Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2009
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,930 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4

சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் -தொடர்ச்சி

  •     ஷரீஅத் – (மார்க்கம்.)
  •     தரீக்கத் — (ஆன்மீகப் பயிற்சி பெறல்)
  •     ஹக்கீக்கத் — (யதார்த்தத்தை அறிதல்)
  •     மஃரிபத் .—(மெஞ்ஞான முக்தியடைதல்)

الحقيقة ஹகீக்கத். (ரகசியம் )

ஹக்கீக்கத் எனப்படுவது சூபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது . தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூபிகளை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும் பாதாளக் குழியில்த் தள்ளி தம்மைத் தவிர வேறு யார் எது சொன்னாலும் கேட்கக் கூடாது எனும் பைத்திய நிலைக்கு அவனை ஆளாக்கி அவனிடம் பைஅத் – ஞான தீட்சை ? பெற்ற பின்னர் அவனுக்கு சூபிகள் கற்றுக் கொடுக்கும் ஒரு இரகசியம்தான் இந்த ஹகீக்கத் எனும் சமாச்சாரம் . அவர்களின் கருத்துப்படி இது ஒரு ரகசியம் இது தான் உண்மை – யதார்த்த நிலை . ஆனால் இவ்வுண்மை அனைவருக்கும் தெரிவதில்லை. அவர்களிடம் ஞானதீட்சைபெறாதவர்களுக்குத் தெரிவிப்பதுமில்லை . காரணம் இவர்கள் கூறும் பைத்தியகாரத் தனமான உளறல்களையும் , சாத்தானிய வசனங்களையும் , பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனைக் கட்டுக் கதைகளையும் நம்பி ஏமாறும் நிலையில் எந்தப் பாமரனும் இல்லை . எனவே இவனால் எழுப்பப்படும் கேள்விகளுக்குக் கூட இவர்களால் விடையளிக்க முடியாது .ஒன்றுமறியாத பாமரனும் இவர்கள் கூறுவதைக் கேட்டால் இவர்களின் குடுமியைப் பிடித்து ஆதாரம் கேட்பான். ஆப்பிழுத்த குரங்கு போல அவனிடம் மாட்டித் தவிக்க நேரிடும் . ஆதாரம் இருந்தால் தானே சமர்ப்பிக்க முடியும் . இந்துப் புராணங்களில் , யூத கிருஷ்த்தவ , கிரேக்க தத்துவங்களில் வேண்டுமானால் ஆதாரம் கிடைக்கலாம் . குர்ஆன் ஹதீதில் கிடைக்குமா ? அதனால் தான் தமது சூபித்துவ வலையில் வீழ்ந்து தீட்சை பெற்று — மூளையை அடகு வைத்து மூடனாகி விட்டவர்களிடம் மாத்திரமே இந்த ஹக்கீக்கத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் . அதுவும் அவனாக குருவின் அனுமதியின்றி எவரிடத்திலும் இது பற்றி வாய் திறக்கக் கூடாது எனும் நிபந்தனையுடன்…
அது என்ன ரகசியம் ? என்ன ஹக்கீக்கத் ? என்று பார்ப்போம் .

அதாவது இப்பிரபஞ்சமே அல்லாஹ்தான் அவனின் வெளிப்பாடே இப்பிரபஞ்சம் என்பதைத் தெரிந்து கொள்வதே ரகசியம். நாம் பார்க்கும் ,கேட்கும், தொடும் அனைத்துமே ,,, நான், நீ, அவன், அவள், அது, வானம் ,பூமி சந்திரன் சூரியன் ஆடு மாடு ஏன் நாய் பன்றி அனைத்துமே அல்லாஹ்தான். கடலிலுள்ள நீர்தான் அலையாகவும் , நுரையாகவும் ,உப்பாகவும் பரிணமித்திருப்பது போல் அல்லாஹ்தான் இப்பிரபஞ்சமாகத் தோற்றம் தருகின்றான் அனைத்துப் பொருள்களுக்கும் சேர்த்துத்துத்தான் அல்லாஹ் எனப்படும் என்பதே இப்பைத்தியர்களின் மஃரிபத் எனும் மூடத் தத்துவம் . இதை அறிந்தவர் தான் ஞானி – ஆரிப் என இவர்களிடம் அழைக்கப்படுவார் .

பிரபல சூபி கஸ்ஸாலி சொல்கின்றார் …
அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார் . ஏனெனில் அனைத்து வஸ்துக்களுமே அவனிலிருந்தே , அவனை நோக்கியே , அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே …( இஹ்யாஉலூமுத்தீன். 1—254 )

தொடர்ந்து கஸ்ஸாலி சொல்கின்றார் ..
மெஞ்ஞானிகள் ( ரகசியம் ) ஹகிக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்துஒருமித்துத் கூறுகின்றனர் . எனினும் சிலருக்கு இந்நிலை தெட்டத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும் . (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து ) غيرية ) வேறொன்று என்ற வார்த்தை – பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும் . அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது . அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும் . இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் ‘நான் தான் அல்லாஹ் ‘ என்றும் , வேறு சிலரோ ‘ நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன் ‘ என்றும் , வேறு சிலர் ‘எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை ‘ என்றும் கூறியிருக்கின்றார்கள் .(மிஸ்காதுல் அன்வார் .ப : 122)

கஸ்ஸாலி சொல்கின்றார் …
ஆரிபீன்கள் சொல்கின்றார்கள் ‘நாங்கள் நரக நெருப்புக்குப் பயப்படவுமில்லை. சொர்க்கத்துக் கன்னியர்க்கு ஆசைப்படவுமில்லை எங்கள் நோக்கமே இறை தரிசனமே. அவன் எம் கண்களுக்குப் புலப்படாமல் கணப் பொழுதேனும் தடைப்படக் கூடாது என்றே நாங்கள் யாசிக்கின்றோம்’. ( அல் இஹ்யா 4–22 )

இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்…
ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார் . ஒவ்வொரு பொருமே அவருக்கு அல்லாஹ்வாகத்தான் தென்படும் . முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு ஞானிக்கு பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள்,விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள் . அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை ,பொற் சிலை , வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள் . ( புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப: 192 )

இதுதான் வழிகெட்ட இந்த ஸூபிகள் சொல்லும் ரகசியம் .?? இது வழிகேட்டின் உச்சம் , இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப் பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான் . இது சுத்த பைத்தியகாரர்களின் உளறல் . முற்றிய பைத்தியம் என்பதைச் சாதாரண பைத்தியகாரன் கூடச் சொல்வான் . அல்குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர்., கலப்பற்ற ஷிர்க் என்று விபரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும் .

மஃரிபத் (மெஞ்ஞானம் )المعرفة

சூபிகளின் கூற்றுப்படி தேவையற்ற சரீஅத் சட்டங்களால் தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்ட ஒரு மனிதன் ஒரு சூபிக் குருவின் சீடனாகி தரீக்கத் எனும் சேற்றினுள் விழுந்து மூளையையும் சுய சிந்தனையையும் பறிகொடுத்து பின்னர் ஹக்கீக்கத் எனும் மாயையில் வீழ்ந்து புலம்ப ஆரம்பித்ததும் அளவுக்கதிகம் இறை நினைவில் ?? ( சூபிகளின் இறைவனான ஷைத்தானின் நினைவில் மூழ்கியதால் ) ‘பனாஃ ‘ எனும் நிலை ஏற்படுமாம் . இதற்கு இறை நினைவால் மூழ்கி தன்னையே அழித்துக் கொள்ளல் ( அதாவது தன்னிலை மறந்து விடும் நிலை ) என்று சூபிகள் வாதிடுகின்றனர் உண்மையில் இது போதை மயக்கத்தில் பேதலித்து விடுவதால் , அல்லது ஊன் உறக்கமின்றி சதா காலமும் ஏதோ ஒன்றை நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பதால் ஏற்படும் ஒரு வகை மூளைக் குழப்பம் அல்லது பைத்தியத்தின் ஆரம்ப நிலை என்பதில் சந்தேகமில்லை . அனைவரையும் விட அல்லாஹ்வுக்கு விருப்பமான , அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்த , இபாதத் , வணக்கம் உட்பட அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியாக அனுப்பப்பட்ட முஹம்மத் நபியவர்களுக்கே இவ்வாறான ஒரு நிலை ஏற்படவில்லையே .. இப்படியொரு பனாஃ நிலைக்குக் சென்று இவர்களைப் போல் உளறவில்லையே … நபியவர்களை விட இந்த சூபிகள் இறை நேசர்களா ? அவர்களை விடக் கடுமையான வணக்கவாளிகளா ? அவர்களுக்குத் தெரியாத ஹக்கீக்கத்தை ( ரகசியத்தை ) இவர்கள் தெரிந்து கொண்டார்களா ?

நபியவர்களின் ஆத்மீகப் பாசறையில் பயிற்சி பெற்ற லட்சக் கணக்கான ஸஹாபாக்களில் ஒருவருக்கேனும் இப்படியொரு நிலை ஏற்பட்டுப் புலம்பியதாக வரலாறு உண்டா ? அப்படி இந்த சூபிகள் நிரூபிப்பார்களா? அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக அல் குர்ஆனிலேயே விளம்பரப்படுத்தப்பட்ட அந்த இறைநேசர்களுக்குக் கற்பிக்காத ரகசியத்தை இந்த சூபிகளுக்கு கற்றுக் கொடுத்தானா? இந்த வினாக்களுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளான் .

சரி…. விடயத்துக்கு வருவோம் ..

இப்போது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அல்லாஹ்வின் பிரதிபலிப்பே .. தூணும் அவனே துரும்பும் அவனே , வானமும் அவனே வையமும் அவனே நீயும் அவனே நானும் அவனே எனும் ரகசியம் அவருக்குப் புலப்பட ஆரம்பித்ததும் அவருக்கு அனைத்து வித மறைவான ஞானங்களும் புலப்பட ஆரம்பிக்கும். இவரே முன் கூட்டியே கடவுளாக இருந்திருந்ததன்; ரகசியத்தை இப்போது இவர் கண்டு கொண்டதால் கடவுளின் ஆற்றல் ,அறிவு வல்லமை மறைவான ஞானம் அனைத்தும் இவருக்கும் வந்து விடும் . இதற்குத்தான் இவர்களிடத்தில் மஃரிபா மெஞ்ஞான முக்தி பெறல் எனப்படும் . இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரிபீன்கள் மெஞ்ஞானவான்கள் எனும் பெயர் சூட்டப்படும் .

அப்துல் அஸீஸ் தப்பாக் எனும் அண்மைக்கால சூபி ஒருவர் கூறுகின்றார் ..
‘அல்லாஹூத்தஆலா–தான் யாரென்ற மஃரிபா ஞானத்தை ஒருவருக்குக் கொடுக்கும் வரை எவரையும் நேசிப்பதில்லை . அந்த ஞானம் பெற்றதும் அவர் அல்லாஹ்வின் ரகசியங்களையெல்லாம் காண ஆரம்பிப்பார் . அப்போது அவருக்கு ஜத்பு எனும் இறை ஈர்ப்பு நிலை ஏற்படும் . ( இப்ரீஸ் ப: 217 )

இல்லை! உண்மையில் இது தேவையற்ற சிந்தனைக் குழப்பத்தாலும் ,அளவுக்கதிகமான திக்ர் எனும் பெயரில் அரங்கேற்றிய பேயாட்டத்தாலும் ஏற்பட்ட காக்காய்வலிப்பு நோய்தான் இது! .

அதாஉல்லாஹ் இஸ்க்கந்தரி எனும் சூபி மகான்?? கூறுகின்றார்…

‘மஃரிபா –ஞானமென்பது ஒரு கற்கக் கூடிய அறிவல்ல .அது நேரடியாகக் காணும் ஒரு நிகழ்வாகும் , அது சொல்லித் தெரியும் ஒன்றல்ல, அது வர்ணிக்க முடியா ஒரு ரசனைமிகுஓவியம் , திரையிடப்படாத ஒரு காட்சி . இதைக் கண்ணுற்றவர்கள் ஏனையோரைப் போன்றல்ல ,ஏனையோர் கண்ணுற்றோரைப் போன்றுமல்லர். மஃரிபா எனும் ஞானம் பெற்ற ஆரிபீன்களிடத்தில் அல்லாஹ் அல்லாத எப்பொருளும் இருக்கின்றதென்றோ இல்லையென்றோ சொல்லப்பட மாட்டாது . ஏனெனில் அவனே எல்லாம் என்பதே உண்மையாதலால் அவனல்லாத எதுவும் இல்லையென்பது தெளிவாகின்றது , (கஸ்புல் அஸ்ரார் . ப: 139)

எதுவுமறியா அப்பாவிப் பாமர சமூகம் சூபி மகான்கள் ,மெஞ்ஞான குருநாதர்கள் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஷைத்தானின் தூதர்களான கேடுகெட்ட இந்த சூபிகளின் அந்தரங்கம் இதுதான் . குப்ரையும் ஷிர்க்கையும் பாமரர்கள் மத்தியில் பெயரை மாற்றி மெஞ்ஞானம் எனும் போர்வையில் விதைத்து நரகத்தின் நாயகனான ஷைத்தானின் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்து ஷைத்தானின் நேசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போட்டு பசுத்தோல்ப்போர்த்திய புலிகள் போன்று சமுகத்திலே ஊடுருவிய, இப்போதும் ஊடுருவியிருக்கும் இந்தக் கேடு கெட்டவர்களை அனைவரும் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும் . இவர்களைப் பற்றி சமூகத்தின் மத்தியில் உள்ள தவறான கருத்தோட்டத்தைக் களையெடுத்து இவர்களின் சுய ரூபத்தைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் . இது ஒவ்வொரு முஃமினதும் இஸ்லாமிய,தார்மீகக் கடமையாகும் .

அன்னிய பிற மதங்களில் சூபித்துவம்.

சூபி மகான்கள் இஸ்லாத்தில் மேன்மைக்கும் அந்தஸ்த்துக்கும் உரியவர்கள், தம் வாழ்வையே இஸ்லாத்திற்காக அர்ப்பணித்தவர்கள் என்று தவறாகப் புரிந்து வைத்திருப்போருக்கு மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கின்றேன் . இந்த சூபித்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் கடுகளவு கூடச் சம்பந்தம் இல்லை . இன்னும் சொல்லப் போனால் இந்த சூபித்துவம் இஸ்லாத்திற்கு முன்னுள்ள காலத்திலேயே பல்வேறு மதங்களிலும் அந்தந்த மதங்களின் பிரதான சித்தாந்தமாக இருந்து வந்துள்ளதையும், இந்த சூபிகள் அன்றும் இன்றும் கூறும் அதே அத்வைதக் கொள்கையை அந்தந்த மதங்களைச் சேர்ந்த குருக்களும் ஞானிகளும் போதித்து வந்துள்ளனர் என்பதையும் நாம்; காண முடிகின்றது . இன்றும் கூட அந்தந்த மதங்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இந்த சூபிகள் சொல்லித் திரியும் அத்வைத மெஞ்ஞானக் கொள்கை ?? அமைந்திருப்தைக் காணலாம் . இதை நான் அனுமானமாகச் சொல்லவில்லை . தகுந்த ஆதாரங்களுடன் இக்கொள்கை அன்னிய வேதங்களில் உள்ளதென்பதை நிரூபிக்க அந்தந்த மதங்களின் வேத நூல்களிலிருந்தே இது பற்றிக் கூறப்படும் பகுதிகளை எடுத்துக் கூறுகின்றேன் . அவற்றைப் படித்து விட்டு – சந்தேகப்பட்டால் அந்ததந்த வேத மூல நூல்களை எடுத்துப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் . இந்த ஷைத்தானியக் கொள்கைகளையெல்லாம் அழித்தொழிப்பதற்காகவே இஸ்லாம் வந்தது . அழித்தொழித்தது . ஒரேயொரு கடவுள்தான் அல்லாஹ் . அவனல்லாத அனைத்தும் அவனது அடிமைகள் . படைப்புக்கள் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியது . சூபிகள் சொல்வது போல் இந்த எல்லாம் அவனே என்பதுதான் அல்லாஹ் கூற விரும்பிய ரகசியமெனில் முஹம்மது நபிக்கு இஸ்லாத்தைக் கொடுத்து அதைப் போதிக்க வேண்டிய அவசியமில்லை . ஏனெனில் இக்கொள்கைதான் இஸ்லாத்துக்கு முன்பே அனைத்து மதங்களிலும் இருந்துள்ளதே ….

எனவே சுருங்கக் கூறின் சூபிகள் அனைவரினதும் ஒருமித்த அடிப்படைக் கொள்கை ‘ எல்லாம் அவனே ‘ எனும் அத்வைதக் கொள்கையும், கடவுள் குறிப்பிட்ட சிலரில் இறங்கி அவர்கள் கடவுள் அவதாரம் எடுக்கின்றனர் எனும் ஹூலூல் இத்திஹாத் எனும் கொள்கையுமாகும் . இது முழுக்க முழுக்க ஷைத்தானியக் கொள்கை . இதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏனைய பல்வேறு மாற்று மதங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஒரு சித்தார்த்தமே இது என்பதை அந்தந்த மதங்களின் மூல நூல்களிலிருந்தே- முடிந்த வரைக்கும் எடுத்துக் காட்ட முயற்சிக்கின்றேன் .

ஸூபித்துவம் … யஹூதிகளிடத்தில்;

சூபி என்ற மூலச் சொல் எதிலிருந்து பிறந்தது என்பதில் பல கருத்துக்கள் இருக்கின்றன. الصوفசூஃப்-கம்பளி எனும் சொல்லிலிருந்து பிறந்திருக்க வேண்டுமென சிலர் வாதிடுகின்றனர் . இன்னும் சிலர்(الصفاء) ஸபா- தெளிவு எனும் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர் . எனினும் இக்கருத்துக்கனை ஏற்றுக் கொள்ள முடியாததற்கு பல நியாயங்கள் இருக்கின்றன . அதுபற்றிய விபரங்களை சூபித்துவம் பற்றிய ஏனைய நூல்களில் அறிந்து கொள்ளலாம் .

எனினும் இச்சொற்பதம் எங்கிருங்து வந்ததென்பதை நுணுக்கமாக ஆராயும் போது அதிர்ச்சியான சில தகவல்கள் கிடைக்கின்றன . அதாவது இச்சொல் ‘சூபியா’ ( ஞானம் ) எனும் யூனானிய சொல்லிலிருந்து அன்றேல் சூபிய் எனும் யஹூதிய சொல்லிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமென்பது ஆராயும் போது ஐயத்துக்கிடமின்றித் தெளிவாகின்றது . ஆம் ! யஹூதிய சமூகத்தின் மத்தியில் இருந்த ஒரு சில மதகுருக்களுக்கு சூபிய் என்று கூறப்பட்டு வந்தது . அஸ்ஷைக் அல் முஸ்லிக் – நேர்வழி காட்டும் குருக்கள் என இவர்கள் அறிமுகமாகியிருந்தனர் . இவர்கள் நடத்தும் சில ரகசிய ஆத்மீக மெஞ்ஞான சபைகளுக்கு நபிமார்களும் வருகை தருவார்கள் என இவர்கள் நம்பி வந்தார்கள் . இவர்கள் ஒன்று கூடும் இடத்திற்கு (مصفاة ) மிஸ்பா என அழைக்கபட்டது . இஸ்ரவேலர்கள் கன்ஆன் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதன் பின்னர் இவ்வாறான தேவாலயங்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. பின்னர் மதாலயங்களாகவும் ,கல்விக் கூடங்களாகவும் பரிணமிக்க ஆரம்பித்தன . இந்த ஆத்மீகப் பயிற்சியை வழங்குபவருக்கு நபீம் எனும் பெயரும் இருந்து வந்துள்ளது . அதாவது இவர் சூபிய் என்பவருக்கு ஒரு படித் தரம் குறைந்தவராவார் . இவர்கள் தம்மை நபிமார்கள் எனவும் வாதி;ட்டுள்ளனர் . யஹூதிகள் இவர்களை அளவு கடந்து நேசி த்து கண்ணியப்படுத்தி வந்துள்ளனர் .உண்மையான நபிமார் களைக் கொலை செய்தும் வந்துள்ளனர் . இந்த மிஸ்பாத் எனும் ஞானக்கூடத்தில் கற்றுத் தேர்ந்தவர்கள் தம்மை நபிமார்கள் எனவும் அறிமுகப்படுத்தினர் .

ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில்மட்டுமின்றி நபிகளாரின் காலத்திலேயே அரபு நாட்டில் சில பொய் நபியமார்கள் தோன்றினர் . இவர்கள் சிலரின் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போதும் மிஸ்பாத் எனும் யஹூதிக் கல்லூரியில் பயின்ற யஹூகளாக இவர்கள் இருந்தமை வரலாறு சொல்லும் பாடமாகும் .
(பார்க்க : முஹம்மத் பில் கிதாபில் முகத்தஸ் ப 72 ) (அல்கஸ்பு அன் ஹகிக்கதிஸ் ஸூபிய்யா ப 742 )

தொடரும்

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3 சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 5