- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

உளத்தூய்மை (v)

வழங்கியவர்: அப்துல்வதூத் ஜிப்ரீ,அழைப்பாளர், இலங்கை.
நாள்: 10 ஏப்ரல் 2015 வெள்ளிக்கிழமை

எப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் – குறிக்கோள் உள்ளதோ அவ்வாறே இந்த உலக வாழ்க்கைக்கும் ஒரு பெரிய குறிக்கோள் இருக்க வேண்டும். ஆம் இந்த உலக வாழ்க்கையே வேறொரு நிரந்தர வாழ்க்கைக்கு ஒரு பயிற்சிக் கலமாகும். அல்லது ஒரு தேர்வு நிலையமாகும்.

நிரந்தரமான மறுமை வாழ்க்கையின் வெற்றியென்பது இந்த உலகில் நாம் வாழும் முறையை பொறுத்தே அமையும். சரியான முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் இறைவன் அழகான வழிகாட்டல்களை தந்துள்ளான். அதன்படி நடந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

எனவே நாம் செய்யும் செயல்கள் இறைவனுக்காக அமைய வேண்டும். மனிதர்கள் பார்க்க வேண்டும் – சில உலக ஆதாயங்களைப் பெற வேண்டும் என்று இருக்கக் கூடாது.  நபிகளார் (ஸல்) மற்றும் அவர்களது தோழர்களின் வாழ்வு நமக்கு என்றும் முன்மாதிரியாக உள்ளது, அதனைக் கடைபிடித்து எல்லாக் காரியங்களையும் அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்தில் செய்தால் நிச்சயம் வெற்றி பெற்றலாம். மேலும் அறிய…