بسم الله الرحمن الرحيم

"தேங்காயை வழிபடும் கூட்டம்"

Refer this Page to your friends

மரித்து விட்டோரை அழைத்துப் பிரார்த்திப்பவர்களே! உங்களிடம் கேட்கிறேன் அவர்கள் இறந்து விட்டவர்கள். நீங்கள் அவர்களது கல்லறைகளில் மண்டியிட்டுக் கொண்டு கண்ணீர் வழிந்தோட அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்களே. அவர்களிடம் பரிந்துரையை செய்யுமாறு கோருகின்றீர்களே!

'நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களுக்கு செவிசாய்க்கிறார்களா? அல்லது அவர்கள் உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்திடத்தான் முடியுமா? (அஷ்ஷுஅரா 26:72)

அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் ஒருபோதும் உங்கள் பிரார்த்தனையைச் செவிமடுக்கவோ உங்களுக்கு எவ்வித உதவியையும் செய்திடவோ முடியாது. மாறாக அவர்கள் மறுமையில் உங்களைக் கைவிட்டு விடுவார்கள். உங்கள் ஆசைகளை நிராசையாக்கி விடுவார்கள்.

ஓர் உண்மைச் சம்பவம்:
பதிமூன்று வயதுச் சிறுவன் செய்த ஒரு வியக்கத்தக்க வியத்தை பாருங்கள். அவன் தனது தந்தையுடன் இந்தியாவுக்குச் சென்றான், இந்தியா ஓர் பெரிய நாடு, அங்குள்ள மக்கள் பல்வேறு கடவுள்களை வணங்கி வழிபட்டு வருகின்றார்கள். மிருகங்கள், தாவரங்கள், மரங்கள், கற்கள், மனிதர்கள், நடசத்திரங்கள் அனைத்தும் அங்கு வணங்கப்படக்கூடிய தெய்வங்களே. அச்சிறுவன் அங்குள்ள ஒரு ஆலயத்திற்குள் நுழைகிறான். மனிதர்கள் அங்கு தேங்காய்க்கு வணக்க வழிபாடுகள் செய்து பூஜிக்கக் கூடிய காட்சியைப் பார்க்கின்றான்.

அவர்கள் அதற்கு இரு கண்கள் மூக்கு, வாய் ஆகியவற்றை வரைந்து வைத்திருக்கின்றனர். அதற்கு உணவு குடி பானங்கள் போன்றவற்றைப் படைத்து, அதன் முன் வாசனைத் திரவியங்களைப் புகைப் போட்டு வைத்துப் பூஜிக்கிறார்கள். அதனைக் கும்பிட்டு சிரம்சாய்த்து வணங்குகின்றார்கள். இவற்றை ஆச்சரியத்துடனும், வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் அவர்கள் தரையில் விழுந்து அதனைக் கும்பிட ஆரம்பித்ததும் ஓடிச் சென்று அத்தேங்காயை எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான்.

அவர்கள் தலையை உயர்த்திப் பார்த்த பொழுது அங்கு அவர்களின் கடவுள் இல்லாதது கண்டு திடுக்கிட்டார்கள். திரும்பிப் பார்த்த பொழுது அவர்களின் கடவுளை அச்சிறுவன் எடுத்துக் கொண்டு ஓடுவதைப் பார்க்கின்றனர். அவர்களுடைய வணக்க வழிபாடுகளை இடைநிறுத்தி விட்டு அவனுக்குப் பின்னால் அனைவரும் துரத்திக் கொண்டு ஓடுகின்றனர். அவனோ அவர்களை விட்டும் மிகத் தூரம் சென்றதன் பின் ஒரு இடத்தில் அமர்ந்து அந்தத் தேங்காயை உடைத்து அதன் நீரைப் பருகுகிறான், பின் மிகுதித் தேங்காயை தூரத்தில் எறிந்து சுக்கு நூறாக உடைத்து விட்டான்.


அவர்கள் அங்கு வந்து பார்த்த பொழுது கடவுள் உடைக்கப்பட்டு சிதறிக் கிடந்ததைக் கண்டு உறுமுகின்றனர். கூப்பாடு போடுகின்றனர், ஆத்திரத்துடன் அவனைப் பிடித்து அவர்களின் கோபம் தீரும் வரை நைய்யப் புடைக்கின்றனர். பின்னர் அவ்வூரின் நீதிபதியிடம் அவனை அழைத்துச் செல்கிறார்கள்.

அவனிடத்தில் ஊரின் நீதிபதி நீதானா கடவுளை உடைத்தது என்று கேட்டார்;? சிறுவன் இல்லை நான் வெறும் தேங்காய் ஒன்றைத் தானே உடைத்தேன் என்று கூறினான். நீதிபதியோ இல்லையில்லை அது அவர்களது கடவுள் அதை எப்படி நீ உடைக்க முடியும் என்று குறுக்கீடு செய்தார்;.

சிறுவனோ சற்றும் தயங்காமல் கேட்கிறான், நீதிபதியவர்களே! நீர் உமது வாழ்நாளில் தேங்காயை உடைத்ததில்லையா? அதனைச் சாப்பிட்டதில்லையா? என்று மிடுக்குடன் கேட்டான்.

அதற்கு ஆம்! உடைத்திருக்கின்றேன் என்று நீதியரசர் பதிலளித்தார். அப்படியென்றால் நான் இப்போது உடைத்த இந்தத் தேங்காய்க்கும் நீங்கள் இதுவரைக்கும் உடைத்துச் சாப்பிட்ட தேங்காய்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று நீதிபதியை நோக்கி ஒரு போடு போட்டான். நீதிபதி இச்சிறுவனின் மிடுக்கான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பரிதாபத்துடன் தலையைப் பிய்த்துக் கொள்ள ஆரம்பித்தார். அதன் பின்னர் தேங்காயை வணங்கக் கூடியவர்களை நோக்கி இதற்கு என்ன பதில் கூறுவது என்பது போல் அவர்களின் பதிலை எதிர்பார்க்கிறார்.

அவர்களோ விட்டுக் கொடுக்காமல் அந்தத் தேங்காய்க்கு இரு கண்கள் இருக்கின்றன, வாய், மூக்கு போன்றன இருக்கின்றன எனவே அதுவும் ஏனைய தேங்காய்களும் எவ்வாறு சமனாக முடியும் எனத்தர்க்கித்தனர்.

சிறுவன் மறுபடியும் அவர்களிடம் கேள்விக் கனைகளை தொடுக்கிறான், அது பேசுகிறதா அல்லது நீங்கள் கேட்பவற்றுக்கு பதிலளிக்கின்றதா? என்று கேட்டான் அதற்கு அவர்கள் இல்லையென்று பதிலளிக்கின்றனர். அப்படியானால் அதை எப்படி வணங்குவீர்கள், நீங்கள் சிந்திக்க வேண்டாமா? என்று அவர்களிடம் வினவ அதற்கு பதிலளிக்க முடியாமல் அந்த சிலை வணங்கிகள் வாயடைத்துப் போனார்கள்.


'ஆகவே நிராகரித்த அவன், (பதில் கூற இயலாது) திகைப்பில் ஆழ்த்தப்பட்டான். மேலும் அல்லாஹ், அநியாயம் செய்து கொணடிருக்கிற கூட்டத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்' (அல்பகரா 2:258)


அதன் பின்னர் நீதிபதி நிலமை விபரீதமாகச் சென்று அவர்கள் இச்சிறுவனுக்கு ஏதேனும் அநியாயம் செய்து விடுவார்களோ எனப் பயந்து அச்சிறுவன் மீது 150 இந்திய ரூபாய்களை அபராதமாக விதிப்பதாகத் தீர்ப்பளித்தார். சிறுவனும் இன்முகத்துடன் அத்தொகையைச் செலுத்தி விட்டு வெற்றிப் புன்னகையுடன் வெளியேறினான்.


இது போதாதென்று கப்ர் வணக்கத்தோடு தொடர்புடைய இவர்கள், அவர்களிடம் தமது தேவைகளைக் கூறி அவர்களைக் கண்ணியப்படுத்திப் பிரார்த்திப்பது ஒரு புறமிருக்க தாம் கஷ்டப்பட்டு தேடிய செல்வங்களையும், திரவியங்களையும் இக்கப்றுகளை அலங்கரித்து அழகு படுத்துவதற்கும், அதனை நிலத்திலிருந்து உயர்த்திக் கட்டுவதற்கும், அதன் மீது அழகிய கோபுரங்களை எழுப்புவதற்குமே விரயம் செய்கின்றனர்.


கப்ருகள் மீது கட்டப்படும் தர்ஹாக்கள் நினைவு மண்டபங்களை இரு வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது வகை... முஸ்லிம்களின் பொது மையவாடிகளில் இவ்வாறான மனாராக்கள் அல்லது தர்ஹாக்களை குறிப்பிட்ட வலியின் கப்ரைச் சூழக் கட்டுதல்.

இரண்டாவது வகை... அவைகளை மஸ்ஜித்களில் கட்டுவது அல்லது மஸ்ஜித்களை அங்கு நிர்மானிப்பது அது சில வேளை மஸ்ஜிதின் கிப்லா பக்கம், அல்லது பின்னால், அல்லது ஒரு பகுதியில் அமைந்திருக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இச்செயல்களை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள் 'யா அல்லாஹ் எனது கப்ரை வணங்கப்படக்கூடிய இடமாக ஆக்கிவிடாதே! நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றியவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக'. எனக் கூறினார்கள். அது அவர்களுடைய கப்ராகவோ அல்லது வேறு யாருடைய கப்ராகவோ இருக்கலாம்.

அலி (ரலி) அவர்கள், ஒரு முறை அபுல் ஹய்யாஜ் என்பவருக்கு இப்படிச் சொல்கிறார்கள், 'அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பிய ஒரு காரியத்திற்காக இப்பொழுது நான் உன்னை அனுப்புகிறேன். எந்த ஒரு சிலையையும் உடைக்காமல் விட்டு விடாதே! பூமி மட்டத்தை விட உயர்ந்திருக்கக்கூடிய எந்த ஒரு கப்ரையும் பூமியோடு சமப்படுத்தாமல் விட்டு விடாதே'. என்று கூறினார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்றுகள் மீது சாந்து பூசப்படுவதையும் அதன் மீது அமருவதையும், அதைக் கட்டுவதையும் அதன் மீது எழுதுவதையும் தடுத்தார்கள். கப்ருகளை வணக்கஸ்தலங்களாக மாற்றுபவர்களையும் அதன் மீது விளக்குகள் தொங்க விடுவபவர்களையும் தடுத்தார்கள். நபித்தோழர்களின் காலத்திலோ தாபிஈன்களின், தபஉத் தாபிஈன்களின் காலத்திலோ எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் நபிமார்களின் கப்ரோ அல்லது வேறு எவர்களின் கப்ருகள் மீது தர்ஹாக்கள் கட்டப்படவில்லை.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

உண்மை நிலை

தேங்காயை வழிபடும் கூட்டம்

Refer this Page to your friends