- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

குஜராத்தில் பயங்கரவாதம்!

இந்தியாவின் பிரதமராவதற்கு மிகவும் தகுதி வாய்ந்த மனிதர் நரேந்திர மோடி தான் என்று பாஜகவில் ஒரு பிரிவினர் குரல் கொடுத்த மறுநிமிடம் பாஜகவின் வெற்றிவாய்ப்பில் ஓட்டை விழுந்தது. தேர்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாமல் “உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்டே” என்று ஒருவர் மீது ஒருவர் ஏசிக்கொள்ளும் அசிங்கம் அரங்கேறி வருகிறது.

தேர்தல் தோல்வியை ஆய்வு செய்த உயர்மட்டக் குழு மோடியின் கோரமுகத்தையும், குட்டி மோடியாகிவிடக் கொக்கரித்த வருணையும் சிலுவையில் அறைந்தது!

கோத்ராவை உருவாக்கி , அதனையே காரணமாக்கி, நரேந்திர மோடி கொன்றுகுவித்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் அப்பாவிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நியாயம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது!
உச்சநீதிமன்ற உச்சகட்டக் குழு பல வழக்குகளை மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மோடி ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றது போதாதென்று என்கவுண்டர் என்ற பெயரில் பல அப்பாவி முஸ்லிம்களை அழித்தொழித்து மறைத்ததும், அதனைச் செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு கௌரவமளித்து சிறப்புச் செய்ததும் இப்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

ஷொராப்தீன் மற்றும் அவரது இளம் மனைவியின் விவகாரம் மோடியை தோலுரித்துக் காட்டியது. அதற்கு இன்னமும் மோடிக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.

இதோ இன்னொரு மோடியின் மோசடி என்கவுண்டர் பச்சைப் பொய் என கமிஷன் அறிவித்திருக்கிறது.

இஷ்ராத் ஜஹான் என்ற 19 வயது இளம்பெண்ணையும் அவருடன் சேர்த்து இன்னும் சில இளைஞர்களையும் என்கவுண்டரில் வீழ்த்தியதையும், அவர்கள் லக்ஷரே தொய்யிபாவின் தீவிரவாதிகள் என்றும், மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்றும் பொய்கூறி கொன்றொழிக்கப் பட்டார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

இஷ்ரத்தின் பெற்றோரின் இடைவிடா முயற்சி இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

இந்த அப்பாவிகள் கொல்லப்பட்ட போது மோடிகூறுவதையே உண்மை போல பகிரங்கப் படுத்திய பெரிய ஊடகங்கள் இப்போது இச்செய்தியை ஓரங்கட்டிப் பிரசுரிக்கின்றன.

மோடிக்கு தண்டனை கிடைக்குமா?

நன்றி: நர்கிஸ் – துணைத் தலையங்கம் – அக்டோபர் 2009