காரட்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட்,
தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.
யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு
உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப்
பெண்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : குழந்தை பேறு இல்லாதவர்கள்
அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள்
சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வைக்கு உகந்தது. உடல்
பருமனாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு
சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.
பீன்ஸ்
என்ன இருக்கு : புரதம், கார்போ ஹைட்ரேட்,
விட்டமின் ஏ, தாது உப்புகள்.
யாருக்கு நல்லது : ரத்தக் கொதிப்பு, நீரிழிவு
நோயாளிகளுக்கு நல்லது.
யாருக்கு வேண்டாம் : குடைச்சல், ஏப்பம், வயிற்று
வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு
ஏற்படும்.
பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு,
சருமப் பளபளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.
பீட்ரூட்
என்ன இருக்கு: க்ளூகோஸ்
யாருக்கு நல்லது : ரத்தச் சோகை உள்ளவர்கள்
தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர
சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி
சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும்.
யாருக்கு வேண்டாம் : சர்க்கரை நோயாளிகள்
சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ரத்தத்தை வளப்படுத்தும். சுறுசுறுப்பை
அளிக்கும். மேனி நிறம் பெறும்.
நூல்கோல்
என்ன இருக்கு : சுண்ணாம்புச் சத்து
யாருக்கு நல்லது : ரத்தத்தில் ஹீமோகுளோபின்
குறைவாக உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம் : உப்புச் சத்து அதிகம்
உள்ளவர்களுக்கு.
பலன்கள் : ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும்.
ரத்தச் சோகையை நீக்கும். |