- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மைட்டி மவுஸ் ரோபோட்

நி [1]யூ மெக்சிகோ மாகாணத்தில் சாண்டியா தேசிய ஆய்வுக் கழகம் வி2 என்றழைக்கப்படும் மைட்டி மவுஸ் (Mighty Mouse) எனப்படும் ரோபோட்டை தயாரித்துள்ளது. இந்த ரோபோட் அணுகுண்டுகளால் ஏற்படும் கதிர்வீச்சுக்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு தனிச் சிறப்புடன் ரோபோட்டை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 40 பேரைக் கொல்லக்கூடிய (பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்தாலும்) காமா கதிர்வீச்சுக்களையும் தாங்கும் சக்தி கொண்ட இந்த ரோபோட்டின் தனித்தன்மை சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. இவ்வகைக் கதிர்கள் ரோபோட்டில் உள்ள எலக்ட்ரானிக் கருவிகளையும் அழிக்கக்கூடியது. 600 பவுண்டு எடை மற்றும் 5 அடி உயரமுள்ள இந்த ரோபோட் கரடுமுரடான இடங்களுக்கு செல்லவும், துளையிடும் சாதனமாகவும் பயன்படுகிறது. மேலும் இது அணுகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணியையும் செய்கிறது.

அலுவலக உதவியாளராகிறது, புதிய `ரோபோட்’

[2]`ரோபோட்’ எனும் சொல் விஞ்ஞானிகளின் தாரக மந்திரம். கண்டுபிடிப்பில் புதுமை காட்டுகிறார்களோ இல்லையோ, ரோபோட்டை உருவாக்குவதில் புதுமை காட்டுகின்றனர். தற்போது இவர்கள் உருவாக்கியுள்ள ரோபோட் சற்று வித்தியாசமானது. அலுவலகத்தில் கூட இதனை வைத்து வேலைவாங்க முடியும். ஆபீசராக இல்லை, அலுவலக பணியாளராக. என்ன உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? இந்த வாரம் ஜப்பானிய முன்னணி நிறுவனம் உருவாக்கிய புதுமையான ரோபோட்டையும், அது செய்யும் குறும்புகளையும் காணலாம்.

உலகமே இன்று பொருளாதாரக் கொள்கையில் “தனியார்மயமாக்கலை”  முன்னிலைப்படுத்தி பல பொருளாதார மாற்றங்களை அமல்படுத்தி வருகிறது. இதற்கு எல்லையே கிடையாது போலும். ஆம்! இப்பொழுது இறைவனின் படைப்பிலும் தனியார் மயமாக்கலை கொண்டு வந்திருக்கின்றது அறிவியல் உலகம். குளோனிங் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் இதற்கு சான்று. இந்த புரட்சிகரமான அறிவியல் உலகில் இன்று பல சாதனைகளை புரிந்துவரும் `ரோபோட்’ என்ற மனித எந்திரங்கள் உற்பத்திப்பிரிவில் பல சாதனைகளை புரிந்து வருகிறது. இவற்றில் இன்று முன்னணியில் இருக்கும் நிறுவனம் தயாரித்த அசிமோ ரோபோட் (Asimo Robot) பல வியத்தகு சாதனைகளை புரிந்து மனிதர்களை புறந்தள்ளியிருக்கிறது.

[3]இவற்றை வடிவமைத்த விஞ்ஞானிகள் இதன் ஒவ்வொரு செயல்பாட்டையும் மிக நுட்பமாக அமைத்து மெருகேற்றி இருக்கின்றார்கள். இவற்றின் எதிர்கால வளர்ச்சி ஆண் இனம், பெண் இனம் என்பதுடன் ரோபோட் என்ற மூன்றாவதாக ஒரு குலத்தையே உருவாக்கப்போகிறது, எனலாம். இவற்றின் ஆதிக்கங்கள் மனிதனுக்கு சவால் விடும் என்பதில் ஐயமில்லை. தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, வீட்டு வேலைகள், விளையாட்டு என அனைத்து பிரிவிலும் புகுந்து விளையாடுகிறது. Advanced Step in Innovative Mobility என்பதன் சுருக்கமே ASIMO வாருங்கள் ரோபோட் புரியும் சாதனைகளை தெரிந்துக் கொள்ளலாம்!

சமீபத்தில் ஜப்பானில் உள்ள முன்னணி நிறுவனம் ஒரு புதிய ரோபோட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 130 செண்டிமீட்டர் உயரமுள்ள `அசிமோ’ என்ற ழைக்கப்படும் இந்த ரோபோட் ஏற்கெனவே ஜாக்கிங், மாடிப்படிகளில் ஏறுதல், அலைசறுக்கு, தடங்கல்களை கண்டறிதல் போன்ற பல சாகசங்களை நிகழ்த்தி காட்டியுள்ளது. ஆனால் ஹோண்டா தயாரிப்பு நிறுவனம் டோக்கியோவில் உள்ள அதனுடைய தலைமை அலுவலகத்தில் நிகழ்த்திய செய்முறை காட்சியில் ஆசிமோ ரோபோட் இன்னும் பல திறமைகளை செய்து காட்டியது. அலுவலகத்தில் சுலபமாக அங்குள்ள பணிகளை, இது சர்வ சாதாரணமாக ஒரு அலுவலகப் பணியாளைப் போல செய்து காட்டியது.

மேலும் இந்த நிறுவனம் நடத்திய செய்முறை விளக்கத்தில் இது தானாகவே டீ, காபி வினியோகம் செய்தது. அதாவது ஒரு மேஜையை விருந்தினர் இருப்பதுபோல் அமைக்கப்பட்டு டீ, காபியை விருந்தினர் மேஜைக்கு ரோபோட் தன் கையாலேயே எடுத்துக் கொடுப்பதுபோல் செய்து காண்பித்தது. இது நான்குசக்கர டீபாயை நகர்த்திக்கொண்டு விருந்தினர்களை உபசரித்த காட்சி காண்பவர்களை கவர்ந்தது.

வருங்காலத்தில் ஆசிமோ ரோபோட்டை அலுவலக வரவேற்பறையில் கூட பணியாளராக நியமிக்கலாம். காரணம், உணரிகள்  பொருத்தப்பட்ட இந்த ரோபோட் நினைவகச் செல்லில் (Memory Chip) ஏற்கனவே பதிவாகியிருந்த தரவுகளை ஒப்பிட்டு பார்த்து வருகையாளரின் பெயரை அழைத்து வணக்கம் தெரிவிக்கும்.

இது மணிக்கு 6 கிலோமீட்டர் நடந்து செல்ல்லும் திறன் கொண்டது. இதற்குமுன் உள்ள ரோபோட் மணிக்கு 3 கிலோமீட்டர்தான் செல்லும். இந்த ரோபோட்டில்
காற்று நிரப்பப்பட்ட பாதங்களைக் கொண்டு தாங்கி நிற்கக்கூடிய புதியதொழில்நுட்ப முறை புகுத்தப்பட்டிருக்கிறது.

முன்னணியில் உள்ள நிறுவனம் இவ்வகை மனித ரோபோட்டுகளை 1987ல் இருந்தே தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. உலகம் முழுவதும் இப்பொழுது 40 அசிமோ ரோபோட்டுகள் சேவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
[4]
இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய அசிமோ ரோபோட்டுக்களை அதனுடைய அலுவலகத்தின் வரவேற்பறை பணிக்கு நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.

“புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த அசிமோ ரோபோட் இன்னும் வாகனங்களை தானே இயக்கும் விதத்தில் அதன் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் பயன்படுத்தப்பட உள்ளது” என்கிறார், இந்த நிறுவனத்தின் முன்னணி அதிகாரி.

ஜப்பான் உலகிலேயே ரோபோட் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இன்னும் ஹோண்டா நிறுவனம் தவிர சோனி கார்ப்பொரேஷன், டொயோட்டா மோட்டார் நிறுவனம், ஹிட்டாச்சி நிறுவனம் ரோபோட்டுகளை தயாரித்துள்ளது.

அதிசயம் தொடரும்   –  எம்.ஜே. எம்.இக்பால், துபாய்.