Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2006
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,846 முறை படிக்கப்பட்டுள்ளது!

கார் தயாரிப்பில் சீனிக்கிழங்கு

கார் மற்றும் வாகனங்கள் இரும்பு மற்றும் அலுமினியம் போன்ற உலோகப் பொருட்கள் மூலமும் பிளாஸ்டிக் ரப்பர் போன்ற செயற்கை தயாரிப்புகள் மூலமும் தயாரிக்கப்படுகிறது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கையாக (மண்ணில்) மட்கிப் போகும் தன்மை கொண்டவை அல்ல. சில பிளாஸ்டிக் உதிரிப்பாகங்கள் இயற்கைக்கும் சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை.

இத்தகைய ஆபத்துகளில் இருந்து விலகி சுற்றுப்புற சூழலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாத பொருட்களைக் கொண்டு கார் மற்றும் வாகனங்களின் பாகங்களை தயாரிக்க முன்னணி கார் நிறுவனங்கள் ஆய்வு நடத்தி வருகின்றன.

ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் சீனிக்கிழங்குகளில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தனது புதிய ரக கார்களின் உதிரிப்பாகங்களைத் தயாரித்துள்ளது. சீனிக்கிழங்கில் இருந்து கிடைக்கும் இயற்கையான அமிலத்தில் இருந்து பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கப்பட்டது. இந்த பிளாஸ்டிக் மண்ணில் புதைக்கப்படும் போது மட்கிப்போகும் தன்மை கொண்டது. இயற்கை பிளாஸ்டிக் மூலம் காரின் முன்பகுதியில் பொருத்தப்படும் பம்பர், காரின் உள்பகுதியில் பயன்படுத்தப்படும் தரை விரிப்புகள்,மற்றும் பிற உள் அலங்கார பொருட்கள் போன்றவை தயாரிக்கப்பட்டுள்ளன. சீனிக்கிழங்கில் இருந்து கிடைக்கும் பொருள் மூலம் தயாரான கார்கள் தற்போது ஜப்பானில் விற்பனையாகி வருகிறது. விரைவில் இந்த ரக கார்கள் பிற நாடுகளுக்கும் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கம்ப்யூட்டர்களுக்கு சக்தி தரும் கீரை

கீரை சாப்பிட்டால் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் என்று அடிக்கடி அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் கூறுவதுண்டு. (ஆனால் குழந்தைகளுக்கோ கீரை என்றாலே அலர்ஜி).கீரையில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது என்று தெரிந்த போதும் அதை பலர் விரும்பிச் சாப்பிடுவதில்லை. ஆனால் கம்ப்யூட்டர்கள் இயங்குவதற்குரிய சக்தியை தரும் அளவுக்கு பசலைக்கீரையின் மகத்துவம் அமைந்துள்ளது.

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி ஆய்வு நடத்தி பசலைக்கீரையில் இருந்து மின்சாரம் தயாரித்து அதன் மூலம் கம்ப்யூட்டரை இயங்க வைக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

இதுபற்றிய தகவல்கள் வருமாறு..

கம்ப்யூட்டர்கள் மின்சாரம் மற்றும் பேட்டரிகள் மூலம் இயங்குகின்றன. கம்ப்யூட்டர்களின் சக்தி மற்றும் திறனுக்கு ஏற்ப அவை இயங்கத் தேவையான மின் சக்தியின் அளவு மாறுபடும். தாவரங்கள் தங்களுக்கு தேவையான சக்தியை சூரிய ஒளியில் இருந்து பெறுகின்றன. விலங்குகள் போல அவற்றால் உணவு சாப்பிட முடியாது. அதற்கு பதிலாக ஒளிச் சேர்க்கை மூலம் தங்களுக்குத் தேவையான உணவை பெறுகின்றன.

தண்ணீர், பச்சையம், மற்றும் சூரிய ஒளி ஆகியவை இணைந்து செயல்படும் போது ஒளிச்சேர்க்கை  நடைபெறுகிறது. இந்த ஒளிச்சேர்க்கைக்கு காரணமான புரதத்தை தனியாக பிரித்து அதை பயன்படுத்தி சூரிய ஒளி மூலம் மின்சக்தி தயாரித்து எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடியுமா என்பது குறித்து மாசாசூ செட்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது. பசலைக் கீரையில் இருந்து பிரிக்கப்பட்ட புரதத்தை ஒரு கருவியில் பொருத்தினார்கள். அந்த புரதம் கெட்டு விடாமல் இருக்கவும் அதில் இருந்து ஒளிச்சேர்க்கை நடைபெற தண்ணீர் மற்றும் பச்சையம் வெளிப்படும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கருவி சூரிய ஒளி மூலம் தானாகவே மின் சக்தியை தயாரித்து கம்ப்ய10ட்டர் அல்லது எலக்ட்ரானிக் பொருட்களில் உள்ள பேட்டரிக்கு மின் சக்தியை அனுப்பியது.

தற்போது ஆய்வு நிலையில் இருக்கும் இந்த கருவி மூலம் குறைந்த அளவு மின்சாரமே தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் விரைவில் நமக்கு தேவைப்படும் அளவு மின்சாரத்தை தயாரிக்கும் வகையில் இந்த கருவி மேம்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இளமை தரும் ‘மருந்து’

நிரந்தரமான இளமையுடன் இருக்க வேண்டும், என்பது பலரது ஆசை, விருப்பம். இதற்காக தங்க பஸ்பங்களையும், லேகியங்களையும் தேடிச் செல்பவர்கள் பலர். நிரந்தரமான இளமைக்கான மருந்துகளை கண்டு பிடிப்பதில் மருத்துவ விஞ்ஞானிகளும் தீவிரம் காட்டி வருகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் இது தொடர்பாக நடத்தி வரும் ஆய்வுகளில் ஓரளவு முன்னேற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த ஆய்வுகளில் மரபணு தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மனித மரபணு (ஜீன்) வரைபடம் தயாரிக்கப்பட்ட பிறகு இளமைக்கு காரணமான ‘ஜீன்” எது என்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். முதுமையை வரவிடாமல் தடுக்கும் மரபணு சிகிச்சை முறைகள் மூலம் நீடித்த இளமையை மனிதன் பெற முடியுமா? என்று ஆய்வுகள் நடந்து வருகிறது. இது தொடர்பான தகவல்கள் இந்த இதழில் இடம் பெறுகிறது.

வயதாவது காரணமாக மூப்படைவது மற்றும் உடல் உறுப்புகள் தளர்ந்து போவது இயற்கையாக நடை பெறும் செயலாகும். ‘மூப்பு” அடை வதை தடுக்கும் மருந்துகள் தயாரிப்பதில் ‘ஜீன்” தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறித்து இங்கிலாந்தில் உள்ள நிய10கேசில் பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தி வருகிறது.

மனித உடலில் உள்ள இயற்கையான பழுது பார்க்கும் முறையை மேம்படுத்துவதன் மூலம் என்றும் இளமையுடன் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதாவது ஒவ்வொரு மனிதனின் உடலிலும் நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்படும் பழுதுகளை தானே சரி செய்து கொள்ளும் சக்தியும் உள்ளது. இந்த பழுது பார்க்கும் இயற்கையான சக்தியை  அதிகப்படுத்த அல்லது து}ண்டிவிடக் கூடிய மருந்து எது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பி.ஏ.ஆர்.பி.-1  என்ற சிறப்பு புரதத்தின் அளவு அதிகரிக்கும் போது பழுதான உடல் உறுப்புகள் சீரடைவது வேகமாக நடைபெறுகிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது. குறிப்பிட்ட சில மரபணுக்கள் பழுதடைவதால் தான் இளமை மாறி முதுமை ஏற்படுகிறது இதை சரிசெய்ய பி.ஏ.ஆர்.பி.-1 புரதம் து}ண்டுகோலாக இருக்கிறது.

இதுகுறித்து ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் அலெக் சாண்டர் பர்க்ளி கூறும்போது, ‘நியாசின்  என்ற விட்டமினும் மரபணு கோளாறுகளை சரி செய்து வயதாவதை தடுக்க உதவுகிறது” என்று கூறி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைக்கும் பி.ஏ.ஆர்.பி.-1 புரதம் பெரிதும் உதவுகிறது என்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

நியூகேசில் பல்கலைக்கழகத்தின் மூப்பியல் துறையைச் சேர்ந்த விஞ்ஞானியான டாக்டர் அலெக்சாண்டர் பர்க்ளி மேலும் கூறும்போது ‘வயது ஆக ஆக சில திசுக்களில் பி.ஏ.ஆர்.பி.1 புரதசத்து குறைந்து கொண்டே போகிறது. எனவே மிக திறன் கொண்ட பி.ஏ.ஆர்.பி.1 புரதத்தை பயன்படுத்துவதன் மூலம் மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்ய முடியும் என்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் நாங்கள் புதிய ‘திசு”க்களை ஆய்வுக் கூடத்தில் உருவாக்கி இருக்கிறோம். இது எந்த பாதிப்பையும் தாங்கும் சக்தி கொண்டதாக உள்ளது. எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு புதிய வழிமுறைகளை இதன் மூலம் அறியலாம்” என்று கூறி இருக்கிறார்.

எலிகள் மூலம் நடந்த ஆய்வுகள்

மனிதனுக்குரிய இளமை மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஒரு பகுதியாக எலிகளை வைத்து சோதனைகள் நடந்தது. நிய10கேசில் விஞ்ஞானிகள் குழு இதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டது. வௌ;வேறு ஆயுட்காலம் கொண்ட பலதரப்பட்ட விலங்குகள் இந்த ஆய்வுகளில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது பி.ஏ.ஆர்.பி.1 புரதசத்தின் அளவு ஒவ்வொரு விலங்கிற்கும் மாறுபட்டு இருப்பது தெரிய வந்தது.

உதாரணமாக எலியின் ஆயுட்காலம் குறைவு. அதேநேரத்தில் பி.ஏ.ஆர்.பி. 1 மூலம் பெறப்படும் சக்தியும் மிகக் குறைவு. மேலும் (பூனை, பாம்பு போன்ற) பிற விலங்குகளால் வேட்டையாடப்படும் ஆபத்தும் எலிக்கு அதிகம். இதன் காரணமாக எலியின் ஆயுட்காலம் குறைவே. எனவே எலியின் ஆயுட் காலத்தை நீடிப்பதை விட அதனுள் இருக்கும் சக்தியை மறு உற்பத்தி செய்து கொள்ளும் விகிதத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.

எலிகளுக்கு இளமை திரும்புவதற்குரிய ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மிகுந்த ஆர்வம் அளிக்கிறது என்றும் இதன்மூலம் மனிதனுக்கான இளமை மருந்துகள் தயாரிப்பில் முன்னேற்றம் கிடைத்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய விஞ்ஞானிகளும் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் ஆய்வின் மூலம் இரண்டு இயற்கை வேதியியல் பொருட்களின் கலவையை மிருகங்களுக்கு கொடுத்து சோதனை செய்தனர். இந்த மருந்துகள் மூலம் விலங்குகளின் ஆற்றல் அதிகரித்தது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் புரூஷ் ஆம்ஸ் என்ற விஞ்ஞானி கூறும்போது, ‘இந்த மருந்துகளினால் ஏற்படும் ஆற்றல் மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது” என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘மருந்துக் கலவை செலுத்தப் பட்டபின்னர் இரண்டு வயதான எலிகள் தங்களது இளம் வயதில் இருப்பது போன்று சுறுசுறுப்பாக துள்ளித்திரிந்தன. மூளையின் சக்தி அதிகரித்து அவை அதிக ஆற்றல் மற்றும் நினைவுத் திறனுடன் இருந்தன.

சுருக்கமாகச் சொல்வதென்றால் 80 வயது மனிதன் நடுத்தர வயது மனிதனைப்போல் செயல்பட்டால் எவ்வாறு இருக்குமோ அப்படி இந்த எலிகள் இருந்தன” என்று கூறினார்.

எலிகளுக்கு கொடுக்கப்பட்ட வேதியியல் பொருட்கள் அசிடைல் – எல்-கார்னைட்டைன் மற்றும் ஆல்பா லிபோயிக் அமிலம் ஆகும். இந்த இரண்டும் மனித உடலின் செல்களில் இயற்கையாகவே காணப்படும். அசிடைல் -எல்-கார்னைட் ஆற்றல் தரும் மருந்தாகவும் ஆல்பா-எல்-கார்னைட் ஆசிட் ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படுகிறது. இதன்மூலம் மனிதன் வயதாவதை தடுக்க இவை செயல்புரிகின்றன.

 வயதாகும்போது ஏற்படும் சேதங்கள்

நம்பக தன்மை கொள்கை மூலமாக ஏன் இப்படி வயதாகிறது என்பதற்கான மூல காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

வயதாக வயதாக நமது உடல் பாகங்கள் சிதைந்து போகின்றன. ஒரு காலகட்டத்தில் சில பாகங்கள் தன் இயக்கத்தை நிறுத்தி விடுகின்றன. ஆனால் நம்பகத் தன்மை கொள்கையின் மூலம் உயிர் மருத்துவத்துறையில் கவனம் செலுத்தினால் வயதாகும் வேகத்தை, விகிதத்தை குறைக்கவோ அல்லது கட்டுப் படுத்தவோ முடியும்.

இவற்றில் மிகவும் சிறந்ததாக கருதப்படுவது மனிதனின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சேதங்களை தடுப்பதே. வயதாக வயதாக ஏற்படும் சேதங்களை தடுத்தால் நமக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதோடு ஆயுட் காலத்தையும் அதிகரிக்க முடியும்.

குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே தாய்மார்களுக்கு தேவையான அளவு விட்டமின் (போலிக் ஆசிட்டோன் போன்றவை) மற்றும் நுண்ணு}ட்டல்கள் (ஆiஉசழ ரேவசநைவெள) கொடுப்பதன் மூலம் மரபணு மூலக்கூறுகளில் ஏற்படும் பாதிப்பு, கருவில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியும். கருவில் இருக்கும்போது செலுத்தப்படும் நச்சு எதிர்ப்பு  மரபணு மூலக்கூறு மற்றும் திசு கட்டமைப்புகளில் ஏற்படும் பாதிப்பை தடுத்து நீண்ட ஆயுளைக் கொடுக்கிறது.

இந்த வகையான ஆராய்ச்சிகள் மூலம் ஒரு குழந்தை பிறக்கும் முன்பே அதாவது கருவில் இருக்கும்போதே, எதிர்காலத்தில் அதற்கு வரும் நோய்களை தடுத்து ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்ய முடியும்.

தசைகள் மற்றும் உடல் பாகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் முறைகளில்கூட ஆய்வுகள் நடந்து வருகிறது. அதிகமாகப் பரவும் மரபுவழி தொற்றுகள்  மற்றும் அலர்ஜிகளை களைவதால் மூட்டழல், நீரிழிவு நோய்கள் சில வகையான புற்று நோய்கள் போன்ற பல நோய்களை தள்ளிப்போட முடியும். அதேசமயம் இம்மாதிரியான நோய்கள் தாக்கும்பொழுது நமது உடலை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை மிகவும் தௌ;ளத்தெளிவாக நாம் தெரிந்திருக்கவேண்டும்.

உயிர்வாழும் தனி பாகங்களுக்கு (ழுசபயnளைஅள) சரி செய்ய பலவித இயக்க முறைகள் ஏற்கனவே நம்மிடம் உள்ளன. உதாரணமாக செல்கள் மடிவதற்கு வெயில் தாக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இவை தானாகவே புதிய செல்கள் மூலம் மறுமாற்றம் செய்யப்படுகிறது. இம் மறு மாற்றம் ‘ஸ்டெம் செல்கள” மூலம் ஏற்படுகின்றன. ‘ஹர்மிஷிஷ” விளைவு என்பதைப்பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதன்படி ஒரு துளி விஷம் செலுத்தினால் உடலில் உள்ள தன் பழுதுபார்க்கும்  இயக்க முறையை இயக்குகிறது. அதேசமயம் இந்த விஷத்தால் ஏற்படும் பக்க விளைவுகளை மற்ற உடல் முறைமைகளை தடுக்கிறது. இந்த தடுப்பு முறைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அறிந்தால் போதும், செல்கள் மடியும் வீதத்தை தடுக்கவும், குறைக்க வும் முடியும். மேலும் வயதாவதற்குண் டான முறைகளின் கால அளவை நீடிக்கவும் முடியும்.

நமது உடலில் பாதிப்படைந்த பாகங்களுக்கு மாற்றாக புதிய மற்றும் ஆரோக்கியமான பாகங்களை உருவாக்கும் முறைகள் பற்றிய ஆய்வுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதாவது ஒருவருக்கு இருதயக் கோளாறு என்றால் அதை வெட்டி எடுத்துவிட்டு புதிய இருதயத்தை சோதனைச் சாலையில் உருவாக்கி பொருத்த முடியும். சம்பந்தப்பட்ட நோயாளியின் உடலில் இருந்து எடுக்கப்படும் திசு மூலம் புதிய இருதயத்தை அல்லது பிற உடல் உறுப்புகளை உருவாக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

திசுப் பொறியியல் முறைகள்  மற்றும் மறு உற்பத்தி மருந்துகள் மூலம் சோதனைச் சாலையில் இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றை உருவாக்கும் இந்த ஆய்வுகள் கற்பனைக்கதை போல தோன்றலாம். ஆனால் இதற்கான ஆய்வுகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

வருங்காலத்தில் வயதான காலத்தில் உள்ள மனிதனின் பழைய உடல் உறுப்புகளை அகற்றிவிட்டு புதிய பாகங்களை பொருத்தும் நிலை ஏற்படும். மேலும் ஸ்டெம் செல்கள் மூலம் பழுதான பாகங்களை புதுப்பிக்கவும் முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாகும்.

நல்லதை நினைத்தால் இளமையுடன் இருக்கலாம்

‘எண்ணங்களே செயல்களாகின்றன” என்று சொல்வதுண்டு. மனிதனின் எண்ணங்களுக்கும் (சிந்தனை சக்திகளுக்கும்) செயல்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று உளவியல் அறிஞ்ர்களும் தெரிவித் துள்ளனர்.

‘ஒருவர் நல்லதை நினைத்தால், நேர்மறையான எண்ணங்களை கொண்டிருந்தால் அதன் மூலம் வயதாவதை தடுத்து இளமையுடன் வாழலாம்” என்று புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் மூப்பியல் ஆய்வுத்துறை இது தொடர்பாக கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. மெக்சிகோ-அமெரிக்கா இனத்தைச் சேர்ந்த 1,558, வயதான நபர்களைத் தேர்ந்தெடுத்தனர். இவர்களிடம் 7 ஆண்டுகாலம் இந்த கருத்துக் கணிப்பு ஆய்வு நடைபெற்றது.

நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நேர்மறையான எண்ணங்கள், அளவான உணவு, முறையான உடற்பயிற்சி… போன்றவை உள்ள மூத்த குடிமக்களின் வாழ்வு, உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பது பற்றியும் இதில் இருந்து மாறுபட்டவர்களின் உடல் ஆரோக்கியம் வாழ்வு முறை எப்படி இருக்கிறது என்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டது.

இதில் நல்ல எண்ணங்களுடன் இருந்தவர்கள் சுறுசுறுப்பாகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இளமையான செயல்பாடுகளுடன் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, ‘நல்ல எண்ணங்களுக்கும் உடல் நலத்துக்கும் தொடர்பு இருக்கிறது. நலல நேர் மறையான எண்ணங்கள் மூலம் மனித உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இளமையான தோற்றமும் சுறுசுறுப்பும் உருவாகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உலக மூப்பு எதிர்ப்பு மாநாடு

மனிதன் எதையும் சாதிக்கும் மனம் கொண்டவன். சாதித்துக் கொண்டிருப்பவன். நிரந்தரமாக வாழும் ஆசை. மரணம் இல்லாத வாழ்வு, என்றும் இளமை… என்பதெல் லாம் மனிதனின் கனவுகளில் ஒன்றாகும்.

இந்த கனவுகளை நனவாக்கும் வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 10 மற்றும் 11-ந் தேதிகளில் லண்டனில் உலக மூப்பு எதிர்ப்பு மாநாடு  நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆராயப் பட்டது.

மூப்பு எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைக்கான ஆர்.என்.ஏ.சிகிச்சையின் முன்னேற்றங்கள்.

 உயிர் தொழில் நுட்பங்கள் (டீழை வநஉhழெடழபல) மற்றும் மூப்பு எதிர்ப்பின் முன்னேற்றங்கள்

 மெட்டபாலிக் சிண்ட்ரோம்

மூப்பு எதிர்ப்பு மருந்தின் பாலி மார்பிசம் சிகிச்சை முறைகள்.

இளம் வயதினருக்கான ஹார்மோன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் சிகிச்சை

மனிதனுக்கு ஏற்படும் டெஸ்டோஸ்ட்ரான்  பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் சிகிச்சை.

மூப்படைதலுடைய குவாண்டம் மெக்கானிசம்  பற்றி அறிதல்

உடல் பருமன் எதிர்ப்பு சிகிச்சை:

உயர்ரக ஊட்டச்சத்துக்கள்  முதுமை அடையாத வாழ்க்கை (யுபந குசநந) முறைக்கான அதிக திறன் வாய்ந்த வாழ்க்கைத் திட்டங்கள் மற்றும் வழிமுறைகள்.

தகவல் தொகுப்பு: எம்.ஜே.எம்.இக்பால்,துபாய்.