- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நடுக்கடல் ஐஸ் பாளங்களில் இன்று 10-வது நாளாக சிக்கியுள்ள கப்பல்!

[1]10 நாட்களுக்கு முன் கடலின் நடுவே ஐஸ் பாளங்களிடையே சிக்கி அசைய முடியாமல் நின்றிருந்த ரஷ்யக் கப்பலை இன்று (திங்கட்கிழமை) தென் கொரிய ஐஸ் உடைக்கும் வசதி கொண்ட கப்பல் ஒன்று சென்று மீட்டிருக்கிறது.

ஸ்பார்ட்டா என்ற பெயருடைய ரஷ்யக் கப்பல் கடந்த 16-ம் தேதி அன்டார்ட்டிக்கா கடலில் நியூசிலாந்து

கடந்த 16-ம் தேதி முதல் ஐஸ் பாளங்களில் சிக்கியுள்ள ரஷ்யக் கப்பல் ஸ்பார்ட்டா

கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில், சென்று கொண்டிருந்தபோது இக்கட்டில் சிக்கிக் கொண்டது. கப்பல் சென்று கொண்டிருந்த பாதையில், கடல் நீர் கடும் குளிரில் ஐஸ் பாளங்களாக மாறியிருந்ததை கவனிக்காமல் போய் அதில் சிக்கிக் கொண்டது.

கடலில் ஐஸ் பாளங்கள் அதிகம் இருந்த காரணத்தால் கப்பலால் நகர முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, கடலின் அடியில் இருந்த ஐஸ் பாளம் ஒன்று கப்பலின் கீழ்ப்பகுதியில் மோதியதில், கப்பலில் ஓட்டை விழுந்தது. விபத்து நடைபெற்றபோது, கப்பலில் 32 மாலுமிகள் இருந்தனர்.

கப்பல் ஆபத்தில் சிக்கிக் கொண்ட விஷயத்தை கேப்டன் சர்வதேச தொலைத் தொடர்பு அலைவரிசையில் அறிவிக்க, அந்தக் கடல் பகுதியில் இருந்த சில கப்பல்கள் உதவிக்கு வந்தன. ஆனால், கடல் பாளங்களைக் கடந்து வேறு எந்தக் கப்பலாலும் ஸ்பார்ட்டா கப்பலை அணுக முடியவில்லை. கடந்த 16-ம் தேதியில் இருந்து கப்பல் அந்த இடத்தில் நின்றிருந்தது.

இதற்கிடையே கப்பலில் ஓட்டை விழுந்ததால் அதன் ஊடாக தண்ணீர் உள்ளே சென்று, கப்பல் மூழ்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஓட்டையை அடைப்பதற்கான உபகரணங்கள் கப்பலில் இருக்கவில்லை. இந்த விபரம் அறிவிக்கப்பட்டதில், நியூசிலாந்து விமானப்படை உதவிக்கு வந்தது. விமானப்படை விமானம் ஒன்று இந்த உபகரணங்களை எடுத்துச் சென்று பாரசூட் உதவியுடன் கப்பலின் மேல் தளத்தில் போட்டது.

நியூசிலாந்து கப்பல் மீட்பு குழுவின் தலைவர் நெவில் பிளேக்மோர், “கப்பலின் கீழ்ப்பகுதியில் ஓட்டை விழுந்திருந்தது. அதன் ஊடாக வந்த கடல் நீரை வெளியேற்ற கப்பலில் இருந்த பம்ப் ஒன்றை உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். பம்பை முழுமையாக நிறுத்தினால்தான் பழுது பார்க்க முடியும். ஆனால், பம்ப நிறுத்தப்பட்டால் கடல்நீர் கப்பலுக்குள் நிறைந்துவிடும். சிக்கலான நிலைமைதான்” என்றார்.

இப்படியான நிலையில் இன்று தென் கொரிய போலார் ஐஸ்-பிரேக்கர் கப்பல் ஆரொன் சம்பவ இடத்துக்கு

தென் கொ [2]ரிய போலார் ஐஸ்-பிரேக்கர் கப்பல் ஆரொன் ஐஸ் பாளங்களை உடைத்துச் செல்கிறது

வந்து சேர்ந்தது. ரஷ்யக் கப்பல் நின்றிருந்த இடத்தைச் சூழவுள்ள கடலில் இருந்த ஐஸ் பாளங்களை உடைத்து வழி ஏற்படுத்திக் கொண்டு, நெருங்கிச் சென்றது ஆரொன்.

இப்போது இரு கப்பலின் மாலுமிகளும் ஒன்று சேர்ந்து, ரஷ்யக் கப்பலில் ஏற்பட்டுள்ள துவாரத்தை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கப்பலின் கீழ்த்தளத்தின் உட்பகுதியில் டபுள்-பிளேட் ஒன்றை வெல்டு பண்ணும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தற்போது இந்தக் கடல் பகுதியில் கடும் குளிர் இருந்தாலும், கடல் அமைதியாக உள்ளது.

இதனால் சீக்கிரம் ரஷ்யக் கப்பலை அங்கிருந்து வெளியேற்றி விடலாம் என்று கூறுகிறார்கள்.

நன்றி: விறுவிறுப்பு.காம்