Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,789 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுதந்திரமா, பெண்ணுக்கா?

உலகத்தின் பெண்சுதந்திரம் உலகமும், இந்தியாவும் கண்ட பெண் சுதந்திரம் என்ன சுதந்திரமாம்? கண்ணும் , மனதும் கூசும் பள்ளியிலே ஆரம்பிக்கிறது பெண் குழந்தைகளின் சுதந்திரம், அருவருப்பான பாடலுக்கு ஒரு ஆட்டம் கேட்டால் பள்ளி இறுதி கொண்டாட்டம்!

மாநிலத்தில் அழகி போட்டி! உலகளவில் ஒரு அழகி போட்டி! பெண்ணின் அங்கங்களை அளந்து ஒரு பூனை நடை! ஒரு எலி நடை! பெண்களின் உடலை மதிப்பிட்டு மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க வக்கிரம் கொண்ட ஆண்கள் புடை சூழ – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,671 முறை படிக்கப்பட்டுள்ளது!

வீடியோப் போஸ்..

வெட்கத்தைப் படம்பிடித்துக் காட்ட; பெண்கள் கூட்டத்தில் வெளிச்சம் போட்டுச் சிரித்துக்கொண்டே வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே; வெட்கத்தை வெளியேற்றிக் கொண்டே; முகம் காட்டும் அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம் மணவாளனுக்காக; வாசம் வீசுவதற்கு முன்னே; ரசித்து எடுக்க வீடியோக்காரன் மணவாளியின் அறையில்; குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்; ஒதுங்கிக் கிடக்கும் முந்தாணியும் தப்பாமல் ஓரக்கண்ணின் ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த உறவுகளை விழிகளில் அடைக்க; திருமண வீடியோக்கள்; வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்; அனைவரும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,765 முறை படிக்கப்பட்டுள்ளது!

அப்பா..! எனக்கு கல்யாணம்..!

பகட்டான வாழ்க்கை..தேடி பணம் எனும் காகிதம் சேகரிக்க.. பாசத்தை அடகு வைத்து… பாரினில் வந்து சேர்ந்தேன்.. மழலை மனம் மாறா மகனை விட்டு..வந்து சேர வாங்கிய பணத்தின் வட்டி கட்ட வருடம் ஒன்றானது.. முழுக்கடன் முழுதாய் தீர்க்க.. முழுவதும் எனை அடகு வைத்தேன். வேலையைப் புதுப்பிக்கின்ற சாக்கில்.அன்பு மனைவியோடு.. அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து தொலைந்து போனது..இளமை… அவள் துயரம் அறிந்தும்… அருகில் இல்லாமல்..மனதை கல்லாக்கி மண்ணாகி போனேன். அல்லும்பகலும் அயராது உழைத்து இதயமும் இரும்பாகிப் போனது.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,455 முறை படிக்கப்பட்டுள்ளது!

பறக்க எத்தனிக்காத பறவை

பறக்க எத்தனிக்காத பறவை திண்ணையில் எனது கவிதைதானும் பறக்க இயலும் என்பதை மறந்தே போனது அது.இறக்கை என்ற ஒன்றை எதற்கென நினைத்து விரித்துக்கூட பார்க்கவில்லை அதுகிடைத்தவற்றைக் கிளறிக்கொண்டிருப்பதிலேயே சுகம் கொண்டது அது.பாதுகாப்பான சூழலில் இருப்பதாகக் கருதிக்கொண்டு நாட்களைக் கடத்துவதிலேயே மரத்துப்போனது அது.

சோம்பிக்கிடப்பதே சுகம் எனக்கொண்டது அது.

கூண்டு விட்டுக் கூண்டு செல்லும் இட மாற்றங்களை மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டது அது.

கால்கள் உடைந்தும் சிறகுகள் முறிந்ததுமான தோழி தோழர்களைக் கொண்டதுமாக அங்குமிங்கும் அலைந்து கொண்டேயிருந்தது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,487 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெளி நாட்டு கைக்குட்டை

வத்திய மேனியும் நெற்றியில் வியர்வையுமாக இங்கே நான்!

கருகிப்போன கனவுகளுடன் விட்டு வந்த சொந்தங்களுக்கு இன்னும் நான் விடுகதையாய்!!

கூழோ! கஞ்சியோ! குடிக்கும் போது நீ வேண்டும்; என எத்தனை முறை சொன்னாலும் நீ; மூட்டை முடிச்சுடன் மூட்டைப் பூச்சிகளுடந்தான் இங்கே நான்!!

பட்டதுப் போதும் கட்டியவள் அங்கே – என காட்சிகள் சாட்சிகள் சொன்னாலும்; முகெலும்பை ஒடிக்கும் கடன் மட்டுமே கண் முன்னாடி!!

பணம் தேடும் பந்தயத்தில் பணயமாக நீ மட்டுமே!! விடைக் கிடைத்தால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,871 முறை படிக்கப்பட்டுள்ளது!

தாய்மை

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவளம் சோற்றை கூட – அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..! எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விட பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?

இறைவனின் வல்லமைக்கு இதனை விட சான்று வேண்டுமா..? இது பெண்மையின் மறுபிறவி…! பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,026 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாம் யார்?

வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள்!வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள்!சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள்!

நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள்!

தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள்!

கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்!

ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள்!

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,765 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு கண்ணாடி அகம் காட்டுகிறது

உணவுக்குப் பஞ்சமில்லை. உடுப்புகளும் குறைவில்லை. உறைவிடமோ ஒரு பிரச்னையில்லை. முக்கால்வாசி உலகத்தாரினும் மேலானவன் நீ – மிகையில்லை.வங்கியில் கணக்குண்டு வார்கச்சையிலும் இருப்புண்டு சில்லறை செலவுகளுக்கோ சஞ்சலங்கள் ஒருபோதுமில்லை! சிறிய அந்த செல்வந்த உலகினில் செல்லத்தக்க உறுப்பினர் தான் நீ..!அதிகாலை விழிக்கின்றாய் ஆரோக்யம் உணர்கின்றாய்! ஆசிர்வதிக்கப்பட்டவனல்லவா நீ இந்த வாரம் இல்லாமல் போன ஒரு பத்து இலட்சம் பேரினும்!

யுத்த முகம் கண்டதில்லை இரத்த ஓலம் கேட்டதில்லை! பட்டினிப்பெருங்கொடுமை பரிதவிப்பின் பெருந்துயரம் பாதித்ததில்லை உன்னை! பாதி உலகின் . . . → தொடர்ந்து படிக்க..