بسم الله الرحمن الرحيم

சூபித்துவத் தரீக்காக்கள்... 
அன்றும் இன்றும்

ஏ.சீ முஹம்மது ஜலீல் ( மதனீ )

Refer this Page to your friends


கிரேக்க யூனானிய தத்துவங்களில் சூபித்துவம்..

யூனான் ,கிரேக்கம் போன்ற பகுதிகளில் பல்வேறு தத்துவங்களும் கொள்கைகளும் தோற்றம் பெற்றுள்ளன . இவற்றில் மிகப் பிரபலம் பெற்றிருந்த கொள்கைதான் ' ( اسرارإلويس ) 'அஸ்ராரு இல்வீஸ்' எனும் கொள்கையாகும் .யூனானியர்கள் இஸ்கந்தர் என்பவரின் தலைமையில் சிரியா , எகிப்து, ஈராக் போன்ற நாடுகளைக் கைப்பற்றிய வேளையில் அப்பகுதிகளில் இவர்களது கலாச்சாரங்கள் பிரதிபலிக்க ஆரம்பித்தன. இவர்கள் தம் கடவுளை வணங்கமுன் நடனம், ஆடல், பாடல், நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டு ஜத்பு எனும் ஒரு வகை தன்னிலை அறியா போதை நிலைக்கு வருவார்கள் . வஹ்தத்துல் வுஜூத் அனைத்தும் கடவுளிலிருந்து தோன்றியவையே எனும் தத்துவமே இவர்களிடம் இருந்தது .ஒருவகை தெய்வீக நெருப்பே இவர்களின் கடவுளாக இருந்தது (நாமறிந்த நெருப்பல்ல) இந்த தெய்வீக நெருப்பிலிருந்தே அனைத்தும் தோன்றி இறுதியில் அவை அழிந்து நெருப்புடன் நெருப்பாக சங்கமிக்கின்றன என நம்பி வந்தார்கள் .(றஸாயிலு இப்னு ஸப்ஈன் ப :268)

கிருஷ்தவத்தில் சூபித்துவம் .
கிருஷ்த்துவ மதத்தில் முன்பிருந்தே துறவறம் கடைப்பிடிக்கப் பட்டு வந்ததை அல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.


وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَامَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلاَّ ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا فَآتَيْنَا الَّذِينَ آمَنُوا مِنْهُمْ أَجْرَهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ( حديد 27 )
 

'நாங்கள் அவர்களுக்குத் துறவறத்தைக் கடமையாக்க வில்லை அதை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டார்கள். ( அல்ஹதீத் 27)

கிருஷ்த்துவுக்குப் பின் இரண்டாம் நூற்றாண்டுகளில் சூபித்துவத் தத்துவம் கிருஷ்த்தவ மதத்திலும் ஊடுருவ ஆரம்பித்தது.

الغنوسية) )அல்கனூஸிய்யா எனும்பெயரிலேயே கிருஷ்த்தவ மக்களிடையே இது அறிமுகமானது . கனூஸிய்யா என்பதற்கு மெஞ்ஞானம் என்று பொருள்ப்படும் . கனூஸிய் என்பவர் மெஞ்ஞானியாவார் . ஆரம்பத்தில் கிருஸ்த்தவத் திருச்சபை இந்த அத்வைத சூபித்துவத் தத்துவத்தை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் காலப் போக்கில் அதனை அங்கீகரித்து விட்டது . இவர்களில் ஒரு பிரிவினர் ஹூலூல் -இத்திஹாத் - அதாவது மனிதனில் கடவுள் அவதரிக்கின்றான் எனும் கொள்கையிலும் இன்னும் ஒரு பிரிவினர்; படைப்புக்கள் அனைத்துமே கடவுளின் வெளிப்பாடே எனும் வஹ்தத்துல் வுஜூத் கொள்கையிலும் இருக் கின்றனர் .

கதீஸா திரேஸா எனும் கிருஸ்த்தவப் பாதிரி இப்படிக் கூறுகின்றார்.
'மனித ஆத்மா இறை ஆன்மாவுடன் இணைவதென்பது எரியும் இரு மெழுகுதிரிகளைப் போன்றதாகும். ,இரண்டும் வெவ்வேறாக எரிந்தாலும் அவற்றிலிருந்து வெளிப்படும் பிரகாசம் ஒன்றேயாகும் . ( இயேசுவின் போதனைகள் ப : 212)

இன்னொரு கிருஷ்த்தவப் பாடலில்...
'இதோ காதலனே .. நான் உன்னிடம் பிரசன்னமாகி விட்டேன் . நான் உன்னை நெருங்க வேண்டும் . எனது இந்த சிற்றுடல் உன் உடலுடன் சங்கமிக்க வேண்டும் . என்னுயிர்; என் காதல்க் கடவுளின் கைகளில் தவழ வேண்டும் . ( உமர் பாரிலின் கவிதைகள் ப : 77)

எனது காதல் கடவுள் .. மலைகளும் அவனே ஓடைகளும் அவனே, ,மரங்களும் அவனே , தீவுகளும் அவனே , நதிகள் ,காற்று இரவு அனைத்தும் அவனே ,.. (மஜல்லதுல் அரபி இதழ் : 305 ப: 40 )


இந்து மதத்தில் சூபித்துவம் .

இந்து மதம் பற்றி தெளிவானதொரு முறையில் வரைவிலக்கணப்படுத்திக் கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது . காரணம் ஒன்றுக்கொன்று முறண்பட்ட பல்வேறு கொள்கைகளின் கூட்டுக் கலவையே இந்து மதமாக உள்ளது . இருப்பினும் குறிப்பிட்ட ஒருசில விடயங்களில் மாத்திரம் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை நிகழ்வதைக் காண முடிகின்றது .

இந்துக்களின் வர்ணாச்சிரமக் கொள்கையின்படி மனிதன் கடவுளிலிந்தே பிறக்கின்றான் . கடவுள் சிலரைத் தனது நெற்றியிலிருந்தும் ,சிலரைத் தன் நெஞ்சுப் பகுதியிலிருந்தும் ,வேறு சிலரைத் தன் வயிற்றுப் பகுதியிலிருந்தும் மற்றும் சிலரைத் தனது கால்ப் பகுதியிலிருந்தும் படைத்திருப்பதாகவும் - கடவுளின் தலையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் - உயர்ந்தவர்களென்றும் , காலிலிந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் -தீண்டத்தகாதவர்கள் என்றும் இந்து வேத நூல்களான ரிக் , அதர்வன, யஜூர் போன்றவற்றில் காண முடிகின்றது .

இப்போது புரிகின்றதா? அத்வைதக் கொள்கை எங்கிருந்து வந்த தென்று ,,,
இந்துக்களின் வேத நூலான பகவக் கீதையை அனைத்து இந்துக்களும் தமது வேத நூலாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் அதே போல் ஆதி பராசக்தி எனும் நித்திய ஜீவ ஆத்மா இருப்பதாகவும் நம்புகின்றனர் . சிலர் வேறு பெயர் கூறியும் இதை அழைப்பதுண்டு .

இவர்களிடத்தில் ஆயிரக் கணக்கான கடவுள்கள் இருக்கின்றன . எனினும் பிரதானமான கடவுள்கள் மூன்று என அனைவரும் நம்புகின்றனர் . அவைகளாவன...
1- பிரம்மன் - படைப்பதற்கு , இதற்குப் பரமசிவன் என்றும் சொல்லப்படும் .
2- விஷ்னு – காப்பதற்கு .
3- யமன் - அழிப்பதற்கு .

பகவக் கீதையில் வருவதாவது ...
'காக்கும் கடவுளான விஷ்னு ஒரு முறை மனித உருவெடுத்து கிருஷ்னனின் வடிவில் அருச்சுனன் எனும் தேவரிடத்தில் வந்தார் . ( இவர் பின்பு கடவுளாக மாறி விட்டது வேறு விடயம் .)

அருச்சுனன் : எனக்கு ஒரு புதிருக்கு விடை தெரிய வேண்டும் . நீ எனக்குக் தந்த ஆத்மாவின் ரகசியம் என்ன ? அதனாலேயே நான் அழியாமல் நிலை பெற்றிருக்கின்றேன் . நான் உனது திரு வடிவத்தைக் காண விரும்புகின்றேன் . உன்னைக் காணக்கூடிய சக்தி எனக்கிருப்பதாக நீ நம்பினால் உனது அழிவற்ற ஆத்மா வை வெளிப்படுத்துவாயாக .

கடவுள் : அருச்சுனா.. என்வடிவங்களைப் பார் .. அவை நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றுக்குப் பல நிறங்களும் வடிவங்களும் இருக்கின்றன . இப்பிரப ஞ்சத்தைப் பார் . அதில் நீ பார்க்கும் அனைத்தும் என் உடலிலேயே இணைந்து கலந்திருக்கின்றன . எனினும் உன் மனிதக் கண்களால் என்னைக் காண முடியாது . இருப்பினும்; இயற்கையை வென்ற தெய்வீகக்கண்களை உனக்குத் தருகின்றேன் அப்போது உன்னால் என்னைக் காண முடியும் .
பின்னர் அருச்சுணனுக்கு தெய்வீகக் கண்கள் கொடுக்கப்பட்டதன் பின் பார்த்த போது கடவுளின் உடலிலேயே பல்வேறு வடிவங்களில் முழுப் பிரபஞ்சத்தையும் அவர் கண்டார் . (மேற்கோள்: அல் பிக்ர் அல் பல்ஸபிய்யா அல் ஹின்திய்யா ப :204 )

மனிதன் பண்பட்டு பிரம்மனுடன் இரண்டறக் கலந்து விடும் போது அவனும் பிரம்மனாகி விடுவான் . அவனது உயிர் அமைதி பெற்று விடும். அவன் எதற்கும் ஆசைப்படவோ எதற் காகவும் கவலைப்படவோ மாட்டான்.தான் யார் என்பதையும் தன் நிலை யாது என்பதையும் அறிந்து கொள்ளும் போது அவன் என்னுள் சங்கமித்து குடி கொண்டு விடுகின்றான் . ( அதே நூல் ப: 234 )

எனவே அனைத்தும் கடவுளே எனும் அத்வைதக் கொள்கையும் ஜத்ப் எனப்படும் தன்னிலை மறக்கும் நிலையும், அதன் பின் ஏற்படும் ஏனைய ஷைத்தானியத் தொடர்புகளால் உண்டாகும் வழக்கத்ததுக்கு மாறான சில அதிசயங்களும் சாதி மத பேதமின்றி அனைத்து மதத்தினத்தினரிடமும் இருந்திருப்பதை நாம் அறிய முடிகின்றது . எனவே இதையெல்லாம் கராமத் என்றும் இவர்களையெல்லாம் அவ்லியாக்கள் - இறை நேசச் செல்வர்கள் என்றும் சொல்ல முடியுமா? சிந்திப்போமாக ..

இதே அத்வைதச் சித்தாந்தம் புத்த மதத்திலும் இருப்பதை அறிய முடிகின்றது புத்த மத வேத நூலான 'பாயஸீயசூத்ரா ' எனும் நூலில் இது பற்றி தெட்டத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது விரிவஞ்சி இங்கே அது தவிர்க்கப்படுகின்றது .


எனவே சுருக்கமாகச் சொல்வதெனில் சூபித்துவமும் அதன் ஆணி வேரான அத்வைதக் கொள்கையும் பழமை வாய்ந்தது . தொண்மை மிக்கது . இஸ்லாத்தை நபியவர்கள் அறபுநாட்டில் பிரச்சாரம் செய்வதற்கு முன்பே இந்தக் கொள்கை உலகின் பல பாகங்களிலும் பல்வேறு பெயர்களில் அறிமுகமாகியிருந்தது .பாரசீகம் , இந்துஸ்த்தான் போன்ற இடங்களில் சமயக் கொள் கையாகவும் , எகிப்து , சிரியா , ஈராக் போன்ற பகுதிகளில் ஒரு புதிய சித்தாந்தமாகவும் , அறபுப் பகுதியில் 'கஹானா' (சாஸ்த்திரம்) எனும் பெயரிலும் அறிமுகமாகியிருந்தது . அவ்வாறே எஹூதிகளிடத்திலும் , கிருஷ்த்தவர்களிடத்தில் இக்கொள்கை காணப்பட்டது .

பின்னர் இஸ்லாம் அறிமுகமாகிச் சில நூற்றாண்டுகளின் பின்னர் சில விசமிகளால் இஸ்லாத்திலும் இக்கொள்கை ஊடுருவல் செய்யப்பட்டது . முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற மார்க்க அறிவற்ற சில முக்கிய புள்ளிகளின் செல்வாக்கினால் முஸ்லிம்களின் மத்தியிலும் சில பகுதிகளின் இக் கொள்கை கால்ப் பதிக்க ஆரம்பித்து . அப்பாஸிய மன்னரான அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சிக் காலத்தில் ஹாரித் அத்திமஸ்க்கி எனும் ஒருவன் இக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்தான் . இவன் ஒரு முன்னாள் சூனியக்காரன் . பிற்பாடு தன்னை நபியென வாதித்தான் . தனக்கு இறைவனிடமிருந்து வஹீ வேத அறிவிப்பு வருவதாகவும் வாதித்தான் . ஆனால் இவனிடம் வந்தது கெட்ட ஷைத் தான்கள்தான் . தன்னுடைய குப்ர் இறை மறுப்பின் காரணமாக ஷைத்தானியத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சில வழக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்ய ஆரம்பித்தான் .

 ஏமாந்த சில பாமர மக்கள் இதையும் கராமத் என நினைத்து அவன் பின்னால் செல்ல ஆரம்பித்தனர் . உண்மையில் ஷைத்தானியத் தொடர்புகளை ஏற்படுத்தக் கொண்டு அதன் மூலம் செய்த்தான்கள் இவனுக்குச் செய்துகாட்டும் வித்தைகளே இவை . பொது மக்களின் ஈமானுக்கு அச்சுறுத்தலாகவிருந்த இவனது செயற்பாடுகளை அவதானித்த அக்கால மன்னர் இவனை அழைத்து விசாரித்து விட்டு அவனுக்கு மரண தண்டனை விதித்தார் . ஆனால் அவனைக் கொலை செய்ய முற்பட்ட போதும் முடியாமல்ப் போய் விட்டது . அவன் உடலில் ஈட்டி ஏற மறுத்து விட்டது . அவனோடு இருந்த ஷைத்தானின் வேலையே இது . இறுதியில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று சொல்லி அம்பெய்த போது அது அவனைத் தாக்கியதும் அவன் இறந்தான் .

எனவே சூபித்துவத் போர்வையில் அத்iவைதக் கொள்கையுடைய இவர்களிடமிருந்து சில அதிசயங்கள் ஏற்பட்டால் அதைக் கண்டு பாமர முஸ்லிம் மக்கள் மிரண்டு ஆச்சரியப்பட்டு இவர்கள் இறை நேசச் செல்வர்கள்தான் என்று முடிவு செய்து கொண்டு அவனின் காலில் விழுந்து கும்பிடுவதற்குக் தயாராகி விடுகின்றனர் . இத்தகைய போலி ஷைத்தானிய வித்தைகள் இந்த சூபிகளிடம் மட்டுமல்ல யூத ,கிருஷ்த்தவ ஏன் இந்து பௌத்த மத குருக்களுக்கும் இடம்பெறுகின்றனவே என்பதை யோசிக்க மறந்து விடுகின்றனர் .
 

உங்கள் கருத்துக்கள் - விமாசணங்களை எழுத

தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends