بسم الله الرحمن الرحيم

இறைநம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பவை

Refer this Page to your friends

இதில் மார்க்கத்தைப் பரிகசித்தல் மிக அபாயகரமானதாகும். இது ஒருவனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும்.
அல்லாஹ் தனது திருமறையில்,
'அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்? (என்று நபியே கேட்பீராக!) நீங்கள் (செய்யும் பரிகாசத்திற்கு வீண்) சாக்குப் போக்கு கூறவேண்டாம், உங்களின் விசுவாசத்திற்கு பின்னர், திட்டமாக (அதனை) நீங்கள் நிராகரித்தே விட்டீர்கள்' (அத்தவ்பா 9:65,66)

சிலர் இஸ்லாம் பழமையான ஒரு மார்க்கம் நமது காலத்துக்குப் பொருந்தாது அல்லது அது பிற்போக்கானது மீளாய்வு செய்யப்பட வேண்டியது அல்லது மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை விடச் சிறந்தது என்ற சிந்தனையைக் கொண்டிருப்பதோ, அல்லது ஏகத்துவத்தின் பால் அழைப்பவர்களை (கப்று வணக்கத்தை தர்கா வழிப்பாட்டை நிராகரித்து அதிலிருந்து மக்களைக் காக்க முயல்பவர்களை) மாற்றுக் கொள்கைக்காரர்களின் அடிவருடிகளென்றோ, வஹ்ஹாபிகள், முஸ்லிம் கூட்டமைப்பை பிரிக்கக்கூடியவர் என்று சொல்வதோ, அவர்களது ஈமானுக்கே ஊறுவிளைவிக்கும் காரியங்களாகும்.

அல்லாஹ்வால் அருளப்படாததைக் கொண்டு தீர்ப்பு வழங்குவதும் ஈமானில் பெரியளவில் குறையை ஏற்படுத்தும்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்ளுதல் என்பது, வேண்டி நிற்பது அவனது மார்க்கத்தின் சட்டங்களை சொல்லில், செயலில் தீர்ப்புகளில் சொத்து செல்வம் சம்பந்தமான பிரச்சனைகளில் முன்னிலைப் படுத்தி அதன் வழிகாட்டலுக்கேற்ப தீர்ப்பு வழங்குவதாகும். அனைத்து உரிமைகளிலும் ஆட்சியாளர்கள் அவன் இறக்கியருளியதன் படி தீர்ப்புச் சொல்வது கட்டாயமாகும்.

மக்கள் பொறுப்பில் உள்ளவர்கள் அல்லாஹ் அருளியதற்கேற்ப தமது பிரஜைகளை நடத்த வேண்டும். அல்லாஹ் இறக்கியருளியதைக்; கொண்டு தீர்ப்பளிக்காது தான் ஒரு முஃமின் -இறை விசுவாசி என்று வாதிடுவது போலித்தனமானதாகும். அதுவும் ஈமானும் ஒன்றுசேர முடியாது.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான், 'ஆனால் உமதிரட்சகன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் அடையாமல் முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள்' (அன்னிஸா 4:65)
'இன்னும் அவன் சொல்கிறான், எவர் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் தாம் நிராகரிப்பாளர்கள்' (அல்மாயிதா 5:44)

வியாபாரம், கொடுக்கல், வாங்கல், குற்றவியல் சட்டங்கள், களவு, விபச்சாரம் ஏனையவை அனைத்திலும் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்புகள் பெறுவது - வழங்குவது கட்டாயமாகும். ஒரு சிலர் நினைப்பது போல திருமணம், விவாகரத்து விஷய
ங்கள், தனியார் சட்டங்களில் மாத்திரம் இஸ்லாமிய முறைப்படி நடப்பதால் மாத்திரம் இறைசட்டத்தின்படி தீர்ப்பளித்ததாக ஆகாது. ஒருவன் மக்களுக்கென சில சட்டங்களை இயற்றி விட்டு அது இறை சட்டத்தை விட சிறந்ததென்றோ அல்லது அதற்குச் சமமானதென்றோ, அதுதான் இக்காலத்திற்க்கு மிகப் பொருத்தம் என்றோ கருதினால் அவர் காபிராக -இறை மறுப்பாளராக ஆகி விடுகின்றார்.
ஆம் அல்லாஹ் கூறுகின்றான்........
'மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதியளிக்க வில்லையோ அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா?' (அஷ்ஷுரா 42:21)
மற்றுமோர் இடத்தில்: 'அறியாமைக் காலத்துத் தீர்ப்பினையா அவர்கள் விரும்புகின்றனர்? உறுதியாக நம்பிக்கைக் கொண்ட சமூகத்தார்க்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வைவிடவும் மிக்க அழகானவன் யார்?' (அல்மாயிதா 5:50)

'அவர்கள் தங்களது பாதிரிமார்களையும், சன்னியாசிகளையும் அல்லாஹ்வை விட்டு கடவுளர்களாக எடுத்துக் கொண்டனர்! என்ற வசனம் அருளப்பெற்ற பொழுது அதிய் இப்னு ஹாதிம் எனும் நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே நாம் அவர்களை வணங்கவில்லையே? என்று வினவினார். அல்லாஹ் உங்களுக்குத் தடுத்ததை அவர்கள் உங்களுக்கு ஆகுமாக்கினர். அதை அப்படியே நீங்களும் எடுத்து நடக்கின்றீர்கள். அல்லாஹ் ஆகுமாக்கிய சிலதை உங்களுக்கு அவர்கள் தடை செய்தார்கள் உடனே நீங்களும் அதை தடையாக எடுத்துக் கொண்டீர்களா இல்லையா? என வினவ அந்த நபித்தோழர் ஆம் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், அதுதான் அவர்களை வணங்குவதென்பது என நபிகள் நாயகம் மறுமொழி பகர்ந்தார்கள்.

காபிர்களுடன் நேசக்கரம் நீட்டி முஃமின்களை எதிரிகளாகக் கருதுதல்.

இதுவும் இறை நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் விஷய
மாகும்.
ஒரு முஸ்லிமானவன் காபிர்களையும், யூதர்களையும், கிறிஸ்துவர்களையும் ஏனைய முஷ்ரிகீன்களையும் விரோதிகளாகக் கணிப்பது கட்டாயமாகும் அவர்களுடனான தோழமை எச்சரிக்கையோடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான், 'விசுவாசங்கொண்டோரே! என்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் - அவர்கள் பால் (உங்கள்) நேசத்தைச் சேர்த்துவைக்கின்ற நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம், (ஏனென்றால்) சத்தியத்திலிருந்து உங்களிடம் வந்த வேதத்தை திட்டமாக அவர்கள் நிராகரித்தும் விட்டனர்' (அல்மும்தஹினா 60:1)
இதை விட ஒரு படி மேலாக பெற்றோர்கள், சகோதரர்கள் கூட காபிர்களாக-இறை நிராகரிப்பாளர்களாக இருந்தால் அவர்களுடன் நேசம் பாராட்டுவதைக் கூட அல்லாஹ் தடுத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான், 'அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசங் கொண்ட சமூகத்தினரை, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீர் காண மாட்டீர், அவர்கள் தங்களின் பெற்றோர்களாயினும், அல்லது தங்களின் ஆண் மக்களாயினும், அல்லது தங்களின் சகோதரர்களாயினும் அல்லது தங்களின் குடும்பத்தினராயினும் சரியே' (அல்முஜாதலா 58:22)

இந்தக் கருத்தை வலியுறுத்தி பல வசனங்கள் குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. அனைத்து வசனங்களும் காபிர்களை வெறுப்பதையும் அவர்களை எதிர்ப்பதையும் தெளிவாகச் சொல்லித் தருகின்றன. அவர்கள் அல்லாஹ்வை நிராகரிக்கிறார்கள், அவர்கள் மார்க்கத்துக்கு எதிரிகள், அவர்கள் இறைநேசர்களுக்கு எதிரிகள், இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சூழ்ச்சிசெய்யக்கூடியவர்கள். என்றெல்லாம் குர்ஆனில் பல வசனங்கள் இடம் பெறுகின்றன.
அல்லாஹ் தனது திருமறையில், 'மேலும் அவர்களுடைய வாய் (ச் சொற்)களிலிருந்தே (உங்கள் மீதுள்ள அவர்களுடைய) கடுமையான வெறுப்பு திட்டமாக வெளிப்பட்டுவிட்டது, (உங்களைப்பற்றி) அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவையோ மிகப்பெரிதாகும். நீங்கள் விளங்கிக் கொள்பவர்களாக இருந்தால் நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்குத் தெளிவாக்கி விட்டோம், (விசுவாசங்கொண்டோரே) தெரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள், அவர்களோ, உங்களை நேசிப்பதில்லை, நீங்கள் வேதங்கள் யாவற்றையும் விசுவாசிக்கிறீர்கள், இன்னும், அவர்கள் உங்களைச் சந்தித்தால், நாங்கள் விசுவாசங் கொண்டு விட்டோம் என்று கூறுகின்றனர், இன்னும் (உங்களிலிருந்து விலகி) தனித்து விட்டாலோ, (உங்கள் மீதுள்ள) ஆத்திரத்தினால் (தங்கள் கை) விரல்களின் நுனிகளைக் கடித்துக் கொள்கின்றனர், ஆகவே (நபியே! அவர்களிpடம்) நீர் கூறுவீராக! உங்கள் ஆத்திரத்திலேயே நீங்கள் இறந்து விடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிகின்றவன். உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்படின், (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது, உங்களுக்கு யாதொரு தீங்கு ஏற்பட்டாலோ, அதற்காக அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர், ஆகவே நீங்கள் பொறுமையுடனிருந்து, (அல்லாஹ்வை) பயந்தும் கொள்வீர்களாயின், அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு யாதொரு தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றைச் சூழ்ந்து அறிகிறவன்'. (ஆலு இம்ரான் 3:118-120)

யூதர்கள்;;;, கிறிஸ்துவர்கள் தற்காலத்தில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போர்ப் பிரகடனங்கள் செய்வதோடு, மக்களை இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத்தும் முயற்சிகள், இஸ்லாம் எனும் வழியை விட்டும் தடுக்க தமது பொருளாதாரத்தை செலவு செய்தல், அதற்கான சதித்திட்டங்களில் ஈடுபடுதல் போன்றவைகள் ஒழிவு மறைவின்றி அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.

தற்கால முஸ்லிம்கள் காபிர்களுடன் கொள்ளக்கூடிய நட்புக்குப் பல வடிவங்கள் இருக்கின்றன. அவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் எந்த நோக்கமுமின்றி அவர்களுடன் கலந்து இருத்தல், அவர்களுடன் மிகநெருக்கமாக பழகுதல், அவர்களது நாடுகளில் குடியிருத்தல், எந்த ஒரு அத்தியவசியத் தேவையுமின்றி அவர்களின் நாடுகளுக்குப் பிரயாணித்தல், ஆடை அணிவதில் மற்றும் வெளி நடவடிக்கைகளில், வாழ்க்கையில் அவர்களுக்கு ஒப்பாகுதல், அவர்களது மொழியில் எந்தத்தேவையுமின்றிக் கதைத்தல் போன்ற அனைத்தும் இந்த வகையிலேயே அடங்கும். இவை அனைத்தும் இறை நம்பிக்கையில் பெரியளவில் பாதிப்பேற்படுத்தக் கூடியவைகளே!

இன்னும் நம்பிக்கையில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவைகள்

நபித்தோழர்களை, நபியுடைய குடும்பத்தினரைக் குறைத்து மதிப்பிடல், அல்லது அவர்களை ஏசுதல் போன்றன மிக அபாயகரமானதாகும்.
நபித்தோழர்களை நேசிப்போம், அதே வேளை அவர்களில் எவரையும் நேசிப்பதில் அளவு கடந்து செல்லக்கூடாது. அலி (ரலி) யாக இருக்கலாம் அல்லது வேறு யாராக இருக்கலாம். இது விஷயத்தில் நம் நம்பிக்கை இவ்வாறு அமைதல் வேண்டும்.

'அவர்களில் எவரையும் வெறுக்க மாட்டோம், அவர்களை வெறுப்பவர்களை நாமும் வெறுப்போம். அவர்களது நன்மைகளைத் தவிர வேறு எதனையும் கூறமாட்டோம்.'
அல்லாஹ் கூறுகிறான், 'முஹாஜிர்களிலும், அன்ஸாரிகளிலும் (இஸ்லாத்தை ஏற்க) முதலாவதாக முந்திக் கொண்டவர்களும், (அவர்களின் சொல், செயல்களாகிய) நற்கருமத்தில் அவர்களைப் பின்பற்றினார்களே அவர்களும் - அவர்களை அல்லாஹ் திருப்தியடைந்தான், அவர்களும் (அல்லாஹ்வாகிய) அவனை திருப்தியடைந்தனர்' (தவ்பா 9:100).

ஸஹாபாக்களுக்கு மத்தியில் பிளவுகள் ஏற்பட்டிருந்தால், போர்கள் நடைபெற்றிருந்தால் அந்த விஷயங்களில் மௌனமாக இருப்பது அவசியம். ஏனெனில் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் நல்லது செய்வதற்கும் தவறிழைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதே ஸுன்னத் வல்ஜமாஅதினர் என்போரின் கொள்கையாகும்.

அல்லாஹ் அந்தக்குழப்பங்களில் நமது வாள்கள்(ஆயுதங்கள்);சம்பந்தப்படுவதை விட்டும் எவ்வாறு பாதுகாத்தானோ, அதே போன்று நமது நாவுகளையும் அவர்கள் விஷயத்தில தவறாக எதையும் பேசி விடாமல் பாதுகாக்க வேண்டும். அவர்களும் மனிதர்களதான். அகிலத்தார் அனைவருக்கும் எஜமான் மறுமையில் தீர்ப்பளிக்கும் போது அவர்களுக்கு மத்தியிலும் தீர்ப்பளிப்பான் என்பதே எமது நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆட்சி தலைமைத்துவம் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அவர் சமுதாயத்தின் தலைமைத்துவத்துக்குச் சிறந்தவராகவும் அதற்கு முற்படுத்தப்பட வேண்டியவராகவும் விளங்கினார். அதற்குப் பின் உமர் (ரலி), அதற்குப் பின் உஸ்மான் (ரலி), அதற்குப் பின் அலி (ரலி) ஆகியோர் இஸ்லாமியத் தலைமைத்துவத்தை முன்னெடுத்துச் சென்றார்கள் ..

மேலும் நம்பிக்கையில் ஊறுவிளைவிப்பவை

நூதன அனுஷ்ட்டானங்கள் (பித்அத்கள்) முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரியதோர் முஸீபத்தாகும். அவைகள் மூலம் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை அடைந்து கொள்ள முடியும் என்று அதிக முஸ்லிம் மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் (மீலாது) விழா எடுத்தல், மௌலிது பாடல்கள் பாடுதல், அதற்கு மத்தியில் எழுந்து மரியாதை செய்தல், அவர்களுக்கு ஸலாம் சொல்லுதல், அவ்லியாக்கள் நல்லடியார்களின் பெயரில் விழாக்கள் எடுத்தல் இவைகள் அனைத்தும் மார்க்கத்தின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட வழிகெட்ட நூதனங்கள் ஆகும். நபியோ ஸஹாபாக்களோ செய்யாத ஒன்று. 'எவர் நமது விஷயத்தில் (மார்க்கத்தில்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துவாரோ அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'ஒவ்வொரு நூதனமும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் தனது திருமறையில், 'இன்றையத் தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்துவிட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாக்கிவிட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை நான் மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்' (அல்மாயிதா 5:3)

இது போன்ற நூதன அனாச்சாரங்களை இவர்கள் நபி (ஸல்) பெயரில் அரங்கேற்றுவதன் மூலம் விளங்குவது யாதெனில் அல்லாஹ் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கவில்லை என்பதுதான்! பிற்காலத்தில் வந்தவர்கள் பல நூதன அனுஷ்டானங்களை ஏற்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற முடியுமென நினைக்கிறார்கள். இது அல்லாஹ்வையும், ரஸுலையும் புறக்கணிப்பதாகும். மௌலிதுகள், பிறந்த நாள் விழாக்கள் என்பதெல்லாம் மார்க்கத்தில் இருக்குமானால், மேலும் அல்லாஹ் அவைகளை பொருந்திக் கொள்வான் என்றால் இறைத்தூதர் அவர்கள் சமுதாயத்துக்கு அவற்றை அறிவித்துக் கொடுத்திருப்பார்கள். அறிஞர்கள் இந்த அனைத்து மௌலிதுகளையும் நிராகரித்திருக்கிறார்கள். ஏனென்றால் இவைகள் அனைத்தும் வழிகெட்ட நூதன வழிபாடுகள். குறிப்பாக நபியின் மீதுள்ள அன்பு, அளவு கடந்து சென்றதே இந்த நூதனங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன.

பெண்கள், ஆண்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்திருத்தல், இசைக்கருவிகளைப் பாவித்தல் போன்ற அனாச்சாரங்களும், நபியிடத்தில் உதவி தேடல், பிரார்த்தித்தல் பாதுகாப்புத் தேடல், இவை போன்ற பெரிய ஷிர்க்குகளும் நிகழ்வதற்கு வழிவகுக்கிறது. இது போன்ற எத்தனையோ நிராகரிப்புக்கு இட்டுச்செல்லும் விஷயங்கள் அங்கு நிகழ்கின்றன.

சிலர் மீண்டும் மீண்டும் புர்தா எனும் பெயரில் அரங்கேற்றும் பூஸரியின் பாடல்களில் நிறைந்து காணப்படும் ஷிர்க்கான வார்த்தைகளைப் பாருங்கள் .


يا أكرم الخلق مالي ألوذ به --- -- سواك عند حدوث الحادث العمم
إن لم تكن آخذا يوم المعاد يدي ---- - صفحا وإلا فقل يا زلة القدم
فإن من جودك الدنيا وضرتها ------ ومن علومك علم اللوح والقلم

 

இதன் அர்த்தத்தில் எத்தனை ஷிர்க்குகள் நிறைந்து கிடக்கின்றன என்று சற்று கவனியுங்கள்.

படைப்புகளில் சங்கை மிகுந்த நபியவர்களே.. (மறுமை நிகழ்ந்தவுடன்) திடுக்கமும், அச்சமும் சூழ்ந்து கொள்ளும் அந்த நேரத்தில் நான் அடைக்கலம் தேடுவதற்கு எனக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கின்றார்...

அந்த மறுமை நாளன்று நீங்கள் எனது கரம் பிடித்து, எனக்கு உதவி செய்ய வில்லையென்றால் நான் கால் தடுக்கி நரகத்தில் விழுவதைத் தவிரவேறு வழியில்லை...

உங்கள் கருனை மிகுந்த அருட்கொடையினாலேயே இவ்வுலகமும், அதன் சக்களத்தியான வானங்களும் நிலை பெற்றிருக்கின்றன. இன்னும் லௌஹூல் மஹ்பூழ் எனும் பலகையிலும், கலம் எனும் எழுதுகோல் பற்றிய அறிவும் உம்மிடம் உள்ள அறிவின் ஒரு பகுதியே...


இது போன்ற இறைபண்புகள், மறைவான ஞானம், மறுமை நாளில் பாவங்களை மன்னிப்பது, இவ் உலகத்திலும் மறுமையிலும் காரியங்களைத் திட்டமிடுவது அனைத்துமே வானங்களையும் பூமியையும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் அல்லாஹ்விற்கு மாத்திரம் உரிய பண்புகளாகும். நபிக்காக நடைபெறும் மௌலிது விழாக்களில் அல்லது வேறு நல்லடியார்களின் பெயரில் நடைபெறும் மௌலிதுகளில் இது போன்ற பெரும் தவறுகள் நிகழ்வதைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். அவர்கள் நாம் இவ்வாறான மௌலிதுகளை கொண்டு ரஸுலை நினைவு கூர்வதற்காகவும், அவரது வரலாறை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவுமே செய்கின்றோம் என்று கூறுகின்றனர். சரி அப்படியானால் ஏன் அதைக் குறிப்பிட்ட ஒரு தினத்தில் நடத்துகின்றீர்கள்? ஏனைய காலங்களிலும் பொது மேடையைப் போட்டு அல்லது கூட்டங்களைக் கூட்டி அவர்களின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே...

சரி இதை ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் என்றே எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் கூறுகின்றான், 'நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் கருத்து வேற்றுமைப்பட்டால் அத(ன்தீர்வி)னை அல்லாஹ் ரஸூலின் பக்கம் விட்டு விடுங்கள்' என்று கூறுகின்றான் இதன் படி நாம் இந்த மௌலீது விவகாரத்தை, அல்குர்ஆனின் ஒளியில் தீர்வு தேடினால் அல்குர்ஆன், நபி (ஸல்) அவர்கள் கூறியபடி வாழுமாறும், மார்க்கம் முழுமை பெற்று விட்டது என்றும்தான் இருக்கின்றது. சரி நபியவர்களிடம் எடுத்துக் கூறி இதற்குக் தீர்வு காண முற்பட்டால் அப்போதும் இவ்வாறான மௌலீதுகளை நபியவர்களோ, ஸஹாபாக்களோ செய்ய வில்லை என்பதே எமக்கு விடையாகக் கிடைக்கின்றது. எனவே இது ஒரு பித்அத் - நபியவர்கள் காட்டித்தராத நூதன அனுஷ்டானம் என்பது தெரிய வருகின்றது. அது மட்டுமல்ல எமது விரோதிகளான யூத கிருஸ்தவர்களிடம் இருந்து காப்பியடிக்கப்பட்ட இவ்வனுஷ்டானங்களை நாமும் புரிவதால் நாம் அவர்களது கலாச்சாரத்தைப் பின்பற்றியதாகவே கணிக்கப்படும். நாம் இப்படியான மௌலிது விழாக்களை மறுக்கிறோம். நபியை பின்பற்றுமாறு புனித இறைவேதம் நமக்குச் சொல்கிறது, இறைவேதம் நமக்கு மார்க்கம் பூர்த்தியாகி விட்டதாக அறிவிக்கின்றது. நபியோ ஸஹாபாக்களோ செய்யாத, நமக்கு கற்றுத்தராத இந்த மௌலிதுகளை விழாக்களை நாம் மறுக்கிறோம். இவைகள் மார்க்கத்தில் உள்ளவைகள் அல்ல. இவைகள் நிராகரிக்கப்பட வேண்டிய வழிகெட்ட பித்அத்துகள், இன்னும் யூதர்களின் கிருஸ்தவர்களின் கொண்டாட்டங்களுக்கு ஒப்பான செயல்கள், மனிதர்களில் அதிகமானவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பார்த்து மனிதனின் புத்தி ஏமாந்து விடக்கூடாது.
அல்லாஹ் தனது திருமறையில், (நபியே) நீர் பூமியில் பெரும்பான்மையானவர்களைப் பின்பற்றினால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியை விட்டு (திருப்பி) வழிகெடுத்து விடுவார்கள்'.
(அல் அன்ஆம் 6:116).

சில ஆச்சரிய நிகழ்வுகள்
இப்படி அனாச்சாரங்கள் நிறைந்த கொண்டாட்டங்களுக்கு வருகை தருவதில் கவனம் செலுத்தும் அதிகமானவர்கள் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ போன்ற தொழுகையில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இன்னும் சிலர் மௌலிது நடக்கும் சபைக்கு நபிகளார் (ஸல்)அவர்கள் வருகை தருகிறார்கள் எனும் மூடத்தனமான நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதனால் தான் நபியை வரவேற்பதற்காக எழுந்து பாடல்களை பாடுகின்றனர் இது வழிகெட்டதும் அறியாமைத்தனமான ஒரு செயலாகும். நபி (ஸல்) அவர்கள் அடக்கப்பட்டு கப்ரில் இருப்பார்கள். மறுமை நாள் சம்பவிக்கும் வரை அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் அவர்களுடைய உயிரோ இல்லிய்யீன் எனும் உயர்ந்த நல்லடியார்களின் உயிர்கள் வைக்கப்படும் இடத்தில் ரப்பிடத்தில் இருக்கின்றது. இதனைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, 'மறுமை நாளில் கப்ரில் இருந்து முதலில் எழுப்பப்படுபவனாக நான் இருப்பேன்'.
நபியின் மீது ஸலாவாத்தும் ஸலாமும் சொல்வதும் (அல்லாஹ்விடத்தில் அருளுக்காகவும் சாந்திக்காவும் பிறார்த்திப்பதுமே) சிறந்த முறையாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் 'நிச்சயமாக அல்லாஹ் நபியின் மீது அருள் புரிகிறான், அவனது வானவர்களும் நபிக்காக அருள்வேண்டி பிறார்த்திக்கின்றனர், முஃமின்களே நீங்களும் நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்'. (அஹ்ஸாப் 33:66).

ஒரு அடியான் நபியின் மீது முழுமையான அன்பு செலுத்தாத வரை அவன் பரிபூரண முஃமினாக மாட்டான் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

நபியவர்களுக்கே உரிய முறையில் அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும், பின்பற்றப்படும் வழிகாட்டியாக அவர்களை எடுத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாம் மார்க்கமாக்கிய வணக்க வழிபாடுளைத்தவிர அளவு கடந்து செல்லக்கூடாது.
அல்லாஹ் தனது திருமறையில், '(நபியே மனிதர்களிடம்) நீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக்கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (அப்போது) அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்களது பாவங்களையும் மன்னிப்பான் அல்லாஹ் மன்னித்து கிருபை செய்யக்கூடியவனாக இருக்கிறான்'. (ஆலு இம்ரான் 3:31).


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Refer this Page to your friends

மற்றப்பகுதிகள்

Refer this Page to your friends