Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,910 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோளை விழுங்கும் சூரியன்

ஆச்சரியமாக உள்ளதா?. ஆம்! இது உண்மைதான். நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ளது வாஸ்ப் 12-பி {Wasp 12B) எனப் பெயரிடப்பட்டிருக்கும் கோள். இக்கோளை அதன் தாய்ச் சூரியன் வாஸ்ப்-12 படிப்படியாக விழுங்கி வருவதாகவும், இதன் வாழ்வுக்காலம் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகள் தான் எனவும் நாசா கூறியுள்ளது.

ஆச்சரியங்கள் மிகுந்துள்ள இக்கோளை பற்றிய சில செயதிகள் இதோ!

இக்கோள் நம்மிலிருந்து 1200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கொண்டு அதில் இருந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,821 முறை படிக்கப்பட்டுள்ளது!

இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி

தமிழகத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அடிப்படைக் கல்வி மட்டுமே படிக்க முடிந்தாலும் தன் பேரறிவாலும், உழைப்பாலும் எண்ணற்ற சாதனைகள் புரிந்து பிற்காலத்தில் ‘இந்தியாவின் எடிசன்’ என்றழைக்கப்பட்ட பெருமையை உடையவர் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) (1893-1974). இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் வாகனத்தைத் தயாரித்த பெருமை உடையவர் இவர். உலகத் தரம் வாய்ந்த முதல் மின் சவரக் கத்தி, ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ, ஓட்டுப் பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, பழரசம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 14,159 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்

குர்ஆன் கூறும் கருவியல்: – தொடர்-1 ஆண் அல்லது பெண் குழந்தை – ஆணின் உயிரணுவே காரணம்

“இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல் குர்ஆன் 53:45-46)

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)

ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,739 முறை படிக்கப்பட்டுள்ளது!

பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே

“நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)

“மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,983 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாம்புகள் பல விதம்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் பாம்பு தைப்பான் (inland taipan) ஆகும். நச்சுப்பாம்புகளுள் மிகக் கொடியது இது. இந்தப் பாம்பின் நச்சுச் சுரப்பியில் எப்போதும் மிகக் குறைந்த அளவு நஞ்சுதான் (0.1 g) இருக்கும். ஆனால் இந்தக் குறைந்த அளவு நஞ்சு மனிதர்கள் ஐம்பது பேரைக் கொல்லப் போதுமானது ஆகும். (இரண்டு நூறாயிரம் எலிகளைக் கொல்ல வல்லது இந்த அளவு நஞ்சு.)

ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் வாழும் கறுப்பு மம்பா (black mamba) உலகின் மிக விரைவான பாம்பு. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,403 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்

பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலுக்கு மாற்றாக, செயற்கை பெட்ரோலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,769 முறை படிக்கப்பட்டுள்ளது!

நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்!

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக் காரணமாகும்.

1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,647 முறை படிக்கப்பட்டுள்ளது!

வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்!

சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

சூரியக் குடும்பத்தின் ஆற்றல் (Energy of Solar system) இரும்பை உறுவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு இந்த சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப்போல நான்கு மடங்கு ஆற்றல் (Four . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,932 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!

ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.

ஏனென்றால், ‘சஃபீனத்-அஸ்-ஸஹாரா ‘ என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?” என்றால்… அரபிகள் முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. ‘கடலுக்கு கப்பல்பிரயாணம் – பாலைக்கு ஒட்டகபிரயாணம்’ என்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,955 முறை படிக்கப்பட்டுள்ளது!

தனியே ஒரு குரல்

பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,752 முறை படிக்கப்பட்டுள்ளது!

செல் போன் நோய்கள் தருமா?

நவீன விஞ்ஞான அற்புதங்களில் ஒன்று செல் போன் என்றழைக்கப்படும் அலை பேசி. ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருக்கும் மனிதரைத் தொடர்பு கொண்டு பேச முடிவது என்பது விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றமே. இங்கு இடைவெளிகள் பெரிய பிரச்னையே அல்ல. உலகத்தில் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் பேச முடியும், பயணம் செய்து கொண்டே பேச முடியும் என்பதெல்லாம் அவசரத் தேவைக்கு உடனடியாக பேச நினைப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் விஷயங்கள்.

ஏழை, செல்வந்தன் என்ற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,856 முறை படிக்கப்பட்டுள்ளது!

அல்குர்ஆன் அற்புதம் – AV

மௌலவி எம். முஜிபுர் ரஹ்மான் உமரீ அவர்கள் 01-10-2010 அன்று இஸ்லாமிய வழிகாட்டி மையம்,- குவைத் ஏற்பாட்டில், சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத்தில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்பதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். வாசகர்கள் அந்த உரையினை வீடியோ – ஆடியோ வழியில் கேட்க / டெளன்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. நன்றி: சுவனத்தென்றல்.காம் . . . → தொடர்ந்து படிக்க..