Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,816 முறை படிக்கப்பட்டுள்ளது!

இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி

தமிழகத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அடிப்படைக் கல்வி மட்டுமே படிக்க முடிந்தாலும் தன் பேரறிவாலும், உழைப்பாலும் எண்ணற்ற சாதனைகள் புரிந்து பிற்காலத்தில் ‘இந்தியாவின் எடிசன்’ என்றழைக்கப்பட்ட பெருமையை உடையவர் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) (1893-1974). இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் வாகனத்தைத் தயாரித்த பெருமை உடையவர் இவர். உலகத் தரம் வாய்ந்த முதல் மின் சவரக் கத்தி, ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ, ஓட்டுப் பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, பழரசம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,169 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாரிசுப்போட்டி

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 7

‘சசிவர்ணத்தேவரையும் கடம்பனையும் பொட்டல் வெளியில் திண்டாட விட்டு விட்டு இந்த சுற்றுலா அவசியம் தானா?’ என்று வாசகர்கள் கேட்கலாம்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது வாசகர்களின் கேள்வியில் நியாயம் இருப்பது தெளிவாகவே தெரிகிறது.

ஆனால் இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்த பின்னர் தான் இந்த சுற்றுலா எத்துணை முக்கியமானது என்பது புரியும்.

இந்த கதை ஆரம்பமாகும் 11ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து 12ஆம் நூற்றாண்டின் இறுதி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,487 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 4

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 6

சீனத்துப்பட்டு, பீங்கான், சாவகத்தீவின் வாசனைப்பொருட்கள், சிங்களத்தீவின் தேயிலை, பாக்கு மற்றும் நறுமணப்பொருட்கள்!

கண்ணைக்கவரும் வண்ண வண்ணக்கைவினைப்பொருட்கள்! முற்றிலும் அவர் எதிர்பார்த்திராத அபூர்வப்பொருட்கள்.

இவ்வளவு பொருட்களையும் எதற்காக இந்தக்குடிசைக்குள் வைத்திருக்கறீர்கள்? என்று தேவரைப்பார்த்துக்கேட்டார்.

‘விற்பதற்கு’ ஒரே வார்த்தையில் பதில் வந்தது.

‘நானே வாங்கிக்கொள்கிறேன்’.

சரக்குப்பொதிகள் அனைத்தும் செட்டியாரின் சரக்கு உட்பட பிரித்துப்பார்த்து அரபு வியாபாரி வாங்கிக்கொண்டார். இந்த பேரத்தில் தேவர் வகைக்கு நல்ல இலாபம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,286 முறை படிக்கப்பட்டுள்ளது!

காமராஜர் வாழ்க்கையில் சில‌..

காமராஜ் காரை நிறுத்திய காவலரின் கதி!!!

1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” காமராஜ்.

“ஐயா, இது முதலமைச்சர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,815 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 3

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 5

அழகன்குளம் சென்ற குழு கையிலிருப்புச் சரக்குகளை விற்று விட்டு, புதிய சரக்குகள் கொள்முதல் செய்து ஆரவாரத்துடன் வந்து சேர்ந்தது.

தேவருக்கும் கடம்பனுக்குமாகச் சேர்த்து வாங்கிய சரக்குகளை முதலியார் விவரித்துக் கொண்டிருந்தார். சரக்கு அதிக அளவில் இருந்தது.

அதே சமயம் மேற்குத் திசையில் இருந்து வேகமாக ஓர் ஆள் வந்து சேர்ந்தான். அவன் வந்த வேகத்தில் மூச்சிரைத்தது.

அவன் யார்? எதற்காக வந்திருக்கிறான் என்பதைத் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,947 முறை படிக்கப்பட்டுள்ளது!

தனியே ஒரு குரல்

பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,158 முறை படிக்கப்பட்டுள்ளது!

கலைந்த கனவும் கலையாத மனமும்

அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் தீர்மானமும் ஒத்துழைத்தால் மட்டுமே ஒரு கனவு நனவாக முடியும் என்ற கசப்பான உண்மையை ஒரு ஏழை இளைஞன் தன் வாழ்வில் உணர்ந்தான்.

மைசூரைச் சேர்ந்த அந்த இளைஞன் ஒரு ஆசிரியரின் மகன். பள்ளிக்கூடத்தில் அவன் மிக புத்திசாலியான மாணவன் என்று பெயரெடுத்தான். அவனுடைய நீண்ட நாள் கனவு ஐஐடியில் (IIT- Indian Institute of Technology) பொறியியல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,754 முறை படிக்கப்பட்டுள்ளது!

தோப்பில் முகம்மது மீரான்

அட..பட்டணத்து வாசம் – தோப்பில் முகம்மது மீரான் [இந்தியாவின் தென்கோடியாம் முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டம். கடலும் கடல் சார்ந்த நிலமுமான நெய்தல் நிலம். இரண்டுவிதமான கலாச்சாரப் பிணைப்பு என்பது இங்கு கூடுதல் சிறப்பு. இங்கு துறைமுகத்தையொட்டிய ஒரு கிராமம், தேங்காய்ப்பட்டிணம். பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட அந்த கிராமத்திற்கு 1997ல் ஒரு இலக்கியவாதியின் வழியாக மேலும் ஒரு சிறப்பு கிடைத்தது. முஸ்தபாகண்ணு என்ற கதாபாத்திரத்தை ‘சாய்வு நாற்காலி’ என்ற நாவலின் வழியாக அவர் உயிரூட்டியபோது இலக்கிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,091 முறை படிக்கப்பட்டுள்ளது!

கணித மேதை இராமானுஜன்

கணித மேதை சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 26,931 முறை படிக்கப்பட்டுள்ளது!

நமது கடமை – குடியரசு தினம்

இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. அதன் தற்காலிகதலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரசட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அக்குழு தந்த வரைவினை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,696 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிலால் (ரழி)

பிலால் (ரழி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.

பிலால் (ரழி) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரழி) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக் கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,388 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 2

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 4

யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் மேலே மரத்தில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் கையில் வைத்திருந்த ஆயுதத்தை மரக்கிளைக்கு நேராக உயர்த்திப் பிடித்தான்.

கண் இமைக்கும் நேரத்தில் புலிபோல் பாய்ந்தார் தேவர். அவனுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “யார் நீ? என்ன செய்யப் போகிறாய்” என்று அதட்டினார்.

அவன் அலட்சியமாக சிரித்துக் கொண்டே கையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..