بسم الله الرحمن الرحيم

"வெற்றிக் கப்பல்"

Refer this Page to your friends

அல்லாஹ்வின் பேரருளால் இன்று தமிழ் மொழியிலேயே தூய இஸ்லாத்தினை அறிய பல வாய்ப்புகள் உள்ளன. இந்த மார்க்கத்தின் அடிப்படையாம் குர்ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்க்கைமுறையை நாம் தெளிவாக அறிநது கொள்ள தமிழில் பல நூல்கள் உள்ளன.

அவற்றில் ஒன்று தான் "வெற்றிக் கப்பல்" எனும் நூலாகும். இது அரபி மொழியில் டாக்டர் முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அல் உரைஃபி அவர்களால் எழுதப்பட்டு அல்-ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையத்தில் பணிபுரியும் சகோதரர் முஹம்மத் அஸ்ஹர் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஓர் இறைக் கொள்கையை மிகத் தெளிவாக கூறும் இந்த சிறிய நூலினை நமது தளத்தில் வெளியிட சகோதரர் பாசில் கான் அவர்கள் அனுமதி பெற்று தந்துள்ளார்கள். அனுமதி அளித்த சகோதரர் முஹம்மத் அஸ்ஹர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நூலை ஏகத்துவத்தின் கப்பலாக, நூஹ் நபி(ஸல்) கப்பலாக நூலின் ஆசிரியர் கருதி இதற்கு "வெற்றிக் கப்பல்" என்று பெயரிட்டுள்ளார்கள். நிச்சயமாக இதில் ஏறி பயணிப்பவர்கள் (செயல்படுபவர்கள்) வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி.

மூல ஆசிரியர் தமிழாக்கம்
டாக்டர் முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அல் உரைஃபி
email:- arefe@arefe.com
த. பெ. 151597, ரியாத் 11775
சவுதி அரேபியா.
முஹம்மத் அஸ்ஹர்
இஸ்லாமிய அழைப்பாளன்
அல்-ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்,
சவுதி அரேபியா.

அன்புடன்: காஜா முயீனுத்தீன், அல் கப்ஜி, சவுதி அரேபியா.


Refer this Page to your friends