- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

புளி சாறு குடித்தால் இவ்வளவு நன்மை இருக்கா?

புளிப்புச் சுவையைக்கொண்டிருந்தாலும் அமிர்தத்தின் சுவையைப் பிரதிபலிக்கும் உணவுக்கருவி புளி. சுவையின் பெயரிலேயே காரணப் பெயரைக் கொண்டிருக்கும் `புளி’ அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒன்றாகும்.

புளியைப் பற்றி நினைத்ததும் நாவில் எச்சில் சுரப்பதற்கு, புளிப்புத் தன்மையுடைய ‘டார்டாரிக் அமிலம்’ அதிகளவில் குடியிருப்பதே காரணம். சுண்ணாம்புச் சத்து, ரிபோஃப்ளாவின், நியாசின், தயாமின் என அத்தியாவசிய நுண்ணூட்டங்கள் புளியில் நிறைந்துள்ளன.

புளிகரைசல்

புளி அதன் சாறு வடிவில் உட்கொண்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் –

சருமத்திற்கு

புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். புளிச்சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

இதய நோய்

தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கும் வல்லமை புளியின் ஜூஸில் இருப்பதாக `நியூட்ரிஷனல் ரிசர்ச்’ ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. விலங்குகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில், குடல் புற்று செல்களின் வளர்ச்சியைப் புளி தடுப்பது தெரியவந்தது.

செரிமானத்திற்கு

இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே, செரிமான அமைப்பு பிரச்சினைகள் உள்ளவர்கள் அதை உட்கொள்ள வேண்டும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு, செரிமானம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

குடலை சுத்தம் செய்ய

புளி சாறு குடலில் இருக்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும். நார்ச்சத்து நிறைந்த, புளி உங்களை சில மணி நேரம் முழுதாக உணர வைக்கும். மேலும் உங்கள் உடலை உள்ளே இருக்கும் கொழுப்புகளை சுத்தம் செய்ய உதவும்.

புளி சாறு செய்யும் முறை –

இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உடல் எடை மிக விரைவாக குறையும். 

நன்றி: ஐபிசி தமிழ்நாடு