Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2009
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,864 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறக்கமுடியுமா உங்களை, மாலிக்?

ராஜகிரி தந்த நன்முத்து – ‘ஜமால்’ மெருகேற்றிச் செதுக்கிய மாண்பாளர், சமுதாய நற்பணியாளர் அப்துல் மாலிக் அவர்கள் நமையெல்லாம் விட்டுப் பிரிந்து, படைத்தவனின் அழைப்பில் பறந்துவிட்டார் என்ற செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத நிலையிலேயே இந்த வரிகளைப் பதிவு செய்கிறோம்.

மாலிக் ஓர் அற்புதமான மனிதர் -விலைமதிக்க முடியாத மாணிக்கம் என்பதை அவருடன் பழகியவர்கள்-பயன்பெற்றவர்கள் தங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல -உடல்களின் ஒவ்வோர் அணுவிலும் சுமந்துகொண்டே சுவாசிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வழியே இல்லை!

அவரது ஆர்ப்பாட்டமில்லாத அணுகுமுறை – விளம்பரம் பிடிக்காத சமூக சேவை-சலனத்துக்கு அப்பாற்பட்ட சிந்தனைத் திறன் – பசைபோல ஒட்டிக்கொள்ளும் பாச நெருக்கம், எப்போதும் முகத்தில் பரந்து விரிந்த மென்னகை – கண்களில் ஒளிரும் தீட்சண்யம் எல்லாமே அவருக்கு மட்டுமே சொந்தமான சொத்துக்கள்! தமது ஜித்தாஇல்லத்தில் விருந்தினரை உபசரிப்பதில் அவரும் அவரது துணைவியாரும் பிள்ளைகளும் காட்டும் பாசமும் பரிவும் நாகரிகமும் நினைவிலிருந்து நீங்குவதற்கு வாய்ப்பே இல்லை!

அப்துல் மாலிக் த‌மிழ‌க‌த்தின் த‌ஞ்சை மாவ‌ட்ட‌ம் ராஜ‌கிரியைச் சேர்ந்த‌வ‌ர். ச‌வுதி அரேபியாவில் 25 வ‌ருட‌ங்க‌ளாக‌ப் ப‌ணிபுரிந்து வ‌ருப‌வ‌ர். முதுநிலைக் க‌ல்வி க‌ற்ற‌வ‌ர். ‘டைர‌க்டரி’ முறையை ச‌வுதியிலும், ச‌ர்வ‌தேச‌ அள‌விலும் அறிமுக‌ப்ப‌டுத்திய‌தில் முன்னிலை வ‌கித்த‌வ‌ர்.

ஜித்தா ச‌ர்வ‌தேச‌ இந்திய‌ப் ப‌ள்ளியின் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ முத‌ல் த‌லைவ‌ர். ச‌வுதி இந்திய‌த் தூத‌ர‌க‌த்தின் கீழ் செய‌ல்ப‌டும் ப‌ள்ளிக‌ளின் க‌ல்விக்குழுவில் அங்க‌ம் வ‌கித்த‌வ‌ர். இந்திய‌ புனித‌ப் ப‌யணிக‌ள் ந‌ல‌ச்ச‌ங்கத்தை ஏற்ப‌டுத்தி முத‌ல் ஐந்து ஆண்டுக‌ள் அத‌ன் த‌லைவ‌ராக‌ இருந்து, இந்திய‌ ஹ‌ஜ் ப‌ய‌ணிக‌ளின் குறைக‌ளை போக்க‌ முய‌ற்சிக‌ள் மேற்கொண்ட‌வ‌ர்.

ஜித்தா த‌மிழ்ச் ச‌ங்க‌த்தை துவ‌க்கி அத‌ன் த‌லைவ‌ராக‌ 12 ஆண்டுக‌ள் இருந்த‌வ‌ர். ச‌வுதி அரேபியாவில் உள்ள‌ அனைத்து த‌மிழ்ச் ச‌ங்க‌ங்க‌ளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வ‌ந்து ச‌வுதி த‌மிழ்ச் ச‌ங்க‌ம் ஏற்ப‌டுத்த‌ காரண‌மாக‌ இருந்த‌வ‌ர். திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ நிர்வாகி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌த‌விக‌ளை வ‌கித்து வ‌ந்த‌வ‌ர்.

எழுப‌துக்கும் மேற்ப‌ட்ட‌ சிறுக‌தைக‌ளை எழுதிய‌வ‌ர். ‘திரை வில‌கிய‌போது’, ‘புய‌ல்க‌ள் ஓய்வ‌தில்லை’, ‘விடைக்கேற்ற‌ விலை’ ஆகிய‌ மூன்று சிறுக‌தைத் தொகுதிக‌ளை வெளியிட்டார். அவ‌ர‌து சிறுக‌தைக‌ள் ப‌ல்க‌லை ம‌ற்றும் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளால் ஆய்வு செய்ய‌ப்பட்டு எம்.ஃபில் ம‌ற்றும் பி.எச்.டி ப‌ட்ட‌ங்க‌ளைப் பெற்றுள்ள‌ன‌ர்.

ராஜகிரி தந்த மாஅல்ஹிஜ்ரா டான்ஸ்ரீ உபைதுல்லாஹ் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, அவர்களின் சமூகத் தொண்டை சென்ற ஆண்டுதான் நாம் இந்தப் பக்கங்களில் இழப்புணர்வோடு பதிவு செய்தோம். அவரது சகோதரர் மகனான மாலிக் அவர்களும் இவ்வளவு சீக்கிரம் நம்மிடமிருந்து விடை பெறுவார் -இந்தப்பக்கங்களில் இடம்
பெறுகிறார் என்பது நம்மை ரொம்பவே உருக்குகிறது!

என்றாலும் எல்லாம் அறிந்த அல்லாஹ்வின் தீர்ப்புக்கு அடிபணியும் நல்ல முஸ்லிகளாக நாம் அந்த வல்லவனின் முடிவை ஏற்றுக் கொண்டு பொறுமையுடன்  அவரது மறுமைப் பேறுகளுக்காகப் பிரார்த்திப்பதும், அவரது துணைவியார், பிள்ளைகள், குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதும் மட்டுமே நம்மால் முடிந்தவை.

அல்லாஹ் நமது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வானாக, ஆமீன்!

நன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் – நவம்பர்-2009