நீ அதிசயம் மட்டுமல்ல …
நீ ஆச்சரியமான ஆசான் ….
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ….
உன் பாகுபாடில்லாத அணுகு முறையால்
நீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே ….நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ….சுத்த தங்கமாக நீ வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி …..
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ….நன்மையின் உச்சம் ..நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது …
உன் வருகையால் அடைந்த தைரியம் … அளவிடற்கரியது …உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம்,
உன்னில் நீந்தினோம்,
உன்னில் பயணித்தோம்,
உன் வரவால் பயிரிட்டோம் …
உன்னால் நாங்கள் அடையும் சுகம் … விவரிக்கமுடியதது …உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம் …… எப்படி சொல்வேன்? …நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்த வற்றஎல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ….
உயிரினம் சுவாசிக்க …. புசிக்க …..
மட்டுமல்ல …. ரசிக்கவும்!!!!ஆனால்……….?
நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் …..உன் வழியை,
உன் பாதையை,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன …..உன் வரவை அவர்களே (உயிரினங்கள்) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு …. யாருக்கு? …
நீரின்றி அமையாது உலகம் …….சிந்திப்போமா?….. நாளை விடியலுக்கு …..
அன்புடன்: அப்துல் ரஹ்மான்… HARMYS. (மின்னஞ்சல் செய்தி).