இமாம் கஸ்ஸாலி அவர்கள் பற்றிய சுருக்கம்
கேள்வி:
இமாம் கஸ்ஸாலி அவர்களை இமாம் இப்னு தைமியா அவர்கள் பாராட்டியுள்ளார்களே! ஆனால் உங்களின் எழுத்துக்கள் வேறுவிதமாக உள்ளதே! அன்பின் இஸ்லாமிய வாசகருக்கு,
எமது வெளியீடான ஸுபிக்களின் தரீக்காகள் அன்றும்
இன்றும் என்ற நூலை வாசித்துவிட்டு அதுபற்றிய எழுந்த
சந்தேகங்களைத் தெரியப்படுத்தி விளக்கம் கேட்டமைக்கு
முதலில் எமது மனமார்ந்த நன்றியினையும் பாரட்டையும்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்நூல் இன்றைய முஸ்லிம்கள் சமூகத்தில் மிக்பெரும்
பகுதியினரான தப்லீக் சகோதரர்களுக்கும்,
தரீக்கா-ஸுன்னத்-வல்-ஜமாத்
(என்போர்கள்) சகோதரர்கள் நேர்வழியென நினைத்து
இருளடைந்த பாதையில் பயணிக்கும் அபாயத்ததை தடுத்து
நிறுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டது.
அந்த வகையில் உங்கள் சந்தேகம் தரீக்காவையும்
ஸுபித்துவத்தையும் தோள் தொடுத்து காத்த அறிஞரான இமாம்
கஸ்ஸாலி அவர்களைப்பற்றி இமாம் இப்னு தைமியா (உங்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம்) அவர்களே புகழ்ந்து
எழுதியிருக்கின்றார்களே! என்பதுதான். இதற்கான பதில்
என்னவென்றால்
இமாம் கஸ்ஸாலி அவர்களைவிட இமாம் இப்னு தைமியா அவர்கள்
காலத்தால் பிந்தியவர்கள் என்றும் அவர் எங்கு, எந்த
நூலில் அவ்வாறு புகழ்ந்துள்ளார் என்னவென்று
புகழ்ந்துள்ளார் என்பதனை நீங்கள் தெரியப்படுத்தவில்லை.
எனக்கு தெரிந்த வரையில் இமாம் கஸ்ஸாலியை எத்தனையோ
அறிஞர்கள் புகழ்ந்திருக்கின்றனர். அவ்வாறு
இப்னு தைமிய்யா புகழ்ந்துள்ளாரா? என ஆராய்ந்தேன் ஆனால்
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை..
ஒரு பேச்சுக்கு இப்னு தைமிய்யா கஸ்ஸாலி இமாமை
புகழ்ந்துள்ளார் என்றே வைத்துக்கொண்டாலும், ஒருவரது
கொள்கை மற்றும் கருத்துக்கள் சரியானதா என்று
அவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்னும் தராசில்
நிறுத்துப்பார்த்துதான் தீர்மானிக்க முடியுமே தவிர
அவரைப்பற்றி ஒருவர் பொதுவாக நல்ல அபிப்பிராயம்
தெரிவித்து புகழ்வதால் அவர் கொள்கை மற்றும் கருத்து
அனைத்தும் நல்லது என்று ஆகிவிடாது
அப்படிப்பார்க்கப்போனால் நபி (ஸல்) அவர்கள் தவிரவுள்ள
அத்தனை (ஸஹாபாக்கள் உட்பட) இமாம்களுக்கும் தவறுகள்
எற்பட்டுத்தான் உள்ளன. அதே நேரம் நபியவர்கள்
ஸஹாபாக்களை தனிப்பட்ட முறையில் பெயர் குறிப்பிட்டும்
பொதுவாகவும் புகழ்ந்துள்ளர்களே!
பொற்காலம் என்று முதல் மூன்று நூற்றாண்டுகளையும் நபி
(ஸல்) அவர்கள் சிறப்பித்து கூறியிருக்க
அக்காலகட்டத்தில் தான் கத்ரியா -கழா-கதிரை மறுக்க
கூடியவர்கள், கவாரீஜ், ஷீயா போன்ற வழிகெட்ட
கொள்கைக்காரர்களும் தோன்றினார்கள். நபி (ஸல்) அவர்கள்
அக்கால மக்களை பாராட்டியதால் இவர்கள் கொள்கைகளும்
நல்லது என்று நியாப்படுத்த முடியுமா?
எனவே நபியவர்கள் அக்காலம் பற்றிய நல்லபிப்பிராயம்
அவற்றில் நடைபெற்ற நல்ல விஷயங்களைக் குறித்து
புகழ்ந்ததாகவே முடிவு செய்யப்படும்.
அவ்வாறே இப்னு தைமிய்யா அவர்கள் இமாம் கஸ்ஸாலியை
புகழ்ந்துள்ளார்கள் என்று வைத்துக்கொண்டாலும் அது
அவர்கள் மேற்கொண்ட இஸ்லாதிற்கான நல்ல சேவைகள் பணிகள்
குறித்து புகழ்ந்தாதாகவே முடிவு செய்யப்படும்.
இமாம் கஸ்ஸாலி அவர்களின் வாழ்க்கையை நான்கு
காலகட்டங்களாக பிரிக்கலாம்:
முதல் கால கட்டம்:
இவர்கள் சமூகத்தில் ஒரு பிக்ஹு கலை மேதையாகவே
அறிமுகமானார்கள் ஷாஃபி மத்ஹபுடைய பல பிக்ஹு நூற்களை
இவ்வுலகிற்க்கு தந்துள்ளார்கள் அதில் பஸீத், வஸீத்,
வஜீத் போன்ற நூற்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இரண்டாவது கால கட்டம்:
இவர்களது மத்திய காலத்தில் இல்முல் காலம் எனும்
பகுத்தறிவு வாதம் பிரபல்யம் பெற்றயிருந்தது அதாவது
கிரேக்க, யுனானிய மொழியுள்ள தத்துவ நூற்கள் அரபியில்
மொழிபெயர்க்க தொடங்கின. தொடர்ந்து மக்கள் மத்தியில்
இந்த தத்துவக் கருத்துக்களை பரப்பி குழப்பத்தை
ஏற்படுத்தின இதனைத் தடுத்திடுவதெற்கென்றே இமாமவர்கள்
இல்ஜாமுல் அவாம் அன் இல்மில் காலம் (பாமர்கள்
தத்துவக்கலை கற்கக் கூடாது) எனும் பெயரில் ஒரு நூலை
எழுதி மக்களின் ஈமானை பாதுகாத்தவர்கள்.
ஆனால் என்ன காரணமோ எதைவிட்டும் பிறரைத்தடுத்தார்களோ
அக்கலையில் (இமாம் கஸ்ஸாலி) தாமே ஒரு கட்டத்தில்
நாட்டம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இந்த பகுத்தறிவு
வாதத்தால் சற்று தடுமாறிய இமாமவர்கள் ஒரு கட்டத்தில்
அல்லாஹ்வும் படைப்புக்களும் ஒன்றிலிருந்து ஒன்று
பிரிந்தவைதானோ என்று சந்தேகம் கொள்ள தொடங்கினார்கள்.
இதன் விளைவே பின்னர் இவர்கள் மேற்படி 'அல்லாஹ் என்னும்
மாபெரும் சக்திலிருந்து தோன்றியவைதான் அனைத்தும்'
எனும் ஆபித்துவத் தத்துவத்தால் கவரப்பட்டார்கள்.
இக்கால கட்டத்தில் இவர்கள் எழுதியதே
இஹ்யாஉலூமுத்தீன்
என்னும் நூலாகும்.
இந்நூல் இவர்களுடையதான் என்பதில் எவ்வித கருத்து
வேறுபாடும் இல்லை. இதன் விரிவுரையான இத்திஹாபுல் மஹாளா
எனும் (இராக்கி நூலிலும் இது
உறுதிப்படுத்தப்படுகின்றது. இந்நூலில் பல்வேறு
இடங்களில் ரப்பும்-கலக்கும் ஒன்றுதான் என்பதை
மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் இவர்களால்
எடுத்துகாட்டப்படுகின்றது. அதில் சிலவற்றை மாத்திரமே
எனது நூலில் எடுத்துக்காட்டினேன்.
மூன்றாம் கட்டம்:
இதற்கு சிலகாலங்களின் பின்னர் இவர்கள் குல்லாபிய்யா
எனும் ஒரு பிரிவினருடன் சேர்ந்து ஆதரவு தந்தார்கள்,
இவர்கள் முல்கஸிலாவிலிருந்து பிரிந்தவர்கள். இதன்
பின்னர் அஸஅரிய்யா எனும் பிரிவினரின் கொள்கையை
ஏற்றுக்கொண்டார்கள்.
இவர்கள் மேற்படி ஷீயாக்கள் கொள்கைக்கு மாற்றமானவர்கள்
அல்லாஹ்-வின் பண்புகளில் சிலவற்றை தவிர ஏனையவற்றிக்கு
தஃவீல்-மாற்று அர்த்தம் கொடுக்க வேண்டும் என்ற
கொள்கையில் உள்ளவர்கள். இன்றும் கூட நிறைய அரபு
மதரஸக்களில் அஸ்ஸரியா கொள்கைளை தழுவிய நூற்களை
கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
நான்காம் கட்டம்:
மேற்படி அனைத்துக்கொள்கையிலிருந்து விலகி தவ்பா செய்து
மீண்டும் ஸுன்னத்துல்வல்ஜமா-வின் கொள்கைக்கு
மீண்டுவந்தார்கள். அதாவது ஸஹாபாக்கள், தாபியீன்களின்
அகீதாவிற்க்கு மீண்டார்கள். தன் மரண வேளையில்
குர்ஆனையும் புஹாரி ஷரீப்பையும் நெஞசில்
வைத்துக்கொண்டு ஏதைஎதையெல்லாமோ படித்தேன் இந்த குர்ஆன்
மற்றம் ஹதீஸிலும் போதிய கவனம் செலுத்தவில்லை என்று
கவலைப்பட்டார்கள் இது தான் இமாம் கஸ்ஸலி அவர்களின்
சுருக்கமான வாழ்க்கை. மேலதிக விவரங்களுக்கு கீழ்கண்ட
இரண்டு அரபி நூற்களை பார்வையிடவும்.
இதுதான் தாங்களுக்கு எனது பதில். சத்தியம் எங்கிருந்து
வந்தாலும் அதனை ஏற்று நடைமுறைபடுத்தும் எண்ணமும்
முயற்சியும் இருக்க வேண்டும். அதற்காக வல்ல
அல்லாஹ்-விடம் பிரார்த்தனை செய்தவனாக
அன்புடன்
முஹம்மத் ஜலீல் - அல்-ஜுபைல் |