- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்!

தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தலையாய கடமையகாகும். இந்த தொழுகையை ஆன்கள் கண்டிப்பாக ஜமாத்துடன் தொழ வேண்டும். அதிகமான நன்மைகள் உண்டு என்பதை அறிந்திருந்தும் இன்று நாம் எந்த காரணமும் இல்லாமல் வேலை அதிகம் என்றும் அசதி என்றும் காரணங்கள் கூறி ஜமாத்தை விட்டு விடுகிறோம். ஆனால் அல்லாஹ் நபிகளார் ஸல் அவர்களுக்கு யுத்த களத்திலும் எவ்வாறு பகுதி பகுதியாக போர் வீரர்களுக்கு தொழுகை நடத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனில் சூரத்துல் நிஸா 102 வசனத்தில் குறிப்பிடுகிறான். மேலும் கண் தெரியாத ஒரு நபித்தோழர் பள்ளிக்கு வரும் வழியில் விசஜந்துக்கள் உள்ளன என்றும் அழைத்து வர ஆள் இல்லை என்றும் காரணம் கூறி நபிகளாரிடம் வீட்டில் தொழ அனுமதி கேட்ட போது ”அதான் சத்தம் கேட்கிறது என்றால் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்றார்கள். நமக்கு இதை விட பெரிய காரணங்கள் உள்ளனவா என்று சிந்திக்க வேண்டும். இன்னொரு முறை நபிகளார் அவர்கள் வீட்டில் தொழுபவர்களது வீட்டை கொளுத்தி விட வேண்டும் என்று விரும்பியதாகவும் அங்கே வயதி முதிந்தவர்கள், சிறுவர்கள் பெண்கள் இருப்பதால் அதை விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்கள். மேலும் ஜமாத்து தொழுகை பற்றி அறிய ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் உரையை இந்த வீடியோவில் பார்க்கவும்….

இஸ்லாமிய வீடியோக்களுக்கு நமது நல்வழி ஊடகம் – media4us.com [1]