- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன?

21ம் நூற்றான்டின் முக்கிய நோய்யாக மனஅழுத்தம் இருக்கும்என பல ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது எல்லாம்ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு அடுத்தப்படியாகமனஅழுத்த நோய்களுக்கு என டாக்டர்களிடம் செல்பவர்களின்எண்னிக்கை அதிகமாகும்.
மன அழுத்தம் மிகவும் கொடுமையானது இயல்பானவாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும்,நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம். குறிப்பாஇன்று 5 முதல் 20 வயதில் உள்ளவர்கள் அதிகமனஅழுத்தத்தில் அவதிப்படுகின்றனர்.

உலகில் உள்ளமக்கள் தொகையில் 69% பேர் மனஅழுத்தத்தால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
76% பேர் போதுமான உறக்கம் இல்லாமல் உள்ளனர்.
77% பேர் குடும்ப உறவுகளினால் மனஅழுத்திற்கும்,மனோபயத்திற்கும் ஆளாகியுள்ளனர் .
50% பேர்களுக்கு புதிய பொருள்களை நுகரமுடியவில்லைஎன்பதே பெரிய கவலையாக உள்ளது .
55% பேர்களுக்கு குறைந்த நன்பர்களே உள்ளனர்.
58% பேர்கள் தலைவலியால் அவதிபடுகின்றனர்.
70% பேர் உடனே கோவப்படுபவர்களாக உள்ளனர்.
அதிகமான மனஅழுத்தம் ஓரு நபரின் உயிரியல் வயதை 30வருடங்கள் கூட்டுகிறது என்றும், சமிபத்திய ஆய்வு கூறுகிறது.

அதுமட்டுமல்லாது மனஅழுத்தம் அதிகமாகி தற்கொலை நிகழ்வுகளும் அதிகரிக்கும் அளவுக்கு இந்நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.கடந்த 2004 – 2008 மட்டும் 16000மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.அதேபோல்2006ல் மட்டும் 5857 மாணவர்கள் தேர்வு பயத்தால் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

மனஅழுத்தம் எதனால் ஏற்படுகிறது?

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்தசமூகத்தின்செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்றுநம்முடைய வாழ்க்கைமுறை, சிந்தனைகளினால் வருவது.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் போன்ற காரணங்களாலும் மனஅழுத்தம் உண்டாகிறது.

பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

தவறான பழக்கங்களின் மூலம் உண்டாகும் மனஅழுத்தம்?

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

மனஅழுத்தால் உண்டாகும் நோய்கள்என்ன?

மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாகமைகிரேன்எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமாஉட்பட பல நோய்களைமன அழுத்தம் கொண்டு வருகிறது.

தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை,தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு,உயர் இரத்த அழுத்தம், உடல் எடைஅதிகரித்தல், குறைதல்,ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக்குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய்,

குழந்தைகளிடம் மன அழுத்தம் அற்ற நிலையை உருவாக்க

குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஒருஆய்வு கூறுகிறது.

பெற்றோருக்குள் ஏற்படும் சண்டை, கவனிப்பின்மை போன்றகாரணங்களால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.அன்புக்கு ஏங்குகின்றன. இதுவே, மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. துõக்கமின்மை, உணவில்ஆர்வமின்மை, சோம்பல்போன்றவை ஏற்பட்டால், உடனே குழந்தைகளைடாக்டரிடம்காட்ட வேண்டும்.தாழ்வு மனப்பான் மைக்கு, சிகிச்சைஅளிக்கவேண்டும். நாளடைவில் இது குறைந்து விடுகிறது. ஏழுவயதில் இருந்து பத்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதில்அதிகம் பாதிக்கப்படுவதாக டில்லியில்நடந்த ஓர் ஆய்வில்தகவல் வெளியாகியுள்ளது

தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடையதினம் எப்படிசெலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தனஎன்றெல்லாம்உரையாடுங்கள். அழுத்தமான சூழல் இருப்பதுபோல உணர்ந்தால் அதிலிருந்துஎப்படி விடுபடுவது என்பதைஅவர்களுக்குச் சொல்லுங்கள்.

உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம்கொண்டும்திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவைமற்றும் அமைதியானவாழ்க்கையின் அவசியத்தைவலியுறுத்துங்கள்.

குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப்பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்லமறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம்போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.

நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையைவளர்க்கமுயலுங்கள். அது இறுக்கமான சூழல்களைகுழந்தைகள் சமாளிக்கபிற்காலத்தில் பயன்படும்.

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும்எனஎதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தைஉருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவதுநடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்றுஇலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியானகல்வியும் மனஅழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள்.தோல்வியும்வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக்கொண்டிருங்கள் அல்லதுஎதிர்காலத்தில் குழந்தைதோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும்வாய்ப்புஉண்டு.

உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாகஇருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தைகுடிக்கக் கூடாது எனஅறிவுரை சொல்வது பாதிப்பைஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம்செலவிடுவதும்,அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள்,உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ளதூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

மனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன?

மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம்முடைய மனதின்சிந்தனைகளைதூய்மைப்படுத்த வேண்டும். எதிர்மறைச்சிந்தனைகள் பெரும்பாலும் மனஅழுத்தத்தையேஅளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளைவளர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாளமுடியும்.

அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மனஅழுத்தத்தைக்குறைக்கிறது. அலுவலகத்தின்குழப்பங்களையோ, எரிச்சல்களையோகுவிக்கும் இடமாககுடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றைஅழிக்கும்இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனைகுடும்பத்தினர் புரிந்துகொள்ளவேண்டும். குடும்பத்தில்நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும்வகையில்குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல்மிகவும்முக்கியம்.

எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக்கொண்டால்பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்லநகைச்சுவைஉரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இதுஇரத்த அழுத்தத்தைக்கட்டுக்குள் வைக்கும். தசைகளைஇறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்குசுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவேமனஅழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோதத்துவ நிபுணர் லீபெர்க்.

குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன்மனைவியரிடையேபிரச்சனை வரும்போது ‘உன்னால் தான்வந்தது’ என்று பழியை மாறி மாறிசுமத்தாமல் ‘நமக்குபிரச்சனை இருக்கிறது’ எப்படி தீர்வு காண்பதுஎனும்கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபலஅமெரிக்கஉளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்.

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரியஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டியபணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும்குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தைகையில்வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும்.தேவையற்ற மன அழுத்தத்தைக்குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தைஅதிகரிக்கும். செய்யவேண்டியதை தாமதப் படுத்தாமல்செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம்வரைகாத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்யமுயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும்.இல்லையேல் அவை தேவையற்ற மனஅழுத்தத்தைத் தரக்கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்துநிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்குமுன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம்வேண்டாம்

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள்.உதாரணமாக பஸ்தாமதமானால் இதைச் செய்வேன்… என்பதுபோன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ,தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டேஇருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்துமகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியைமுதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும்அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும்இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம்செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால்‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மனஇறுக்கம்கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவுஅவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துதூங்குங்கள். தடையற்றதூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காகஅடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாதபொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை,தோல்விகளை குறைக்கஎழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல்நம்பிக்கைக்குரியநண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள்எதையேனும் ஒன்றைச்செய்யுங்கள். அதில் பொருளாதாரப்பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும்அனைத்துசெயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடுசெய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும்முனகல்களைத் தவிர்த்துபிறரைப் புரிந்து கொள்ளமுயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கைமிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதேதன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பதுநிரூபிக்கப்பட்டஉண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொருவேலைக்கும் இடையே சரியான இடைவெளிவிடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச்செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வதுஎன மனதைபுத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள்செவ்வனேநடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்துவிடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமானவேலைகள் மனதைஇலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்,அடுத்தவர்களைக்காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்றவாழ்க்கை நமக்குவசப்படும்.

 Thanks — labesan