உறவினர் ஒருவர். அவருக்கு நடுத்தர வயது. கனத்த குரல்! கம்பீரமான உடல்வாகு!
கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்த என்னை கைதட்டி அழைத்தார்!
அருகில் சென்றேன்.
“என்னுடன் வா” என்று சுருக்கமாகச் சொன்னார்.
சின்னப்பள்ளிவாசல் காம்பௌன்ட் சுவர்ப்பக்கம் செல்லும் வரை ஒன்றும் பேசவில்லை.
குழப்பத்துடன் அவருடன் சென்றேன்.
சுவரில் கரியால் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகத்தைச் சுட்டிக்காட்டி, “இதை எழுதியது நீதானே?” என்று கேட்டார்!
“இல்லை” என்றேன்.
அது ஒரு கொச்சையான வாசகம்!
ஆனால், அதற்கருகில் எழுதப்பட்டிருந்த ஒரு நாடக விளம்பரத்தைச் . . . → தொடர்ந்து படிக்க..