பரந்து விரிந்த இந்த உலகில் எல்லையே இல்லாதது எது என்று கேட்டால் – ‘மனிதனின் ஆசை”, என்பது பதிலாக வரக்கூடும். பிறந்ததில் இருந்து மரணத்தை சந்திக்கும் வரை ஆசைகளை தேடி மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான்.
மனித மனம் விசித்திரமானது. அதன் ஆசைகளும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால், எல்லோருக்கும் பொதுவான ஆசை ஒரு சில இருக்கும். அது தான் – ‘என்றும் மாறாத இளமையுடன் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும்.”
நவீன மருத்துவத்தின் மூலம் நோய்கள் இன்றி மனிதன் வாழ வழிகண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் இருதயம் பழுதாகிப் போனால் அதை வெட்டி எறிந்து விட்டு மாற்று இருதயம் பொருத்தும் அளவுக்கு மருத்துவ துறை முன்னேறி இருக்கிறது. இதற்கு அடுத்த கட்டமாக செயற்கை இருதயத்தை பொருத்தும் அளவுக்கு மருத்துவ ஆய்வுகள் முன்னேறி உள்ளன.
இத்தகைய ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது, ‘மனிதன் நீண்ட காலம் இளமையுடன் வாழ என்ன செய்ய வேண்டும்?” என்பது தான். இது தொடர்பாக நடந்து வரும் ஆய்வுகள் குறித்தும் அதில் வெளியாகி இருக்கும் ஆச்சரியமான முடிவுகள் குறித்தும் இந்த வார அறிவியல் அதிசயம் பகுதியில் காணலாம்.
இறைவனின் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனிப்பட்ட சராசரி ஆயுட்காலம் உள்ளது. ஈசல்கள் ஒரு நாள் மட்டுமே உயிர் வாழும். ஆமைகள் 300 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும்.
மனிதனின் ஆயுட்காலம் என்பது (ஒரு காலத்தில்) சராசரியாக 40 வருடம் என்றிருந்தது. இன்று மருத்துவ துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மூலம் 100 வயது வரை மனிதன் வாழ்வதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. பல விதமான நோய் தடுப்பு முறைகள், நவீன மருத்துவ சிகிச்சைகள், மாற்று அறுவை சிகிச்சை போன்றவை மூலம் மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நீண்ட காலம் வாழ்ந்தால் மட்டும் போதுமா? உடல் உறுதியும் சுறுசுறுப்பாக இருக்கும் உடல் நலமும் அவசியம்தானே.
ஆனால் வயதாக வயதாக தோல் சுருங்குகிறது. உணவு சரியாக ஜீரணம் ஆவதில்லை. ஒழுங்காக து}க்கம் வருவதில்லை. உடல் திறனும் குறைந்து போகிறது. இதையெல்லாம் நீக்கி என்றும் மாறாத இளமையுடன் 100 வயது வரை வாழ என்ன செய்ய வேண்டும்?
இதுதான் இன்றைய மருத்துவ விஞ்ஞானிகளின் முக்கிய ஆய்வுக்களமாக இருக்கிறது. இது தொடர்பான ஆய்வில் முதல் கட்டமாக வயது ஏற ஏற நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்று ஆராய்ந்தனர்.
அப்போது உடலில் உள்ள ‘திசு”க் கள் அழிந்து போவதால்தான் உடலில் இளமை குறைந்து ‘மூப்பு” தன்மை ஏற்படுவது தெரிந்தது. திசுக்கள் அழிந்து போனாலும் உடனுக்குடன் புதிய திசுக்களை உடல் உற்பத்தி செய்கிறது. இருப்பினும் வயது ஆக ஆக திசுக்களின் உற்பத்தி திறன் குறைகிறது. நமது உடலின் பாகங்கள் சிதைவது அதிகமாகிறது.
ஏன் இதுமாதிரியான பாதிப்புகளுக்கு நாம் ஆளாகிறோம்? இயற்கையாக மனிதனுக்கு ஏற்படும் ‘மூப்பு” தன்மையை தடுக்கும் வழி முறைகள் என்ன என்று விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.
உடல் என்பது ஒரு நேர்த்தியான படைப்பு. இருந்தாலும், அதன் பாகங்கள் சிதையும் தன்மை கொண்டது. உயிரியல் மாற்றங்களால் அவை பழுதடையும் தன்மையும் கொண்டவை. இந்தக் காரணங்களை வைத்து பார்க்கும்போது, நமது உடலை மரபு பொறியியல் (ஜெனடிக் என்ஜினீயரிங்) மூலமாக மேம்படுத்த முடியும். தடுப்பு மற்றும் மறுசெழிப்பு (Pசநஎநவெழைn யனெ சுந-புநநெசயவiஎந – பிரிவன்சன் அண்டு ரீஜென ரேட்டிவ்) மற்றும் மூப்பு தடுப்பு மருந்துகள் மூலம் மனித உடலை பராமரித்து இளமையை நீட்டிக்கச் செய்ய முடியும்.
மேலும் பழுதடைந்த உடல் பாகங்களை பழுது பார்த்தல் மற்றும் மாற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் தக்க வைத்துக்கொள்ள முடியும். இதன்படி இன்னும் சில ஆண்டுகளில் மனித உடல் ‘மூப்பு’ காரணமாக மரணிப்பதை தள்ளிப்போட முடியும். அதிக அளவில் இல்லாவிட்டாலும் ஒரு துளி அளவாவது ஆயுள் அதிகரித்தால்கூட அது வெற்றியின் முதல் படிக்கட்டாக இருக்கும்.
இந்த வெற்றியை அடைய விஞ்ஞானிகள் மருத்துவம் – பொறியியல், உயிர் பொறியியல் ஆகிய தொழில்நுட் பத்தை ஒருங்கிணைத்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
நம்பகத்தன்மை கொண்ட பொறியியல் அணுகுமுறை
மூப்பு (வயதாவது) என்றால் என்ன? என்பதை நம்பகத்தன்மை கொண்ட பொறியியல் அணுகுமுறை (வுhந சுநடயைடிடைவைல நுபெiநெநசiபெ யுppசழயஉh) மூலம் விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
நம்பக்கத்தன்மை கொள்கையின்படி – வயதாவது அல்லது மூப்படைவது ‘பழுதடையும் காரணங்கள்” மூலம் ஏற்படுகிறது என்பதாகும். ஏதாவது ஒன்றிற்கு வயதாகிக் கொண்டிருந்தால் இன்றைய நிலையை விட நாளைய நிலையில் அதற்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதுதான் நம்பகத்தன்மை கொள்கையாகும்.
காலம் செல்லச் செல்ல பழுதடையும் விகிதம் அதிக மாகாமல் இருந்தால் ‘மூப்பு” என்பதே இருக்காது என்கிறது இந்தக் கொள்கை.
மனிதனும் எந்திரமும்
ஒரு மனிதனுக்கு வயதாக வயதாக உடல் உறுப்புகள் பாதிக்கப்படுதல் வயதாகுதல் போன்றவை ஏற்படுவது போல தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் நாள் ஆக ஆக பழுதடைகின்றன. அதன் உதிரிப் பாகங்களும் செயல் இழந்து போகின்றன. இந்த இரண்டுக்கும் எவ்வாறு மூப்பு – பழுதுகள் பாதிக்கின்றன என்று ஆராய்ந்தால் சில ஒற்றுமைகள் தெரியும்.
இந்த இரண்டிலும் பழுதடையும் விகிதம் இங்குள்ள வரைபடம் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வளைவுகள் (கிராஃப்) குழந்தை இறப்பு விகிதம் சகஜமாக வேலை செய்தல் மற்றும் வயதாகும் கால அளவு என 3 பகுதிகளாக பிரித்து காண்பிக்கப்பட்டுள்ளது.
இயந்திரங்களின் வாழ்க்கை முறையை எடுத்துக் கொண்டால் அவை ஆரம்பத்தில் இயங்கும் வேகம், கால அளவு குறைவாகவே இருக்கும். மேலும், அவை பழுதடையும் விகிதமும் அதிக மாகவே இருக்கும். உதாரணமாக, புதிதாக ஒரு ‘பைக்” வாங்கும்போது தொடக்கத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போக வேண்டாம். வண்டி என்ஜீன் ‘பழகும்” வரை அதற்கு அதிக வேலை கொடுக்க வேண்டாம் என்று கூறுவதுண்டு. மேலும் அந்த புதிய வாகனம் நன்றாக ‘பழகும்” வரை சில்லரை பழுதுகள் ஏற்படுவதும் சகஜமாக இருக்கும்.
இதேபோலத்தான் மனிதன் – எந்திரம் இரண்டும் தொடக்க காலத்தில் நோய்களையும், பழுதுகளையும் சந்திக்கின்றன. நாளடைவில் நோய்கள் – பழுதுகள் குறைந்து விடும். சில நேரங்களில் உதிரி பாகங் கள் முற்றிலும் பழுதடைந்து எந்திரம் இயங்குவது நின்றுவிடும். அதுபோல குழந்தை பருவத்தில் சிலருக்கு ஏற்படும் திடீர் நோய் காரணமாக மரணம் ஏற்படுகிறது. மனித வாழ்வில் இதைத்தான் குழந்தை இறப்பு காலம் என்று அழைக்கிறார்கள்.
மனிதன் மற்றும் இயந்திரங்கள் தங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பிரச்சினைகளை சந்தித்தாலும் சில ஆண்டுகள் கழித்து அவை சகஜமாக இயங்கத் தொடங்கும். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து 5 வயது வரை நோய் வாய்ப்படுவது சகஜமாக இருக்கும். அதன் பிறகு அந்த குழந்தைக்கு நோய் தாக்குதல் ஏற்படும் விகிதம் குறைந்துவிடும். அதுபோல ஒரு எந்திரமும் தொடக்கத்தில் ‘பிரச்சினை’ ஏற்படுத்தினாலும் காலப்போக்கில் தொடர்ந்து இயங்கு வதன் மூலம் எந்த பிரச்சினை களையும் தராது.
இதை விஞ்ஞானிகள் சகஜ வேலைக்காலம் என்கிறார்கள். மனித வாழ்க்கையில் 5 வயதுக்கு பிறகு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சகஜ வேலைக்காலமாகும். இந்த கால கட்டத்தில் சிலருக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்டு.
நம்பகத்தன்மை கொள்கையின் கணக்கியல்
நம்பகத்தன்மைக் கொள்கையின் கணக்கியல் கூற்றின்படி ஒரு மனிதன் அல்லது எந்திரம் மூப்பு எதிர்ப்பு மற்றும் பழுதடையாத உதிரிப்பாகங்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்தாலும் வயதாக வயதாக ஒரு நிலையான விகிதத்தில் சேதம் (தேய் மானம்) அடைகிறது. மனிதர்களுக்கு நோய் (வைரஸ்) பாதிப்பு எந்திரங்களுக்கு கதிர் வீச்சு போன்றவை முக்கிய காரணமாக அமைகிறது.
பர்கின்ஷன் என்ற மருத்துவ விஞ்ஞானி மேற்கண்ட ஆய்வுகள் மூலம் மனித மூளை செல்லின் இறப்பு விகிதம் அனைத்து வயதினருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதே போல உடம்பில் உள்ள முக்கியமான செயல்களுக்கு காரணமான உடல் உறுப்புகளுக்கு வயதாவதில்லை. பல திசுக்கள் எத்தனை வயதானாலும் சேதமாகாமல் புதிதாகவே இருக்கிறது. எனவே, உபரி தன்மைகள் மூலம் மனித உடல் மூப்படைவதில் இருந்து தடுக்க முடியும் என்ற ஆராய்ச்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.
தகவல் தொகுப்பு: எம்.ஜே.எம்.இக்பால், துபாய்.
பிற்கால வாழ்க்கை
மனித வாழ்க்கையில் வயதாகும் காலம் 20 வயதிலேயே தொடங்கி விடுகிறது. அதன் பிறகு உடல் வளர்ச்சி அடைவது குறைந்து ‘தேய்மானம” அதிகமாகிறது. உயிரியலில் இதை பிற்கால வாழ்க்கை முடிவு காலம் என்கிறார்கள். இதுமனிதனுக்கு மட்டுமல்ல மனிதனால் தயாரிக்கப்படும் எந்திரங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுகிறது.
அடுத்தது வயதுக் கொள்கையாகும். ஒவ்வொரு நாட்டிலும் சராசரி ஆயுட்காலம் மாறுபடுகிறது. அதாவது, இரண்டாம் உலகப்போரின் போது (1950) இந்தியாவில் நடுத்தர வயதில் இறப்பவர்கள் எண்ணிக்கை நார்வே நாட்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் 80-89 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் இரண்டு நாட்டிலும் ஏறக்குறைய சம நிலையில் காணப்பட்டது.
5 ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியும்
மனிதனின் சராசரி ஆயுட்காலம் 58 ஆண்டுகள். மனிதன் பிறந்ததில் இருந்து 10 வயதுவரை அவனது உடல் மற்றும் உடல் உறுப்புகள் அதிவேகமாக வளர்ச்சியடைகின்றன. 11-ம் வயதில் இருந்து நமது உடலின் பாகங்கள் சேதம் அடையத் தொடங்குகின்றன.
10 வயதில் நமது உடல் கூறு எப்படி உள்ளதோ அது போல பராமரித்தால் மனிதனின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?
மயக்கம் அடைந்து விடாதீர்கள். 5 ஆயிரம் ஆண்டுகள். போதுமடா சாமி 58 வயது ஆவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. 5 ஆயிரம் வருடம் வாழ்வதா? என்று சலித்துக்கொள்ள வேண்டாம்.
விஞ்ஞான ஆய்வுகளின்படி ஒரு மனிதனுக்கு மரணம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது. (‘எட்டு எட்டாக மனித வாழ்க்கையைப் பிரித்துக்கொள்” என கவிஞர் பாடியது இதன் அடிப்படையில்தானோ!)