- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9

மத்திய அரசின் MNRE -ன் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் முகவரியை தெரிந்து கொள்ள கீழே  லிங்க் கொடுத்துள்ளேன். இது பி.டி.எஃப் பைல்.இதிலிருந்து உங்கள் ஊரில் அல்லது அருகாமையில் உள்ள டீலர்களை அணுக உங்களுக்கு வசதியாக இருக்கும்.  இந்த லிங்க் [1]-கை கிளிக் செய்யவும்

இனி மத்திய அரசின் இந்த மானிய திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுத்துகிறது என்பதை பார்க்கலாம். 1 வாட்ஸ்-க்கு பாட்டரியுடன் கூடிய சிஸ்டத்திற்கு ரூ.81 /-, பாட்டரி இல்லாத சிஸ்டத்திற்கு ரூ.57 /- என்ற கணக்கில் மானியம் வழங்குகிறது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

[2]
தமிழ்க அரசின் “Tamil Nadu Energy Development Agency தான் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இவர்களால் அங்கிகரிக்கப்பட்ட டீலர்களின் விபரப்பட்டியலின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. லிங்க் [3]-ஐ கிளிக் செய்யவும்.

இந்த பட்டியலில், இந்த திட்டத்திற்காகவே உருவான லெட்டர் ஹெட் கம்பெனிகளும் இருக்கலாம். இவர்களிடம் தரமான பொருட்களையோ அல்லது நியாயமான விலையையோ எதிர்பார்க்க முடியாது. அதோடு இந்த சிஸ்டம் 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்படக்கூடியது. பி.வி மாடுல்ஸ்-களுக்கு 25 ஆண்டு கால உத்திரவாதம் உண்டு. இதை லெட்டர்ஹெட் கம்பெனிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவே டீலர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். நீங்கள் சோலார் சிஸ்டத்தை நிறுவ முடிவு செய்த பட்சத்தில் எனக்கு மெயில் செய்யுங்கள். இந்த பட்டியலில் உள்ள சிறந்த நிறுவனங்கள் பற்றி தகவல் தருகிறேன். இதை பதிவில் தெரியப்படுத்த கூடாது.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்………..

நன்றி:  திரவிய நடராஜன்  – சட்டம் நம் கையில்