- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை -2012

பிளஸ் 2 தேர்வு, மார்ச் முதல் வாரத்தில் துவங்கி விடுவது வழக்கம். ஆனால், வரக்கூடிய பொதுத்தேர்வு ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது.

இது குறித்து, தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறும் போது, “பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, அனுப்பி வைத்தோம். மாணவர்களின் நலன் கருதி, தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டும் என்பதை மனதில் வைத்து கொண்டு, தேர்வை ஒரு வாரம் தள்ளி வைத்து, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்றார்.

பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை :

மார்ச் 8-ந் தேதி – தமிழ் முதல் தாள்.
9-ந் தேதி – தமிழ் 2-வது தாள்.
12-ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.
13-ந் தேதி – ஆங்கிலம் 2-வது தாள்.
16-ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம், உளவியல்.
19-ந் தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.
20-ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
22-ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.
26-ந் தேதி – உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.
28-ந் தேதி- கம்மியூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய பண்பாடு, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரிவேதியியல், சிறப்பு மொழித்தேர்வு, தட்டச்சு தேர்வு.
30-ந் தேதி – அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

தேர்வுகள் அனைத்தும் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. ஆனால் மாணவ-மாணவிகள் காலை 10 மணிக்கு முன்னதாக தேர்வு அறையில் இருக்க வேண்டும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படுகிறது. 10.10 மணி வரை வினாத்தாள் வாசிக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்கள் எழுத நேரம் ஒதுக்கப்படுகிறது.

நன்றி: தினமலர்