- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

தற்கொலை – இஸ்லாமிய செய்தி!

[1]தற்கொலை –  இன்றைய செய்தியும் இஸ்லாமிய செய்தியும்!

தற்கொலை குறித்த இன்றைய செய்தி:
உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம். இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில்தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் 11 விழுக்காடு என தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதுமிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

சமீப காலமாக அதிகரித்துவரும் குடும்ப பிரச்சனைதகள் மற்றும் காதல் தோல்விகளால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலை சம்பவங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரே ஆண்டில் சுமார் 775 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு, காதல் தோல்வி, கடன் பிரச்சனை, தீராத நோய் போன்ற பலவிதமான காரணங்களுக்காக கடந்த 2010ஆம் ஆண்டில் 775 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 35 முதல் 55 வயதுடையவர்கள் அதிகமாக தற்கொலையில் ஈடுபட்டுள்ளனர்.

பரீட்ச்சையில் தோல்வி, கடன் பிரச்சனைக்காக 6.5 சதவீதமும், குடும்பப் பிரச்னைக்காக 60சதவீதம் பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம்ஆகியவற்றால் 28 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற 2009ஆம் ஆண்டில் இதே போன்ற காரணங்களுக்காக 701 பேர்தற்கொலை செய்துகொண்டனர்..  இது குறித்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  பொன்.சிவானந்தம்,  “தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது  என்றார்.

மேலும் அவர் கூறுகையில் அதிகமாக தற்கொலை செய்துகொள்வோர் குடும்பப்பிரச்னையில் தான் தற்கொலை செய்து கொள்கின்றனர். கணவன், மனைவி இடையே பரஸ்பரம்விட்டுக் கொடுத்தல், புரிந்துணர்வு இல்லாமை போன்றவையே முக்கிய காரணங்களாகும்.  இதற்குதற்கொலை தீர்வு ஆகாது.
இதுபோன்ற தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதன்மூலம் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியும் என்றார்.

தற்கொலையை தடுக்கும் இஸ்லாமிய செய்தி:

 இது மட்டுமின்றி தற்கொலை செய்து கொள்வோருக்கு ஜனாசா தொழுகை எனப்படும் இறுதி  பிரார்த்தனை கூட கிடையாது எனும் மார்க்க சட்டத்தின் படி முஸ்லிம்களின் தற்கொலை விகிதசாரம் மற்ற மதத்தினரை விட மிகக்குறைவாக இருப்பதாக தற்கொலை குறித்த ஒரு தேசிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது! ஆக இஸ்லாம் ஒன்றே தற்கொலைக்கு தீர்வு  என்பதை உலகிற்கு இந்த செய்தி உணர்த்துகிறது!

தகவல்-நூருல்   அமீன்