Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2018
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,875 முறை படிக்கப்பட்டுள்ளது!

மைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா?

 

நம்ம வீட்ல எதையாவது ஒரு பொருளைத் தொலைச்சுட்டு தேடும்போது, அந்த பொருள் கிடைக்கவே கிடைக்காது. ஆனால், அதுக்கு முன்னாடி தொலைஞ்சுபோன பொருள் கரெக்டா நம்ம கையில கிடைச்சுரும். அதே மாதிரி, நம்ம விஞ்ஞானிகள் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கும்போது, அத கண்டுபிடிக்கிறதுக்குப் பதிலா வேற ஒன்னை கண்டுபிடிச்சிருப்பாங்க. அப்படி அவங்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்த கண்டுபிடிப்புகள் என்னென்னனு பார்க்கலாமா?

மைக்ரோவேவ் ஒவேன் கண்டுபிடிப்புகள்

மைக்ரோவேவ் ஒவன், இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பொருள்தான். வீட்ல இல்லைனாலும், பக்கத்துல ஏதாவது ஒரு பேக்கரிக்குப் போனா இதைக் கண்டிப்பா பார்க்கலாம். லாக்கர் பெட்டி மாதிரி ஒரு பெட்டிய ஓரமா வெச்சிருப்பாங்க. அதாங்க, கடைக்குப் போய் பப்ஸ் கேட்டா, ஆறிப்போன பப்ஸை ஒரு பெட்டில வச்சு சூடு பண்ணித் தருவாங்களே அதுதான் மைக்ரோவேவ் ஒவன். இதை பெர்சி ஸ்பென்சர் 1945-ம் ஆண்டு கண்டுபிடிச்சாரு. இந்தப் பெட்டிய ஸ்பென்சர் கண்டுபிடிச்சது ஒரு தனிக்கதை. ஸ்பென்சர் ஒருநாள், காந்தக்கதிர்களுக்கு நடுவுல வேலை செஞ்சுட்டு இருந்தாரு. அப்ப, அவர் சாப்பிடலாம்னு ஆசையா பாக்கெட்ல வாங்கி வச்சிருந்த சாக்லெட் உருகிப்போச்சு. அது எப்பிடி உருகிப்போச்சுன்னு ஆராய்ந்துதான் இந்த மைக்ரோவேவ் ஒவனை ஸ்பென்சர் கண்டுபிடிச்சாரு. ஸ்பென்சர் உருவாக்கின அந்த மைக்ரோவேவ் ஒவன்ல அவர் முதன் முதலா செஞ்சது என்ன தெரியுமா? பாப்கார்ன்!

பேஸ்மேக்கர்


சீராக இல்லாத இதயத்துடிப்பை சீராக்குற ஒரு கருவிதான் பேஸ்மேக்கர், இதை வில்சன் கிரேட்பேட்ச் எப்படிக் கண்டுபிடிச்சாருனு தெரியுமா? நம்ம எல்லாருமே தப்பு பண்ணுவோம். அடுத்த முறை அந்தத் தப்பை திருத்திக்குவோம். ஆனால், இவர் பண்ண தப்பே ஒரு கண்டுபிடிப்பாயிருச்சு. புரியலையா? அதாவது, கிரேட்பேட்ச் இதயத்துடிப்பு குறைஞ்சதுன்னா அதை உடனே அதிகமாக்குற மாதிரி ஒரு கருவியை உருவாக்க முயற்சி செஞ்சுட்டு இருந்தாரு. ஆனால், இவர் எங்கேயோ தப்பா சொருகுன ஒரு சிப் இந்த கருவிக்கு உயிர் குடுத்துருச்சு. இதயத்துடிப்பைச் சீராக்கும் கருவியும் உருவாச்சு.

சாக்கரின்


சாக்கரின்னா வேற ஒன்னுமில்லைங்க, சர்க்கரை மாதிரியே இருக்கும். இனிப்பு அதிகமாக்க பயன்படுத்துற ஒரு வேதிப்பொருள். இன்னும் தெளிவா சொல்லனும்னா இனிப்புல இனிப்பை அதிமாக்குற இனிப்புச் சுவைகூட்டி. இதைக் கண்டுபிடிச்சது, கான்ஸ்டன்டின் ஃபால்பெர்க் என்கிற வேதியியலாளர். இவரோட நண்பரான இரா ரெம்சென் கூட, ஆய்வகத்துல வேலை செஞ்சுட்டு இரண்டு பேரும் சாப்பிடப் போயிருக்காங்க. அப்ப ஃபால்பெர்க் கையைக் கழுவாம சாப்பிட்டிருக்காரு. சாதாரணமா, வேதியியலாளர்கள், வேலை பார்த்ததுக்கப்புறம்  கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கெமிக்கல்களால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புண்டு. சில நேரங்களில் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம். ஆனால், இவருக்கு ஏதோ நல்ல நேரம்போல. இவரு கையில எடுத்து சாப்பிட்ட பிஸ்கட் ரொம்ப இனிப்பா இருந்திருக்கு. என்னடானு யோசிச்சுப் பார்த்தப்ப தான், இந்த வேதிப்பொருளைக் கண்டுபிடிச்சாங்க. இந்த வேதிப்பொருளை அதிகமா எடுத்துக்கிட்டா கேன்சர் வரும்னும் பேசிக்கிறாங்க.

எக்ஸ்-ரே


இப்ப நம்ம கையில அடிபட்டாலோ கால்ல அடிபட்டாலோ எலும்பு ஒடஞ்சுருச்சானு உடனே எக்ஸ்-ரே எடுத்து பாக்குறோம்னா அதுக்கு நாம நன்றி சொல்ல வேண்டியது வில்ஹெல்ம் ரோன்டன்-க்குத்தான். ஒரு நாள் இவர் கேத்தோடு கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்கும்போதுதான் இந்த  எக்ஸ்-ரே பிறந்தது. ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்கும்போது அங்க பக்கத்துல ஒரு பேரியம் ப்லாடினோசைனைடு தகடு இருந்துச்சு. அந்தத் தகடுல அப்ப அவர் பார்த்ததை அவர் கண்களாலேயே நம்ப முடியல. அந்தத் தகடுல, அவர் கையோட எலும்பு அச்சுப்  பதிஞ்சிருந்தது. அதுதான் உலகில் எடுக்கப்பட்ட முதல் எக்ஸ்-ரே.

வெல்க்ரோ


இந்தப் பெல்ட் வச்ச செருப்புல எல்லாம் சரக் சரக்னு ஒன்ன பிரிச்சு ஒட்டுவோமே அதுதான் வெல்க்ரோ. இதை  சுவிஸ் இன்ஜினீயர், ஜார்ஜ்ஸ் டீ மெஸ்ட்ரல் எப்படி கண்டுபிடிச்சார்னு தெரியுமா?  ஒரு நாள், அவரும் அவர் நாயும் காட்டுக்குள்ள பயணம் போயிருக்காங்க. அப்ப ஒரு செடி இவரோட பேன்ட்லையும், நாயோட முடியிலையும் ஒட்டிக்கிச்சு. அதைப் பார்த்துதான் இந்த வெல்க்ரோவை கண்டுபிடிச்சிருக்காரு மெஸ்ட்ரல். நம்ம இப்ப பாக்கெட் வச்ச வெல்க்ரோ வேட்டி கட்டுறோம்னா அதுக்கு இவர்தான் காரணம். நீங்க வெல்க்ரோ வேட்டி கட்டுறீங்கன்னா, இவருக்கு நன்றி சொல்லுங்க மக்களே!

நன்றி: விகடன்