- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

வறுமை ஒழிப்பில் இஸ்லாம் (V)

ரமளான் முழு இரவு நிகழ்ச்சி

உரை: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் 

இடம்:  SKS கேம்ப் அல்-ஜுபைல் – நாள் : 24 – 07 – 2014 வியாழக்கிழ‌மை

வறுதை ஒழிப்பு என்ற வார்த்தை பல காலமாக பல இடங்களில் முழங்கி கொண்டே வந்துள்ளது. சோசலிசம் என்ற கொள்கை மக்கள் அனைவரும் சமம் – ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கூடாது என்ற அடிப்படையில் செயல்பட்டது. சோசலிசக் கொள்கையை வளர்த்திட பல திட்டங்களை நடைமுறைபடுத்தி இறுதியில் தோல்வியடைந்ததை நாம் கண் முன்னே பார்க்கலாம்.

ஆனால் இஸ்லாம் இந்த கொள்கையை ஆதரிக்கவில்லை.  காரணம்  பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு இல்லாமல் இந்த உலகம் இயங்க இயலாது.
ஆனால் அல்லாஹ் அருளிய இந்த தீனுல் இஸ்லாம் வறுமைக்கு அழகிய தீர்வை வழங்கி உள்ளது. வறுமையில் வாடும் மக்களும் சிறந்து வாழ பல வழிகளை இஸ்லாம் காட்டியது. முஹம்மது நபியவர்களும் அவர்களது தோழர்களும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்த போதும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.
அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். போதுமென்ற மனதுடன் வாழ்ந்தனர். எனவே நபியவர்களிடம் எவ்வளவோ பொருளாதாரம் வந்த போதும் ஏழை எளியவர்களுக்கு அத்தனை செல்வத்தையும் உடனே வழங்கி மகிழ்ந்தார்கள். அவர்களது தோழர்களும் அப்படியே கடைபிடித்தனர்.

இஸ்லாம்  ஜகாத் 2.5 சதம் ஏழைகளுக்கு வழங்க உத்தரவிடுகிறது. வணக்கங்களில் ஏற்படும் தவறுகளுக்கு பகரமாக ஏழைகளுக்கு உணவு அளித்திட சொல்கின்றது. அது மட்டுமல்லாது அதிகமாக ஏழைகளுக்கு உதவிட ஊக்குவிக்கின்றது (சதகா).

மேலும் விவரமறிய சகோதரர் முஜாஹித் அவர்களின் உரையைக் கேட்கவும்….