஒன்றைப் பற்றியோ, யாரோ ஒருவரைப் பற்றியோ நாம் கொண்டுள்ள தீர்மானம். நம்பிக்கை, மதிப்பீடு அல்லது அபிப்ராயம் தான் மனப்பான்மை என்பது. அந்த தீர்மானம் சாதகமாகவோ, சாதகமற்றதாகவோ அல்லது நடுநிலையாகவோ அமையக்கூடும்.

உன் மீதும், இந்த உலகத்தின் மீதும் நீ கொண்டுள்ள  நம்பிக்கைகள் உனது எதிர்பார்பினை  உருவாக்குகின்றன. உங்கள் எதிர்பார்ப்புகள் உங்களின் மனோபாவத்தை முடிவு செய்கின்றன. உங்கள் மனோபாவம் பிறரிடம் நீ நடந்து கொள்ளும் முறைமற்றும் நடத்தையினை உருவாக்குகிறது.

உங்கள் நடத்தை உங்கள்மீது பிறர் கொள்ளும் மனப்பான்மையை தீர்மானிக்கின்றன. மொத்ததில் நீங்கள் ஒரு வெறும் முகம் பார்க்கின்றகண்ணாடி போன்றவரே. உங்களின் செயல்களெல்லாம் எதிர் செயல்பாடுகள் தானாகவே வந்து சேரும்.

மனப்பான்மை என்பது பழகி விட்ட எண்ணங்களின் தொகுப்புதான். பழக்கங்கள் என்பவை பிறரிடமிருந்து பெறப்படுபவவை. திரும்ப திரும்ப செய்யப்படும் செயல்களே நாளடைவில் இறுகி மனப்பான்மைகளாகி விடுகின்றன.  பால் மேயர்.

ஒரு பெரிய மாற்றத்தினை உருவாக்கவல்ல ஒரு சிறிய விஷயமே மனப்பான்மை  சர்ச்சில்

நமக்கு விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை விரும்பி விடுவது புத்திசாலித்தனம் அல்லவா…?

பிரச்சனைகளில் வாய்ப்புகளைக் காண்பவன் நேர்மறைசிந்தனையாளன். மாறாக வாய்ப்புகளில் பிரச்சினைகளை காண்பவன் எதிர்மறைசிந்தனையாளன்.

வெங்கடேஸ்வரன்.S