bமுதல் பக்கமO

திருமண வாழ்த்துக்கள்

முந்தைய பக்கம்


 

 

நாள்:
 
18-08-2005, வியாழன்

மணாளன்:
 K. சாகுல் ஹமீது

மணாளி:
பரக்கத்து நிஸா
இடம்:
தேவிபட்டிணம்

திருமண வாழ்த்து மடல்

அக்கரையில் நிகழ்கின்ற மணவிழாவை
மணக்கண்ணில் கண்டு நான் மகிழ்வுகொண்டு
இக்கரையில் இருப்பினும் பாசம் பொங்க
வளமோடு வாழ்கவென வாழ்த்துகின்றேன்.
 

மகிழ்வோடு இணைகின்ற மணமக்களே!
வான்மீது உறவாடும் நிலவைப்போல
தேனோடு கலந்திட்ட சுவையைப்போல
மணவாழ்வில் இன்பமாய் வாழ்ந்திடுவீர்!

மணமக்கள் நலம் விழையும்
காஜா முயீனுத்தீன் - கப்ஜி - சவுதி அரேபியா

நாள்:
 
15-05-2005, ஞாயிறு காலை
மணாளன்:
 M.
கமருதீன்
மணாளி:
M. பாத்திமா ரைஹானா பர்வீன்
இடம்:
சித்தார்கோட்டை - அல் ஜன்னத்துல் பிர்தெளஸ் பள்ளி
எங்களது அன்பு மகன் M.கமருதீன் அவர்களின் திருமணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.

திருமண வாழ்த்து மடல்
 
சொர்க்கத்தில் பதிந்து நிக்காஹ்வில் இணைந்து புதுமணமக்களே!
தங்கள் பண்பென்னும் குணத்தால் வாழ்வீர் புதுமணமக்களே!
கற்றோரும் பெற்றோரும் போற்றும் வண்ணம் காவியத்தில் சிறப்புடனே
ழ்வீராக! பொற்கொடியின் கரம்பிடித்த இளையகாளை பொறுப்புள்ள
தலைவனென்று பிறர்மதிக்க,நற்பேறு பதினாறும் பெற்றே இந்த
நாயகனும் நாயகியும் வாழ்க! வாழ்க! வாழ்க! மணமக்கள்.
பெரியத்தா-M.ப்துல் ஜப்பார்

பெரியம்மா- A.சுபைதா பானு

(தைபிங், மலேசியா).


இறைவன்  அருளால் இல்லறம் புகும் புதுமணத்தம்பதிகள் எல்லா நலன்களை இம்மையிலும் - மறுமையிலும் பெற்று மகிழ்ச்சியாக வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறோம்.

Y. முஹம்மது அலிகான் S. கமருன்னிஸா பேகம்
E. M. சிராஜ் ஹஸன் J. ஜமீனா ஜஹான்.

நாள்:
 
18-02-2005, வெள்ளி மாலை
மணாளன்:
 அ. ஆசிப் அரபாத்
மணாளி:
 அ.ரோஸியா ஷா
இடம்:
 புதுவலசை சின்னப்பள்ளி

மகனார் அஹ்மது சுல்தானுக்கு, சாச்சாவின் துஆ ஸலாம்.

மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

சிங்கப்பூரிலிருந்து - டாக்டர் ஹிமானாசய்யித்


உறவின் முறை நெருங்கிய நண்பர் அஹமது சுல்தான் அவர்கள் இல்லத் திருமண வாழ்த்து மடல்

ஒன்றுக்குள் ஒன்றாக சேர்ந்த நீவிர்
உறவுக்கே உறவாகி விளக்கமாக
இன்றைக்கும் என்றைக்கும் வழிகள் கூறும்
இறை மறையின் ஒளியினிலே இயக்கங்கண்டு
பெண்ணுக்கு நல்லாடை ஆணே யென்ற
பெருமானார் மொழிப்படியே வாழ்ந்து காட்டி
இன்பத்தைப் பொழிகின்ற மழலையோடு
எழில் வாழ்வைப் பெற்றிடவே வாழ்த்துகிறேன்.


வாழ்த்தும் நெஞ்சம். இனியவன்
By S.Seeni Fakir.B.Sc., Jubail Ind.City.Saudi Arabia


நாள்:
 
24-12-2004

மணமகன்:
சித்திக் ரஹ்மான்
மணமகள்:
 பெனாசிர
இடம்
 Jumma Masjid, Chittarkottai

மணக்கோலம் பூணும் மா மணமக்களே !

இறையருளாள் ஒன்று சேர்ந்த நீங்கள் இறைவழி நின்று இல்லறத்தை நல்லறமாக்கி ஈருலகப் பேற்றையும் இனிதே பெற வல்லவனை இறஞ்சுகிறேன்.

வான்மறை காட்டும் சீரிய வழிகளையும் உத்தமத் திருநபியின் செயல்முறைகளையும் ஒருசேர பின்பற்றி இல்வழ்கையை நல்வாழ்க்கையாக்கி வாழ்ந்திட வேண்டுகிறேன்-வல்ல நாயனிடம் !!

பொற்கொடியின் கரம்பிடித்த இளையகாளை பொறுப்புள்ள தலைவன்றே பிறர் மதிக்க கற்புடைய நங்கையவள் கருத்துடைய நல்லரசி என்றும் கூற நற்பேறு பதினாறும் பெற்றே நாயகனும்-நாயகியும் வாழ்க வாழ்கவென்று கடல் கடந்து வாழும் நான் மனக்கண்ணில் உங்கள் மணகோலத்தைக் கண்டு மனமகிழ்ந்து வாழ்துறோம் !!!

வாழ்க மணமக்கள்.
நலம் நாடும்

அ.முகம்மது அபுபக்கர் - புருனை


நாள்:
25-12-2004
மணமகன்:
A.P. தாஜுதீன் B.E.
மணமகள்:
 S. பாத்திமா ஆக்கிலா

இடம்
 L.K.S. & Diamond Mahal in Aristo Hotel, Thiruchi

எனது அருமை நண்பரும் எனது கல்லு}ரி சீனியருமாகிய திருமக்கோட்டை சகாபுதீன் அவர்களின் தம்பி தாஜுத்தீன் B.E. அவர்களின் திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துகிறேன்.

மணமக்கள் எல்லா நலன்களை இம்மையிலும் - மறுமையில் பெற்று மகிழ்ச்சியாக வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

காஜா முயீனுத்தீன் - கப்ஜி - சவுதி அரேபிய