Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,296 முறை படிக்கப்பட்டுள்ளது!

டாக்டர் E.A. சித்திக் அவர்களுக்கு பத்மஸ்ரீ

அரிசி விஞ்ஞானி டாக்டர் E.A. சித்திக் அவர்களுக்கு பெருமைக்குரிய பத்மஸ்ரீ விருது

இளையான்குடியில் பிறந்து அரிசி ஆராய்ச்சியில் உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் E.A. சித்திக் அவர்கள் இந்த ஆண்டின் பத்மஸ்ரீ விருதுக்கு இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாக்டர் சித்திக் அவர்கள் தற்பொது ஹைதராபாத்தில் வசித்து வருகின்றார்.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல்வெறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை பத்ம விருதுகளுக்காக தேர்வு செய்கின்றது. டாக்டர் E.A. சித்திக் அவர்கள் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அரிசிகள் நமது இந்திய நாட்டிற்கு அதிகமான அந்நியச் செலவாணியைப் பெற்று தந்துள்ளது. இளையான்குடியைச் சேர்ந்தவர் மிகப்பெரிய விருதைப் பெறுவது நமதூருக்கு மிகப்பெரிய பெருமையாகும்.

இளையான்குடியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் உதவித்தொகை வழங்கி வருகின்றார். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மெடல்களும் பரிசுகளும் வழங்குவதற்கு ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் கடுமையான உழைப்பிற்கும் தன்னலமற்ற சேவைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய ஒரு கௌரவமாகும்.

உலகம் போற்றும் வேளாண் அறிஞர் பல தேசிய மற்றும் அனைத்துலக விருதுகளை வென்றவர். இந்திய தேசிய விரிவுரையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வேளாண் துறையின் ஆலோசகராக இந்தியப் பிரதமரை ஒவ்வொரு மாதமும் சந்திக்கும் பேறு பெற்றவர்.  ஐம்பதுக்கும் மேற்பட்ட இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்.

சாதாரண பாஸ்மதி அரிசியைவிட அதிக விளைச்சல் மற்றும் உயர்தரம் வாய்ந்த ‘புசா பாஸ்மதி-1″ எனும் புதுவகை பாஸ்மதி அரிசியைக் கண்டுபிடித்து, ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமான வருவாயை 1990ன் ஆரம்பம் முதல் அந்நியச் செலவாணி மூலம் இந்தியாவுக்கு வருடந்தோறும் கிடைக்கச் செய்பவர்…இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் நம்மில் ஒருவர். ஒரு இளையான்குடி நபர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் டாக்டர்  E.A. சித்திக் அவர்கள்.

இந்த அறிஞரின் சாதனைகளை நமது இணையதளத்தில் வெளியிட்டு அவரைக் கௌரவப்படுத்துவதோடு, அவரது சாதனைகள் யாவும் நமது இளைஞர்களுக்கு தூண்டுகோளாக அமையும் என்றும் எண்ணினோம். எனவே, தற்போது ஆந்திர மாநிலம், ஹைதராபாத் நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் டாக்டர். சித்திக் அவர்களை ஹாஜி.வாஞ்சூர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தமது பல்வேறு நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார். நம் ஊர் முக்கியஸ்தர்கள் பலரை இன்னும் தமது பேச்சில் மறவாமல் சுட்டிக்காட்டுவது அவரது பேச்சில் நாம் கண்ட ஆச்சர்யம்.

1959-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர், புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆய்வு மையத்தில் சைட்டோஜெனிடிக்ஸ் பிரிவில் 1964ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், அதே மையத்தில் 1968ம் வருடம் சைட்டோஜெனிடிக்ஸ் பிரிவில் தனது முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

1968 முதல் 1976 வரை சைட்டோஜெனடிசிஸ்டாகவும், 1976 முதல் 1983 வரை மூத்த விஞ்ஞானியாகவும் புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் மையத்தில் பணியாற்றினார். பின்னர், 1983 முதல் 1086 வரை மூன்றாண்டுகள் எகிப்தில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நிபுணராக சேர்ந்தார். அங்கு நெல் ஆராய்ச்சியை மேம்படுத்த முக்கியப் பங்காற்றினார். வியட்நாமில் அரசு உதவியுடன் தேசிய நெல் ஆராய்ச்சி மையம் அமைய பெரும் பங்காற்றினார். உலக வங்கியின் ஆலோசகராக பங்களாதேஷில் வேளாண்துறையில் முன்னேற்றம் காண உதவி செய்தார்.

பட்டங்களும், பதக்கங்களும்

தனது ஆராய்ச்சிக்காக பல்வேறு அமைப்புகள் உயரிய விருதுகளை வழங்கி இவரைக் கௌரவித்துள்ளன. அவற்றுள் சில.. 

  •  Hari Om Ashram Trust National Award for Genetics from ICAR (1976).
  •  Vasvik National Award for Agricultural Research & Technology from the Vasvik Foundation (1981). 
  •  Amrik Singh Cheema Award for 1987-88. 
  • Silver Jubilee Medal/Memento from DRR (1990). 
  • Shri Om Prakash Bhasin Award for Science & Technology (1994). 
  • Recepient of Norman Borlaug Award (1995). 
  • Rafi Ahmed Kidwai Award for 1995. 
  • Silver Jubilee Medal/Memento from INSA (1997). 
  • Mementos from Governments of Tamil Nadu and Egypt for contributions to rice research.  

டாக்டர் சித்திக் அவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு கல்வி நிறுவனங்களாலும், வளரும் அறிவியலாளர்களாலும் பெரிதும் பயன் படுத்தப்படுகின்றன.

இவரது துணைவியார் ஃபாத்திமுத்து சித்திக். இவரும் நம் ஊரில் உதித்தவரே. பல்வேறு புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர் உலகம் போற்றும் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக சேவகி என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் போற்றும் ஒருவர் நம்மில் இருப்பது நமக்குப் பெருமை. இதனை வழங்கிட்ட இறைவனுக்கே எல்லாப் புகழும்.

முகவரி

Office Residence
Hononary Professor Biotechnology,
Biotechnology Unit,
A.R.I Campus,
Acharya N.G. Ranga
Agricultural University,
Rajendranagar,
Hyderabad 500030,
Andhra Pradesh;
Tel: (040) 24012695;
Jasmine,
Plot No. 81,
Happy Homes Colony,
Upperpally,
Hyderguda PO,
Hyderabad 500048,
Andhra Pradesh
Tel: (040) 24018625;
Fax: (040) 24014072;

More details available at : http://www.cdfd.org.in/labpages/e_a_saddiq.html

 நன்றி : வாஞ்சூர். முஹம்மது அலி ஜின்னா (சிங்கப்பூர்) – எழுத்தாக்கம் : அப்துல் ரஹிம் (அத்து).

http://www.ilayangudi.org