- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

நகத்தில் அகம் பார்க்கலாம்!

[1]    [2]  நகத்தில் வெண்மையான அரை நிலவின் தோற்றம் தென்படுவது தைராய்டும் செரிமானமும் நலமாக இருப்பதன் அறிகுறி.

[3]நகத்தில் இருண்ட வரி இருந்தால் அல்லது நகமே இருண்டு இருந்தால், அது மெலனோமா என்ற தோல் புற்றுநோய்க்கான அறிகுறி.

[4]நகம் வளைந்திருந்தால் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B 12 குறைபாடு இருக்கலாம்.

[5]அரை நிலவு வடிவம் தெரியாமல் இருந்தால், அது தைராய்டு பிரச்னை இருப்பதன் அறிகுறி. இது மனச்சோர்வு, மனநிலை மாற்றம், எடை அதிகரித்தல், அடர்த்திக் குறைவான முடி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

[6]மிகச்சிறிய பிறை வடிவம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதையும் அஜீரணத்தையும் குறிக்கும். வளர்சிதை மாற்றமும், உடலில் நச்சுப்பொருள்களின் தேக்கமும் இதற்கான காரணங்கள்.

[7]நகத்தில் வெடிப்பு, பிளவுபட்ட நகங்கள் இருந்தால் தோல் நோய்க்கான அறிகுறி.

[8]நகங்களில் வெள்ளைப்புள்ளிகள் தெரிவது, வைட்டமின் குறைபாடு அல்லது அலர்ஜியின் அறிகுறி.

[9]மிகவும் வெண்மையான நகம், மஞ்சள் நகம் ஆகியவை ஹெபடைட்டிஸ், மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள்.

[10]வெளிறிய நிறமுடைய பிறை தெரிந்தால் சர்க்கரை நோய் இருப்பதைக் குறிக்கும். மஞ்சள் நிற நகம் பூஞ்சைத்தொற்றைக் குறிக்கும். [11]

அரை நிலவு வடிவத்தைச் சுற்றி நீல நிறம் இருப்பது, நுரையீரல் அல்லது சுவாசப் பிரச்னைகள் இருப்பதைக் குறிக்கும். உள்ளுறுப்புகளுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால் நகங்கள் இப்படி மாறும்.

நன்றி விகடன்- அகில் குமார்