- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

முரண்படும் வழிகேடுகள்

நபிகளாரின் வழிகாட்டல் எப்போதும் முரண்படாது. அதற்கு மாற்றமான வழிகேடர்களான ஷியா, ஜஹ்மியாக்கள், முஃதசிலாக்கள் போன்றோர்களின் வழி முரண்கள் பல இருக்கும்.

ஷியாக்களுக்கு நபி ஸல் அவர்களுடைய சில உறவினர்கள் மட்டுமே பிடிக்கும். மற்றவர்களை கேவலமாக பேசுவார்கள். உதாரணமாக நமது தாயாகிய ஆயிஸா ரழி அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. இந்த சமுதாயத்தில் நபிகளாருக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ளவர்களான அபூபக்கர் ரழி அதற்கடுத்த உமர் ரழி ஆகியோர்களை சிலைகள் என்று கேவலமாகப் பேசுவர். நபிகளாருடைய மற்ற வாரிசுகளையோ அவர்களது உறவினர்களை விட்டு விட்டு அலி ரழி, பாத்திமா நாயகி அவர்களின் குடும்பத்தாரை மட்டுமே உயர்வாக கொள்வர். அவர்கள் அலி ரழி அவர்களின் மீது அல்லாஹ் இறங்கியதாகவும், அல்லாஹ்விற்கு முடிவெடுத்த பின் அதை விட இது சிறந்தது என்று மாற்றுவான் என்று நம்புவார்கள்.

சரி இந்த ஷியா பிரிவை உருவாக்கியது அலி ரழியா? இல்லை. மாறாக அவர்கள் இந்த கொள்கைவாதிகளை வெறுத்தார்கள் கண்டித்தார்கள் அடக்கினார்கள். அது அப்துல்லாஹ் பின் சபா என்ற யூதனால் ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் சகாபாக்களை திட்டுவதும் அல்லாஹ்வுடைய குணங்களில் பலவற்றை அவர்கள் இஷ்டப்படி வைத்துக்கொண்டு 12 இமாம்கள் மட்டுமே நேர்வழி பெற்றவர்கள் என்ற கருத்தையும் கொண்டவர்கள்.

சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் பல ஊடுருவல்களை நுழைத்தனர். ஈரானியர்கள் இத்னா அஷரிய்யா (12) கொள்கையுடையவர்கள். அங்கே அதிமானவர்கள் ஷியாக்கள். எங்களுக்குத் தெரியாதா என்று சொல்பவர்கள் சிந்திப்பதற்கு…..

70 மற்றும் 80 களுக்கு முன்பு நமது உலமாக்கள் பலர் உருது மற்றும் பார்சி மொழி படிப்பதை ஊக்குவித்தனர். காரணம் அதிகமான மார்க்க புத்தகங்கள் அங்கே தான் உள்ளதாகச் சொன்னார்கள். ஆக பல ஆலிம்கள் இஸ்லாமிய மார்க்க புத்தகங்கள் என்று நினைத்தார்கள். ஆனால் அவற்றில் பல புத்தகங்கள் ஷியா கொள்கையை கலந்து விடப்பட்ட புத்தகங்களாகும். உதாரணமாக 70,80 களில் இரஷ்யாவிலிருந்து பல தமிழ் புத்தகங்கள் இலவசமாக கிடைக்கும். நானே பெற்று இருக்கிறேன். ஏன் இதைச் செய்தார்கள் அவர்கள் கொள்கையைப் பரப்பத் தான்.

நமது மொகலாய மன்னர்களும் அங்கே இருந்து வந்தவர்கள்… பல புத்தகங்கள் உருதுவில் மொழி பெயர்க்கப்பட்டன். இவைகள் மதரஸாக்களில் சேர்க்கப்பட்டன். இந்த கொள்கைகளில் பல நம்மிடம் கலந்தன.

ஷியாக்கள் கொண்டாடும் பஞ்சா (ஜந்து விரல்கள்) நமது வீடுகளில் பிரேம் செய்யப்பட்டு தொங்கின. ஜகுபர் சாதிக் மெளலிது போன்றனவும் உதாரணம். ஜகுபர் சாதிக் என்பவர் யார் என்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் ஒரு சிறந்த மேதை. ஹுசைன் ரழி அவர்களின் மகனார். ஆனால் ஷியாக்களுக்கு 6வது இமாம் ஆகும். அவர்கள் கொள்கை வேறு … ஷியாக்களின் கொள்கை வேறு. இப்படித்தான் ஹசன் பசரி (ரஹ்), முகையித்தீன் அப்துல் காதிர் ஜிலானி போன்றோர்களை வழி கெட்ட கூட்டத்தினர் அவர்களின் கொள்கைக்கு மாறாக பல பொய் சரித்திரங்களைச் சோ்த்து தன் கூட்டத்தில் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்த வழி கெட்ட கூட்டம் சுன்னத் ஜமாத்தில் சேர்ந்து பல புதியனவற்றை புகுத்தின. அவற்றில் … அர்வாஹ்களுக்கு (ஆவிகளுக்கு) படைத்தல் (உதாரணம் மூதாக்கா சோறு), இறந்த தினத்தில் சாதம் படைத்தல் – வருஷ கத்தம், இப்படி பல.

பிறந்த தினம் கொண்டாடுவது சுன்னத்து அல்ல. நமது மார்க்கத்தில் 2 பெருநாள் தவிர வேறு இல்லை. எனவே மார்க்கம் பூர்த்தியான நாளை நாம் கொண்டாடவில்லை. அன்று யூதர்கள் “அந்த ஆயத்து வந்து இறங்கிய தினத்தை நாங்கள் கொண்டாடியிருப்போம்” என்றனர். நபிகளார் இது போன்றவற்றுக்கு முக்கியம் கொடுக்கவில்லை. மாறாக யூதர்கள் மூஸா அலை மற்றும் அவர்களது கூட்டத்தினர் காப்பாற்றப்பட்ட நாளை கொண்டாடியதை நமக்கு ஆசுரா நோன்பாக ஆக்கினார்கள. இது மார்க்கம். இதை பின்னால் வந்த ஷியாக்கள் துக்க நாளாக மாற்றினர். நம்மிலும் பலர் இன்றும் துக்க நாளாக கொண்டாடுவதைப் பார்க்கலாம். இப்படித் தான் மார்க்கத்தில் இல்லாத அடுத்தவர்களின் வழிகேடுகள் மார்க்கம் என்ற பெயரில் நம்மில் புகுந்தன. உதாரணங்கள்…

நபிகளாரின் இறந்த தினம் ரபி அவ்வல் 12 ஆனால் பிறந்த தினம் – பல கருத்து வேறுபாடு உள்ளதன. (காரணம் அதற்கு முன்பு உள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை). இறந்த தினம் – காரணம் அப்போது நபிகளார் பல நாடுகளில் வியந்து பார்க்கப்பட்ட காலம்.

மீலாது இறந்த தினத்தில் விழா கொண்டாடப்படுகிறது. (இந்துக்களின் பழக்கம் – ஷியாக்களின் வழிகேடு)
முகையத்தீன் ஆண்டகை மௌலிது மற்றும் சிறப்பு தினம் – இந்துக்களின் பழக்கத்தில் இறந்த தினத்தில்
முகைதீன் அப்பா விசேஷம் மற்றும் பெரிய ஆலிம்ஷா ஞாபகர்த்த தினம் – இறந்த தினத்தில்

இதனால் தான் அபூக்கர் ரழி, உமர் ரழி, உதுமான் ரழி, அலி ரழி மற்றும் எத்தணையோ சிறந்த சகாபாக்கள் மறக்கடிக்கப்பட்டோம். ஏன் நபிகளாரைச் சந்தித்து இராத ஒருவரைப் பாராட்டி, உமர் ரழி அவர்களே அந்த பெரியாரிடம் தனக்காக அல்லாஹ்விடம் பாவம் மன்னிப்ப கேட்கச் சொன்னார்களே! அவர்கள் எங்கே? இவர்களது சரித்திரம் பேசுகிறோமா? இல்லை கத்தம் பாத்திஹா மௌலிது உண்டா? உறுதியாக நல்லவர்கள் சுவர்க்கவாதி என்று தெரிந்தவர்களை விட்டு யார் யாரையோ கூப்பிடுகிறோமே இது ஞாயமா?

உதாரணமாக முகையித்தீன் அப்துல் காதிர் ஜிலானி ரஹ் அவர்கள் பொருட்டால் என்று துவா கேட்கிறோமே???? அவருக்கு உங்களை நன்றாக தெரியுமா அல்லது அல்லாஹ்விற்கா? அறிமுகமானவருக்கு அறிமுகமில்லாதவர் எப்படி வசீலா?
சரி.. அல்லாஹ் உங்களது துவாவை ஏற்க மாட்டான் என்று முடிவு சொன்னது யார்? அப்படி ஒரு முஸ்லிம் நம்பினால் முடிவு என்ன? கருணையாளனுக்கெல்லாம் கருணையாளன் அவன் கண்ணுக்குப் புலணாகதவற்றுக்கும் உணவு அளிக்கின்றான். கேட்கத் தெரியாத அறியாத பச்சிளம் குழந்தைகளும் அருள் புரிகிறான் நாமோ நம்பிக்கை இழந்து தெரியாத அவ்லியா (உங்களுக்கு அவரைப்பற்றித் தெரியாது, அவருக்கம் உங்களைத் தெரியாது. அவர் அவ்லியா தானா என்று அல்லாஹ் மட்டும் அறிந்த ரகசியத்தை – அல்லாஹ்வின் உரிமையில் தலையிட்டு நீங்களாகவே அல்லாஹ்விற்கு சொல்லிக் கொடுப்பது) மீது நம்பிக்கை வைப்பது தவறு இல்லையா?

நபியின் வழிகாட்டல் சிந்திக்கக் கூயடிவைகள்
வழிகேடுகள் – நமமைப் பார்த்து சிரிக்கக்கூடியவைகள்

திருந்துவோம் . நபி மட்டும் தான் நமது வழிகாட்டி. அந்த வழி நமக்குப் போதும். வேறு புதிய வழிகள் வேண்டாமே.