சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள்
.
-
ஷரீஅத் - (மார்க்கம் .)
-
தரீக்கத் -- ( ஆன்மீகப் பயிற்சி
பெறல்)
-
ஹக்கீக்கத் -- ( யதார்த்தத்தை
அறிதல் )
-
மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல்
)
என இவர்கள் இஸ்லாத்தை நான்காக
வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும் . இவை பற்றிச்
சுருக்கமாகத் தெரிந்து
வைத்திருப்பது நல்லது .
ஷரீஅத் .
ஸூபிகளிடத்தில் ஷரீஅத் எனப்படுவது தொழுகை, நோன்பு,
ஜக்காத், ஹஜ் போன்ற சாதாரண மார்க்க அனுஷ்ட்டானங்களைக்
குறிக்கும். இவர்களின் கருத்துப்படி ஆரம்ப
நிலையிலுள்ள, உண்மை - யதார்த்தத்தை அறியாத பண்படாத
சாதாரண பாமர மக்களுக்குரிய ஆத்மீகப் பயிற்சி நெறிகளே
இவ்வகை வணக்கங்களாகும் . இவற்றால் மனிதனுக்கு எவ்வித
பயனும் ஏற்படப் போவதில்லை , நெல்லை மூடியிருக்கும் உமி
போன்றதே ஷரீ அத் சட்டங்கள். உள்ளேயிருக்கும் அரிசியைப்
போன்றதுதான் ஹக்கீக்கத். ஆரம்பப் பருவத்தில்
உள்ளிருக்கும் அரிசியைக் கெடாமல் காக்க உமி
அவசியம்தான் . எனினும் காலப்போக்கில் கதிர்
முற்றியதும் அறுவடையின் பின் உமியை நீக்கித் தூர வீசி
விடுவது போன்று ஹக்கீக்கத்தை அறிந்தவுடன் ஷரீஅத்தை -
மார்க்க அனுஷ்ட்டானங்களைத்
தூக்கி எறிந்துவிட வேண்டும் என்பதே இவர்களின் கோற்பாடு
. ஆரம்பத்தில் ஒரு பயிற்சி நோக்கிலேயே இவற்றை ஒருவன்
செய்கின்றான். நெல்லின் உள்ளிருக்கும் அரிசியை அடைய
விரும்புபவன் உமியைத் தூக்கி வீசி விடுவது அவசியம்
போன்று ஒருவன் யதார்த்தத்தை அறிந்ததும் வெளிப்படையான
அமல்களை - மார்க்க அனுஷ்ட்டானங்களை விட்டு விட
வேண்டும் என்பதே இவர்களது கோற்பாடு.
பிரபல ஸூபியான கஸ்ஸாலி இமாம்தான் இவ்வாறான ஒரு
கொள்கையை அப்பாவி சமூகத்தின் மத்தியில் புகுத்தி
லட்சக் கணக்கான மக்களின்
வழிகேட்டுக்குக் காரணமாயிருந்தவர் . இவர் ஒரு மார்க்க
அறிஞரும் கூட . எனினும் ஸூபித்துவத்தால் கவரப்பட்டு
இந்நிலைக்கு ஆளாகி விட்டார்.
இவர் இறுதித் தருவாயில் இவ்வழிகெட்ட கொள்கைகள்
அனைத்தையும் விட்டு மீண்டு தவ்பாச் செய்து
விட்டதாகவும், ஸூன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைக்கு
மாறி விட்டதாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் வரலாறு
உண்டு என்பது தனி விடயம். இவர் எழுதிய' இஹ்யா
உலூமுத்தீன்' எனும் நூல் பிரபலமானது. இதை இவர் நான்கு
பகுதியாகப் பின்வருமாறு வகுத்திருக்கின்றார் .
அ- இபாதாத் - வணக்கங்கள் .
ஆ- ஆதாத் - பழக்க வழக்கங்கள் .
இ- முஹ்லிகாத்- மனிதனை அழித்துவிடத்தக்க பாவங்கள் .
ஈ- முன்ஜியாத் - நரகை விட்டும் பாதுகாக்கக் கூடியவைகள்
.
இப்படி நான்கு பகுதிகளாகப் பிரித்து விட்டு நான்காவது
பகுதி இருக்கின்றதே - அதாவது முன்ஜியாத் - நரகை
விட்டும் பாது காக்கக் கூடியவைகளின் பட்டியலில் அவர்
குறிப்பிடுவது என்ன தெரியுமா ? நரகை விட்டும்
பாதுகாக்கும் ஒரே வழி தரீக்கத் மாத்திரமே !!
தரீக்கத்தை -அதாவது ஆத்மீகப் பாதையை அடைய வேண்டுமா ?
ஷைக்கிடம் பைஅத் செய் ,அவருக்கு அடிமையாகு , அவரிலே
அல்லாஹ்வைக் காண் , அவர் சொல்வதைச் செய். அப்படி நீ
தரீக்கத்தின் வழி நடந்தால்தான் உன்னால் ஹக்கீக்கத்தை
அடைய முடியும் , ஹக்கீக்கத்தை அறிவதுதான் நரகை
விட்டும் உன்னைக் காக்கும் என்பதே அதன் விளக்கம் .
இதன் படி இபாதத்கள் , தொழுகை நோன்பு , ஹஜ் போன்ற
வணக்கங்கள் செய்வது எதுவுமே ஒரு முஸ்லிமை நரகை
விட்டும் காப்பாற்றாது . மாறாக ஹக்கீக்கத்தைத்
தெரிந்தால்தான் சுவர்க்கம் என்பது தான் கஸ்ஸாலியின்
கொள்கை என்பது தெளிவாகின்றது .
ஆனால் அல்குர்ஆனிலோ அல்லாஹ் கூறுகையில் ...
நரக வாதிகளைப் பார்த்து சுவர்க்க வாதிகள் நீங்கள்
நரகத்துக்கு வரக் காரணம் என்ன என்று கேட்ட போது
அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்று இவ்வாறு
கூறுகின்றான் ..
சுவன வாதிகள் நரகுக்குச் சென்ற
பாவிகளிடம் ' நீங்கள் நரகம் வரக் காரணம் யாது' என்று
வினவுவார்கள் . அதற்கு அவர்கள் நாங்கள் தொழக்
கூடியவர்களில் இருக்கவில்லை , ஏழைகளுக்கு
உணவளிக்கவில்லை ,வீணர்களுடன் கூடித்திரிந்தோம்,
நியாயத் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்துக்
கொண்டிருந்தோம்' என்பார்கள் . (ஸூரா முத்ததிர் 41)
நபி (ஸல் ) அவர்களிடம் ஒருவர்
வந்து அல்லாஹ்வின் தூதரே.. நான் கடமையான தொழுகையைத்
தொழுது ,ரமழானில் நோன்பு நோற்று,
ஹலாலானவற்றை எடுத்தும் ,ஹராமானவற்றைத்
தவிர்ந்தும் வாழ்கின்றேன் .இது தவிர வேறு எதுவுமே நான்
செய்யவில்லை . இப்படியிருக்க நான் சுவர்க்கம்
செல்வேனா? என்று கேட்க நபியவர்கள் ஆம் என்று
கூறினார்கள் .
( ஆதாரம் முஸ்லிம் 18 )
இவ்விரு ஆதாரங்களின் மூலமாகத்
தொழாதிருத்தல், இபாதத்
செய்யாதிருத்தல்தான் ஒருவன் நரகம் செல்லக்
காரணமாகின்றது என்பதும் தொழுவதும் இதர இபாதத்களைச்
செய்வதும் சுவனம் சேர்க்கும் என்பதும் தெளிவாகின்றது .
ஆனால் கஸ்ஸாலியோ தரீக்காவில் சேராவிட்டால்
சொர்க்கமேகிடையாதுஎன்கின்றாரே ??
இவ்வாறே கஸ்ஸாலி இமாமவர்கள் அறிவை இரண்டு வகையாகப்
பிரிக்கின்றார்கள். உலக அறிவு , மறுமையின் அறிவு என்று
. மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் சரிதானே .. இதிலென்ன
தவறு என்பார்கள் . ஆனால் கஸ்ஸாலி அதற்குக் கூறும்
வியாக்கியானத்தைப் பாருங்கள்...
'உலக அறிவென்பது உலகில்
செய்யும் இபாதத் ,நல்ல கெட்ட காரியங்கள் ஹராம் ஹலால்
பற்றிய அறிவாகும் . மறுமையின் அறிவென்பது
ஹக்கீகத்துடைய அறிவாகும். அதாவது அல்லாஹ் தான்
இப்பிரபஞ்சமாக வெளியாகியுள்ளான் எனும்
ஹக்கீக்கத்தை-யதார்த்தத்தை சூபித்துவப் பாசறையில்
தரீக்காவின் வழியில் பயின்று அறிவதே மறுமையின்
அறிவாகும் . இந்த அறிவு அதாவது(ஹகீக்கத்தை அறிதல்)
மறுமை அறிஞர்களின்
(சூபியாக்களின்) தீர்ப்புப்படி ஒவ்வொருவருக்கும் பர்ழு
ஐன் - கட்டாயக் கடமையாகும் . எப்படி ஒருவன் உலக
அறிவைச் சார்ந்த இபாதத்களைச் செய்யாதவிடத்து உலக
உலமாக்களின் தீர்ப்புப் பிரகாரம் அப்பகுதி அரசனின்
வாளுக்கு இரையாக நேரிடுமோ அதே போன்று மெஞ்ஞான அறிவான
இவ்வறிவைக் கற்காது
புறக்கணிப்பவர்கள் மறுமையில் அரசருக்கெல்லாம் அரசனான
அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாகி அழிந்துவிட(நரகம்
செல்ல)வேண்டியேற்படும் என்று கஸ்ஸாலி
சொல்கின்றார்கள்.. (இஹ்யாஉலூமுத்தீன்
பக்கம் 1-114)
இவ்வாறு முதல்க் கட்டமாக இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள
வந்த எதுவுமறியா அப்பாவி முஸ்லிமை அழைத்து அவனுக்குக்
குழையடித்து , மூளையைச் சலவை செய்து இவ்வாறான
ஷைத்தானிய சிந்தனைகளை ஊட்டி அவர்களைத் தமது தரீக்காவுக்குள்(தரீக்கத்துன்நார்
- நரகத்துகின் பாதை என்பதே மிகப் பொருத்தம்) அழைத்துச்
செல்கின்றனர் . இனி அங்கே என்ன நடைபெறுகின்றது என்று
பார்ப்போம். ...
தரீக்கத் الطريقة
அன்றைய புராதன ஸூபித்துவ வாதிகள் முதல் இன்றுள்ள நவீன
ஸூபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு
விடயம்தான் இந்ததரீக்காவாகும் .இதிலே பல படித்தரங்கள்
உள்ளன . சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள
விரும்புபவர் முதலில் ஒரு ஷைக்கிடத்தில்
பைஅத்செய்து அவர்சொல்லும் வழியில் நடை பயில்வதை
இவர்கள் தரீக்கத்
என்றழைக்கின்றனர் . அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி
பெறும் சீடர் தனது உணர்வுகள் , புலன்களையெல்லாம்
மரணிக்கச் செய்யுமளவு
தன்னைச் சிரமத்துக்குள்ளாக்கி தன்னைத்தானே வருத்தி
'அதஹ்' எனும் பைத்தியம் போன்ற சுய நினைவிழந்த
நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும் . இதற்கான
பயிற்சிகளை அந்த தரீக்காவின் ஷைக்கே முன்னின்று
சொல்லிக் கொடுப்பார் .
இது பற்றி கஸ்ஸாலி இவ்வாறு
கூறுகின்றார் ...
'தரீக்கத்தினை அடைவதற்கு கல்வத்
(தனித்திருத்தல்) , ஜூஉ (பசித்திருத்தல்),
ஸஹர்(விழித்திருத்தல்), ஸூம்து
மௌனமாயிருத்தல்) போன்றன அவசியமாகும் .
( இஹ்யா உலூமுத்தீன் 2-243 )
அத்துடன் தனது உடலைத் தானே சிலவேளை வதைத்துக்
கொள்ளவும் வேண்டும் . இதற்காக நீண்ட நேரம் ஒற்றைக்
காலில் நிற்றல் , தலைகீழாக நிற்றல் , முள்ளின் மீது
அமர்தல் ,நெருப்பால் உடலைப் பொசுக்கல் போன்ற
பயிற்சிகளையும் ஷைக்கானவர் மேற்கொள்வார் .
இவர் கூறும் அனைத்தையும் முரீது (சீடர்) எவ்வித
மறுப்போ , வெறுப்போ இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது
ஸூபித் துவத்தின் பொது விதி. சுருங்கக் கூறின் அவர்கள்
கூறுவது போல் 'ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷைக்கின்
முன்னால் மய்யித்தைக் குளிப்பாட்டுபவன் முன்
வைக்கப்பட்ட சடலத்தைப் போல் நடந்து கொள்ள வேண்டும் .
அவனுக்கு எந்தவித விருப்பு வெறுப்போ சுய சிந்தனையோ
இருக்கக் கூடாது . அவரின் முன் நின்றால் இவனுக்குப்
பேச்சே வரக் கூடாது, அவரது அனுமதியின்றி இவன்
(தன்மனைவீயுற்பட)எவரிடமும் தொடர்பு கொள்வதோ,
குர்ஆன்ஓதல், திக்ர் , அறிவைத்தேடல் போன்ற எவற்றிலுமோ
ஈடுபடக் கூடாது .(அல் அன்வாருல் குத்ஸிய்யா 1- 187)
அபூ யஸீத் அல் புஸ்தாமி எனும் ஸூபி கூறுகின்றார் ...
'ஒரு ஷைக்கானவர் தனது முரீதை
ஒரு வேலையின் நிமித்தம் வெளியே அனுப்பினால் அவன்
போகும் வழியிலேயே தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் -
இந்த முரீதானவன் இப்போது உடனடியாகத் தொழுது விட்டு
அதன்பின் அந்த வேலையை முடிக்கலாம் தானே என்று
எண்ணிவிட்டால் கூட அவன் ஆழமறியாத ஒருபாதாளக்
கிணற்றினுள் வீழ்ந்தவனைப் போலாவான் என்கின்றார் . (
ஸத்ஹாத்துஸ் ஸூபிய்யா ப 343 )
ஷைக் றிபாயிஃ கூறுவதைப் பாருங்கள் .
'ஒரு முரீதுக்கு இருக்க வேண்டிய
பண்புகளிலொன்றுதான் தனது ஷைக் எப்போதும் நேரிலும்,
மறைவிலும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக உணர
வேண்டும். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
ஊழியஞ் செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்
. எந்த வேலையைச் செய்யும் போதும் அவரது நினைவு மனதில்
வர வேண்டும் . அவர் செய்யும் எந்தவிதமான மோசமான
காரியங்களையும் கண்டு அதைக் கண்டிக்கக் கூடாது . ஒரு
முறை இப்படித்தான் ஒரு ஷைக்கின் வீட்டுக்கு அவரது
முரீதானவர் சென்ற போது தனது ஷைக் ஒரு அழகிய பெண்ணிடம்
சல்லாபித்து ,அவளைக் கட்டிப்பிடித்து , முத்தமிட்டு
உடலுறவில் ஈடுபட்டிருக்கக் கண்டார். இதைக் கண்டதும்
அதிர்ச்சியுற்ற அவர் அவசரப் பட்டு 'என்ன காரியம்
பண்ணிவிட்டீர்'!! என ஷைக்கைக் கண்டித்து
விட்டார்..உடனே அவர் ஷைக்கிடமிருந்து கற்ற அனைத்து
நெறிகளும் அவரிடமிருந்து அந்த இடத்திலேயே
பறிக்கப்பட்டுவிட்டன. . . (நூல் : கிலாததுல் ஜவாஹிர் ;
பக்கம் :278)
பிரபல ஸூபி இப்னு அஜீனா கூறுகின்றார் ...
ஷைக்குக்கு சிஷ்யன் செய்யும் மரியாதை யாதெனில் அவன்
ஷைக்கின் கைகளையும் கால்களையும் முத்தமிட வேண்டும் .
அவரின் முன் இருக்கும் போது தலை தாழ்த்தி
வாய்மூடியிருக்க வேண்டும் . முரீதுக்கு ஏதேனும் நோய்
ஏற்பட்டு விட்டால் அவனது மனக்கண் முன் ஷைக்கை
முன்னிறுத்தி அவரிடமே தனது நோயை நீக்குமாறு முறையிட
வேண்டும் . ஏனெனில் இவ்வாறு செய்தால்
அல்லாஹ்வின்உதவியால் சந்தேகமின்றி நிச்சயம்
சுகம்கிடைக்கும் . . (புதூஹாத்துல் இலாஹிய்யா :
308-309)
வழிகெட்ட ஸூபி ஸஃரானி சொல்வதைக் கேளுங்கள் ....
ஒரு ஷைக்கின் மீது உண்மையான அன்பு கொள்வது
எப்படியெனில் அல்லாஹ்வுக்காகவே ஒன்றை நேசித்து
அவனுக்காகவே ஒன்றை வெறுப்பது போன்றே இந்த ஷைகுக்காகவே
எதையும் நேசிக்க வேண்டும் அவருக்காகவே எதையும்
வெறுக்கவும் வேண்டும் . அவ்வாறே ஷைக்கின் கப்ரைத்
தரிசிக்கச் சென்றால் அவர் மய்யித் , மரணித்து
விட்டவர், நாம் பேசும்
எதையும் செவியுற மாட்டார் என எண்ணிவிடக் கூடாது .
எனினும் அவர் திரையுலகில் உயிருடன் இருப்பதாகவே நம்ப
வேண்டும் . அப்போதுதான் அவரது பரக்கத் - அருளைப் பெற
முடியும் . ஏனெனில் முரீதானவர் ஷைக்கின் கப்ரை ஸியாரத்
செய்து அல்லாஹ்வை திக்ர் செய்தால் அந்த ஷைகும் கப்ரில்
எழுந்து உற்கார்ந்து கொண்டு இவருடன் திக்ர்
செய்கின்றார் . இதை நாங்கள் பல தடவைகள் நேரடியாகவே
கணகளாலேயே பார்த்திருக்கின்றோம் . (அன்வாருல்
குத்ஸிய்யா 1-169)
அப்துல் காதிர் ஜீலானி கூறுகின்றார் ...
ஷைக்- குருவானவர் வெளிப்படையாகச் செய்யும்
எக்காரியத்துக்கும் முரீத் மாற்றஞ்செய்யக் கூடாது .
மறைமுகமாகச் செய்யும் விடயங்களில் குறுக்கீடு செய்து
எதிர்க்கேள்வி கேட்கவும் கூடாது . (அல்குன்யஹ் 2- 164
)
தொடர்ந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி
கூறுகையில்...
'நிச்சயமாக ஷைக்கின் மூலம் ஒருவனுக்கு நன்மையுமுண்;டு
, தீமையுமுண்டு. தனது ஷைக்கை நேசிப்பது மறுமையில்
ஒருவன் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளக்
காரணமாகி விடும் இது அவரில் மூலம் கிடைக்கும்
நன்மையாகும் , அவருடன் முறண்பட்டு வாதம் செய்வது
அவனின் நாசத்திற்குக் காரணமாகி விடும் . இது அவரினால்
ஏற்படும் தீங்கு . நீ என்
கரத்தைப் பிடிப்பதன் மூலமாக வெற்றி பெறவில்லையென்றால்
உனக்கு ஒரு போதும் வெற்றியே கிடையாது . ( அல்பத்ஹூர்
ரப்பானி )
ஒரு தடவை ஷகீக் பல்கீ, அபூதுராப் ஆகிய இரு ஸூபிகளும்
அபூ யஸீத் அல்புஸ்தாமி எனும் ஸூபியிடம் வந்தனர் . இரு
வருக்கும் உணவு பரிமாறப்பட்டது . அங்கு ஒரு வாலிபன்
அவர்களுக்குப் பணிவிடைக்காக இருந்தான் . அவ்விருவரும்
வாலிபரே.. எம்முடன் வந்து சாப்பிடு என்று கூற அதற்கவன்
'நான் நோன்பு ' என்றான். அதற்கவர்கள் பரவாயில்லை ஒரு
மாத நோன்பின் நன்மையைத் தருகின்றோம் வா .. எனக்கூற
அதற்கும் அவன் மறுத்து விட்டான். சரி ஒரு வருடகால
நோன்பின் நன்மையைத் தருகின்றோம் வா என்று கூறினர்.
அவன் அதற்கும் மறுத்து விடவே ஆத்திரமடைந்த அவர்களில்
ஒருவர் 'அல்லாஹ்வின் பார்வையை விட்டும் விழுந்து விட்ட
அவனை அவன் பாட்டுக்கு விட்டு விடுங்கள்' என கோபத்துடன்
கூறினார் . இதன் காரணத்தால் அவ்வாலிபர் திருட்டுக்
குற்றமொன்றில் பிடிபட்டு அவன்கைதுண்டிக்கப்பட்டது. . .
( ரிஸாலா குஷைரிய்யா ப : 151 )
ஒரு சீடன் தன் ஷைக்கை நேசிப்பது சரத் - நிபந்தனையாகும்
என்பது அனைத்து சூபிகளும் ஏகோபித்த விடயமாகும் .
எந்தளவுக்கு நேசிக்க வேண்டுமென்றால் தனது ஷைக் அல்லாத
எவரும் எதைக் கூறினாலும் அதைக் காதில் வாங்கிக்
கொள்ளாது செவிடனைப் போல நடந்து கொள்ள வேண்டும் . யார்
விமர்சித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது . அந்தப்
பகுதியிலுள்ள மக்கள் அனைவருமே ஒன்று கூடி
முயற்சித்தாலும் அவர்களால் இவனை அந்த ஷைக்கை விட்டும்
தடுக்க முடியாதளவுக்கு அவனது குருப்பற்று இருக்க
வேண்டும். ஷைக்குடைய மகத்துவத்தை மனதில் நிறுத்தி
மனக்கண்ணால் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தால்
அவனுக்குப் பசி, தாகம் எதுவுமே ஏற்படக் கூடாது . ஒரு
சீடருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டது . அவர் எதுவும்
உண்ணாமல் குடிக்காமல் சதா தன் ஷைக்கையே நினைத்துக்
கொண்டிருந்தார் . ஆனாலும் அவர் இருந்ததை விடக்
கொளுத்து விட்டார்.
( அன்வாருல் குத்ஸிய்யா 1-168 )
இது போன்ற ஸூபித்துவ வாதிகளின் தரீக்கத் விதிகளையும்
நிப ந்தனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம் . இவ்வாறான
அபத்தமிக்க பைத்தியகாரத்தனமான இஸ்லாத்திற்கு முறணான ,
இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்தெறியக்கூடிய
கதைகளையும் புராணங்களையும் லட்சக்கணக்கில் ஸூபித்துவ
நூல்களில் நீங்கள் காணலாம் . விரிவஞ்சி அவற்றைக்
குறைத்துக் கொள்கின்றேன் . இக்கட்டுக் கதைகளில்
பொதிந்திருக்கும் அபத்தங்களை விமர்சிக்க , விபரிக்க
முற்பட்டால் புத்தகம் நீண்டு விடும் . எனவே அதை
வாசகர்களான உங்களின் ஆய்வுக்கு விட்டு விடுகின்றேன் .
மிகக் குறைந்தளவு இஸ்லாமிய அறிவுடைய ஒரு பாமரன் கூட
இக்கருத்துக்கள் இஸ்லாத்தைத் தகர்க்கக் கூடிய மிகப்
பெரிய வெடி குண்டு , இதற்கும் இஸ் லாத்துக்கும் எள்
முனையளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை அடித்துச்
சொல்வான் என்பது மட்டும் உண்மை .
சுருக்கமாகச் சொல்வதாயின் ஸூபிகளின் தரீக்கத் எனும்
இந்த மாயையின் பின்னணியில் ஒரு பெரிய சதிவலையே
பின்னப்பட்டிருக்கின்றது . அதாவது அப்பாவிப் பாமரர்கள்
மத்தியில் தம்மை விலாயத் பெற்ற இறை நேசச் செல்வர்கள் ,
ஷைக்மார்கள் என அறிமுகப்படுத்தி அப்பாமரர்களை
இஸ்லாத்தின் பெயரைக் கூறி ஏமாற்றித் தமது சீடர்களாக்கி
ஆத்மீகம் எனும் பெயரில் பொய்களையும் புருடாக்களையும்,
அதிசயமிக்க கற்பனைச் சம்பவங்களையும் கூறி மூளைச்சலவை
செய்து தன்னைப் பின் பற்றாவிட்டால் வழி கேட்டில்
வீழ்ந்து நரகத்துக்குத்தான் செல்ல வேண்டும் எனும்
அளவுக்குப் பயமுறுத்தி தாமும் வழி கெட்டு எதுவுமறியா
அப்பாவி மக்களையும் வழிகெடுக்கும் ஒரு ஷைத்தானிய ஊடகம்
தான் இந்த தரீக்கத் ஆகும்.
இதை விட முக்கியமான பயங்கர விடயம் யாதெனில் இந்தத்
தரீக்கத் வாதிகள் அனைவரினதும் மிக முக்கிய குறிக்கோள்
யாதெனில் இஸ்லாத்தையே அழித்து இடித்து வீழ்த்திவிடக்
கூடிய இரு கொள்கைளின் பக்கம் தம் சீடர்களை அழைத்து
அவற்றைப் போதித்து அதன் மூலம் சுய லாபம் தேடுவதே இவர்
களின் அடிப்படை நோக்கமாகும். அவையாவன...
1- வஹ்தத்துல் வுஜூத் - அத்வைதக் கொள்கை -அதாவது
படைப்பினங்களான நாமும் படைத்தவனான அல்லாஹ்வும்
ஒன்றுதான். ,அவன்தான் பல வடிவங்களில்
இப்பிரபஞ்சமாகவும், அதிலுள்ள வஸ்த்துக்களாகவும் காட்சி
தருகின்றான் எனும் கொள்கை .
2- அல்ஹூலூல் வல்இத்திஹாத்: அதாவது இறைவன்
படைப்பினங்களின் மீது இறங்கி சஞ்சரிக்கின்றான் பின்
இறண்டறக் கலந்து விடுகின்றான் எனும் இந்துத்துவ ,
கிருஷ்த்தவக் கொள்ளை .
அல்லாஹ் கூறுகின்றான் ...
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ
ثَالِثُ ثَلاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلاَّ إِلَهٌ
وَاحِدٌ وَإِنْ لَمْ يَنتَهُوا عَمَّا يَقُولُونَ
لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ
أَلِيمٌ المائدة (73)
'அல்லாஹ் மூன்று கடவுள்களில்
மூன்றாவது கடவுளெனக் கூறிய (அதாவது அல்லாஹ்
இயேசுவிலும் அவர் தாயிலும் இறங்க அவர்களும் கடவுளாகி
விட்டார்கள் எனக் கூறிய கிருஷ்த்தவர்கள்) காபிர்களாகி
விட்டார்கள் . ( உண்மைக் ) கடவுள் ஒரே கடவுளேயன்றி
வேறில்லை . அவர்கள் தாம் சொல்வதை விட்டும் விலகிக்
கொள்ளாவிடில் அவர்களில் ( இக் கொள்கை மூலம் )
காபிர்களாகி விட்டவர்களை கடுமையான வேதனை பிடித்துக்
கொள்ளும் . அவர்கள் அல்லாஹ்விடத்தில் (தமது
இக்கொள்கையை விட்டு விட்டு ) தவ்பாச் செய்து பாவ
மீட்சி பெற வேண்டாமா ? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும்
கிருபையுடையவனுமாகஇருக்கின்றான். . (அல்குர்ஆன்
: மாயிதா 73 . )
எனவே சூபிகள் உருவாக்கிய தரீக்கத் எனும் ஷைத்தானியக்
கோட்டையிலே ஷைக் எனப்படுபவர்தான் அல்லாஹ்வின் அனைத்து
ஆற்றல்கள் , சக்திகள், வல்லமைகளும் பெற்றவராகக்
கருதப்படுவார். அவரின் சீடர்களுக்கு அவர் குருநாதர்
மாத்திரமல்ல கடவுளும் அவர்தான் . ஷைகுக்கு தெய்வீகத்
தன்மைகள் - கடவுளின் சக்திகள் இருப்பதை ஏற்றுக்
கொள்ளாத சிஷ்யன் நிச்சயமாக உண்மையான வெற்றிப் பாதையை
அடைந்து கொள்ள மாட்டான். வெற்றிப் பாதையெனப்படுவது
இவர்களிடத்தில் வஹ்தத்துல் வுஜூத்-
கண்ணால் காண்பதெல்லாம் கடவுளே .. எனும்
கொள்கையைக் குறிக்கும். ஆம் நரகத்துக்குரிய இலவச
நுழைவுச் சீட்டை வென்று தரும் பாதை இதுதான் ..
சந்தேகமேயில்லை . தனது ஷைக் கடவுளின் வல்லமைகள்
பெற்றவர்,சக்திமிக்கவர் என எண்ணும் சீடனுக்குக் காலப்
போக்கில் 'ஜத்பு ' (பைத்தியம் போன்ற சுய நினைவற்ற)
நிலை ஏற்படும் .அதன் பின் அவன் தனது ஷைக்கையே
கடவுளாகக் காண்பான் என்பதே தரீக்கத் போதிக்கும் தத்துவ
மாகும். இந்தப் பேருண்மையை?? விளங்கிக் கொள்ளவே
தரீக்காவிற்குப் பிரவேசிப்பது அவசியம் அங்கிருந்து
நேரே நரகம்தான் !!!. .இதைப் பகிரங்கமாக மக்கள்
மத்தியில் சொன்னால் ஷைக்மார்களுக்கு அவர்கள் பைத்தியக்
கிறுக்கர்கள் என்று பட்டம் சூட்டி விடுவார்கள் என்பது
மட்டும் உண்மை .
الحقيقة ஹகீக்கத். (ரகசியம் )
ஹக்கீக்கத் எனப்படுவது சூபிகளின் ஷைத்தானிய அடிப்படை
விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது . தன்
வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன்
மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூபிகளை
நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு
கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும்
பாதாளக் குழியில்த் தள்ளி தம்மைத் தவிர வேறு யார் எது
சொன்னாலும் கேட்கக் கூடாது எனும் பைத்திய நிலைக்கு
அவனை ஆளாக்கி அவனிடம் பைஅத் - ஞான தீட்சை ? பெற்ற
பின்னர் அவனுக்கு சூபிகள் கற்றுக் கொடுக்கும் ஒரு
இரகசியம்தான் இந்த ஹகீக்கத் எனும் சமாச்சாரம் .
அவர்களின் கருத்துப்படி இது ஒரு ரகசியம் இது தான்
உண்மை - யதார்த்த நிலை . ஆனால் இவ்வுண்மை அனைவருக்கும்
தெரிவதில்லை. அவர்களிடம் ஞானதீட்சைபெறாதவர்களுக்குத்
தெரிவிப்பதுமில்லை . காரணம் இவர்கள் கூறும்
பைத்தியகாரத் தனமான உளறல்களையும் , சாத்தானிய
வசனங்களையும் , பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனைக்
கட்டுக் கதைகளையும் நம்பி ஏமாறும் நிலையில் எந்தப்
பாமரனும் இல்லை . எனவே இவனால் எழுப்பப்படும் கேள்விகளுக்குக் கூட இவர்களால் விடையளிக்க முடியாது .ஒன்றுமறியாத பாமரனும் இவர்கள் கூறுவதைக் கேட்டால் இவர்களின்
குடுமியைப் பிடித்து ஆதாரம் கேட்பான். ஆப்பிழுத்த
குரங்கு போல அவனிடம் மாட்டித் தவிக்க நேரிடும் .
ஆதாரம் இருந்தால் தானே சமர்ப்பிக்க முடியும் .
இந்துப் புராணங்களில் , யூத கிருஷ்த்தவ , கிரேக்க
தத்துவங்களில் வேண்டுமானால் ஆதாரம் கிடைக்கலாம் .
குர்ஆன் ஹதீதில் கிடைக்குமா ? அதனால்
தான் தமது
சூபித்துவ வலையில் வீழ்ந்து தீட்சை பெற்று -- மூளையை
அடகு வைத்து மூடனாகி விட்டவர்களிடம் மாத்திரமே இந்த
ஹக்கீக்கத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் . அதுவும்
அவனாக குருவின் அனுமதியின்றி எவரிடத்திலும் இது பற்றி
வாய் திறக்கக் கூடாது எனும் நிபந்தனையுடன்...
அது என்ன ரகசியம் ? என்ன ஹக்கீக்கத் ? என்று
பார்ப்போம் .
அதாவது இப்பிரபஞ்சமே அல்லாஹ்தான் அவனின் வெளிப்பாடே
இப்பிரபஞ்சம் என்பதைத் தெரிந்து கொள்வதே ரகசியம். நாம்
பார்க்கும் ,கேட்கும், தொடும் அனைத்துமே ,,, நான், நீ,
அவன், அவள், அது, வானம் ,பூமி சந்திரன் சூரியன் ஆடு
மாடு ஏன் நாய் பன்றி அனைத்துமே அல்லாஹ்தான். கடலிலுள்ள
நீர்தான் அலையாகவும் , நுரையாகவும் ,உப்பாகவும்
பரிணமித்திருப்பது போல் அல்லாஹ்தான் இப்பிரபஞ்சமாகத்
தோற்றம் தருகின்றான் அனைத்துப் பொருள்களுக்கும்
சேர்த்துத்துத்தான் அல்லாஹ் எனப்படும் என்பதே
இப்பைத்தியர்களின் மஃரிபத் எனும் மூடத் தத்துவம் . இதை
அறிந்தவர் தான் ஞானி - ஆரிப் என இவர்களிடம்
அழைக்கப்படுவார் .
பிரபல சூபி கஸ்ஸாலி சொல்கின்றார் ...
அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார் . ஏனெனில் அனைத்து
வஸ்துக்களுமே அவனிலிருந்தே , அவனை நோக்கியே , அவன்
மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே ...( இஹ்யாஉலூமுத்தீன். 1—254 )
தொடர்ந்து கஸ்ஸாலி சொல்கின்றார் ..
மெஞ்ஞானிகள் ( ரகசியம் ) ஹகிக்கத் எனும் வானில்
உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே
(அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்துஒருமித்துத் கூறுகின்றனர் .
எனினும் சிலருக்கு இந்நிலை தெட்டத் தெளிவாக அறிவியல்
ரீதியாகப் புலப்படும் . (அவர்கள் இந்த ரகசியத்தால்
குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ
அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள்.
அப்படியானவர்கள் எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில்
மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து )
غيرية ) வேறொன்று என்ற வார்த்தை - பன்மை என்பதே
அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும் . அவர்களின்
விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது
. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும் . இதனால் ஏற்பட்ட
அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன்
காரணத்தினாலேயே
அவர்களில் சிலர் 'நான் தான் அல்லாஹ் ' என்றும் , வேறு
சிலரோ ' நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை
மிக்கவன் ' என்றும் , வேறு சிலர் 'எனது ஜூப்பாவிலும்
அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை ' என்றும்
கூறியிருக்கின்றார்கள் .(மிஸ்காதுல் அன்வார் .ப : 122)
கஸ்ஸாலி சொல்கின்றார் ...
ஆரிபீன்கள் சொல்கின்றார்கள் 'நாங்கள் நரக
நெருப்புக்குப் பயப்படவுமில்லை. சொர்க்கத்துக்
கன்னியர்க்கு ஆசைப்படவுமில்லை எங்கள் நோக்கமே இறை
தரிசனமே. அவன் எம் கண்களுக்குப் புலப்படாமல் கணப்
பொழுதேனும் தடைப்படக் கூடாது என்றே நாங்கள்
யாசிக்கின்றோம்'. ( அல் இஹ்யா 4--22 )
இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்...
ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே
காண்பார் . ஒவ்வொரு பொருமே அவருக்கு அல்லாஹ்வாகத்தான்
தென்படும் . முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு ஞானிக்கு பிற
மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய
சிலைகள்,விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி -
வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும்
இலாஹ் - அல்லாஹ் என்றே அழைத்தார்கள் . அந்த ஒவ்வொரு
சிலைக்கும் கற்சிலை ,பொற் சிலை , வெங்கலச் சிலை என
தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் - அல்லாஹ்
எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை
அழைத்தார்கள் .
( புஸூஸூல் ஹிகம் - இப்னு அரபி ப: 192 )
இதுதான் வழிகெட்ட இந்த ஸூபிகள் சொல்லும் ரகசியம் .??
இது வழிகேட்டின் உச்சம் , இதற்கும் இஸ்லாத்திற்கும்
எள் முனையளவும் சம்பந்தமில்லை. மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப்
பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான் .
இது சுத்த பைத்தியகாரர்களின் உளறல் . முற்றிய
பைத்தியம் என்பதைச் சாதாரண பைத்தியகாரன் கூடச்
சொல்வான் . அல்குர்ஆனின் அனைத்து வசனங்களிலும்
இக்கொள்கை குப்ர்., கலப்பற்ற ஷிர்க்
என்று விபரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால்
அறிந்து கொள்ள முடியும்
|