- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பூமி வெடிப்பினால் ஏற்படும் புதிய கடல்

[1]ஆப்பிரிக்காவின் எதியோப்பிய பாலைவனத்தில் ஏற்பட்டுள்ள 35 மைல் நீள வெடிப்பு ஒன்று, புதிய சமுத்திரமாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். 2005 ஆம் ஆண்டு திட்டுத்திட்டாக 20 அடிகளில் தோன்றிய இந்த வெடிப்பு இன்னும் முழுமையாக ஆராயப்படாததால், இது ஒரு புதிய கடலினை உருவாக்கும் என்று  சில புவியலாளர்கள் கூறுவது சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது.

பொதுவாக கடலுக்கடியில் வெடிப்புகள் ஏற்படும்போது நேரும் விஷயங்களுக்கும் இதற்கும் இருக்கும் ஒற்றுமைகள் அந்தப் பகுதியில் ஒரு புதிய கடல் உருவாவதற்கான அறிகுறிகளை தெரிவிக்கின்றன என்று ஜியோபிசிகல் ரிசெர்ச் லெட்டெர்ஸ் எனும் இதழில், இதைப் பற்றிய புதிய ஆராய்ச்சிகளை செய்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு கட்டுரை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிளவின் தாக்கம் செங்கடலை சிறிது சிறிதாக பிளந்தே வருகிறது.

சில நாட்களிலேயே இத்தனை பெரிய பிளவாக இது உருவானது எப்படி என்பதை கடந்த நான்கு வருடங்களின் புவியதிர்வு விபரங்கள்க் கொண்டு ஒரு தனி நிகழ்வாக விளக்குகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். முதலில், இந்த பிளவின் வடமுனையிலுள்ள தப்பாஹு எரிமலை வெடித்தது.  அதன் எரிகுழம்பு இந்தப் பிளவின் மத்தியில் சென்று இருதிசைகளிலும் பெரிய அளவில் பிளவினை வெடித்து பிளக்கச் செய்தது என்று இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

கடலடியில் இது போன்ற வெடிப்புகளின் ஊடாக எரிமலை குழம்பு பாய்வதால் பேரும் அடுக்கு தளங்கள் (திட்டுகள்) உருவாகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தனை பெரிய அடுக்குவெளி ஒரே வெடிப்பினால் இப்படி ஏற்படும் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை என்கிறார் இந்த ஆராய்ச்சியின் துணை ஆய்வாளரும், ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் புவி மற்றும் சூழலியல் பிரிவின் பேராசிரியருமான சிண்டி எபிங்கர்.

கடலுக்கடியில் கண்டத் தகடுகளின் ஓரங்களில் உள்ள எரிமலைச் சீற்றங்களினால் சிறிது சிறிதாக கண்ட  எல்லைகள் உடைவதாக நம்பப்பட்டு வந்த கொள்கைக்கு மாறாக பெரிய அளவில் உடைகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. இது போன்று நிலத்தில் நிகழ்ந்தால், அங்கு வசிக்கும் மனிதர்களின் மேல் அது பெரும் விபத்தில் சென்று முடியும் என்கிறார் இவர்.

நாம் செல்லவே இயலாத கடலின் ஆழங்களில் நிகழ்வது போல்தான் இங்கு எதியோபியாவிலும் நிகழ்கிறதா என்று அறிந்து கொள்ளவதே இந்த ஆய்வின் முழு முதல் நோக்கமாகும். இதனை நாங்கள் நிறுவ முடிந்தால் எதியோபியா ஒரு அற்புதமான சமுத்திர விளிம்பு ஆய்வகமாக நிச்சயம் அமையும். இந்த ஆய்வின் பின்னணியில் எதிர்பாராத எல்லைகள் கடந்த ஒத்துழைப்புகளினால் எங்களுக்கு தெரிய வருவது இதன் விடை ஆம் என்பதுதான்.

வட எத்தியோபியாவின் ஆபர் பாலைவனத்தில் எங்கேயோ ஓரிடத்தில் முட்டிக்கொள்ளும் ஆப்ரிக்க மற்றும் அரேபிய கண்டத் தட்டுகள், கடந்த மூன்று கோடி வருடங்களாக வருடத்திற்கு ஒரு இன்ச்சை விடக் குறைவான வேகத்தில் நகர்ந்து நகர்ந்து தான் 186 மைல் அபார் பிளவையும் செங்கடலையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு மில்லியன் வருடங்களில் செங்கடலே இந்த புதிய கடலில் சென்று கலக்கும் என்று நம்ப வேண்டியுள்ளது. இந்த புதிய கடல் ஏடன் வளைகுடாவையும் செங்கடலையும் இணைத்து அராபிய தீபகற்பத்தில் எமனுக்கும்,  கிழக்கு ஆபிரிக்காவில் சோமாலியாவுக்கும் இடையில் அரபிக்கடலின் ஒரு கரம் போல உருவாகும்.

அண்டை நாடான  எரித்ரியாவிலிருந்து புவியதிர்வு விபரங்கள் பெற்றுக்கொண்டும், எரித்ரியா தொழில் நுட்ப நிறுவனத்தின் கெப்ரப்ஹன் ஒகுபழ்க்ஹி மற்றும் ஏமனில் தேசிய புவியதிர்வு ஆராய்ச்சி மையத்தின் ஜமால் ஷோழன் இவர்களுடன் இணைந்து இந்த ஆய்வுக்கு தலைமை தாங்குகிறார் எதியோபியாவின் அடிஸ் அபாபா பல்கலைகழகத்தின் ப்ரொபெஸர் அடலே அயலே.

 நன்றி: இந்நேரம்.காம்