Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,572 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்!

சாதாரண ஓர் உணவகத் தொழிலாளி … ஆகாயத்தில் பறக்கிறார். அதுவும் தானே வடிவமைத்த கிளைடரில் 600 அடி உயரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபடுகிறார்.

ஆச்சரியமான விஷயம்தானே?

கோவை, சிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாபுவை இங்குள்ளவர்கள் பாபு என்று அழைப்பதில்லை.

கிளைடர் பாபு என்றே அழைக்கிறார்கள். இந்த 38 வயது இளைஞரின் பத்துக்குப் பத்து அறையில் அவர் படுப்பதற்குப் பாய்கூட இல்லை. ஆனாலும், அறை முழுவதும் நிறைந்திருக்கின்றன விமான தொழில் நுட்பம் தொடர்பான புத்தகங்கள், அவரே உருவாக்கிய கிளைடர்கள், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,758 முறை படிக்கப்பட்டுள்ளது!

வகுப்பறைக்கு செல்லும் மருத்துவர்கள்

இந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்றும் அனைவரும், மீண்டும் வகுப்பறைக்குச் சென்று கல்வி பயில வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த விதிமுறையை கட்டாயமாக்கவும் இந்திய மருத்துவக் கழகம் திட்டமிட்டுள்ளது. மருத்துவர்கள், தங்கள் துறையில் ஏற்படும் முன்னேற்றத்தை அவ்வப்போது அறிந்து கொள்வதற்காக மருத்துவக் கல்வியை தொடர்வது (கன்டின்யூவிங் மெடிக்கல் எஜுகேஷன்) என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதன்படி, மருத்துவக் கல்வியை தொடரும் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,873 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரத்துப் போனதா மனிதாபிமானம்?

“மனிதாபிமானம்’ மரத்துப் போனதால், சுட்டெரிக்கும் வெயிலில், ரத்தக் காயத்துடன் நான்கு மணி நேரம் கிடந்தார், மருத்துவமனை ஊழியர் ஒருவர்.

கோவை அரசு மருத்துவமனை வளாகம், பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடந்தார். மிக அருகில் வெளிப்புற நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர் அறை, புறக்காவல் நிலையம் உள்ளன. காயத்துடன் கிடந்தவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

வெயிலில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக கிடந்தவரை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,272 முறை படிக்கப்பட்டுள்ளது!

காட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை!

பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடந்து வரும் நிலையில் A320 ரக ஏர்-பஸ் விமானம் ஒன்றை விமான எரிபொருளுடன் 30% காட்டாமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனையை மெக்சிகோ நடத்திக் காண்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (2-4-2011) இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

டீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ரயில் என்ஜின்களில் இயக்கலாம் என்பதை இந்தியா போன்ற நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக இந்தியாவில் ரயில்பாதை ஓரங்களில் காட்டாமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,950 முறை படிக்கப்பட்டுள்ளது!

மதுவிலக்கே மந்திரமாகட்டும்

மதுவை விலக்குகாலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாதபோது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை. நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது இருக்கலாம். குறிப்பாக பொழுதுபோகுக்கான பழக்கங்கள் ஒரு தலைமுறையை அழிப்பதோடு நான்கைந்து தலைமுறையையும் பாழ்படுத்தாமல் இருப்பதில்லை. பரம்பரையாய் உயிர்க் கொல்லி நோயாய் இருப்பது மதுப்பழக்கம்.

மது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். இன்றைக்குக் ‘கள்’ இறக்குவதைச் சட்டப்படி குற்றமற்றதாக அறிவிக்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,195 முறை படிக்கப்பட்டுள்ளது!

அழியும் நிலையில் மனிதனின் மனிதாபிமானம்

சகோதர, சகோதரிகளே மனிதர்களாகிய நாம் அல்லாஹ் படைத்த படைப்பினங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்பாக இருக்கிறோம் காரணம் தவறு செய்கிறோம், தவறை உணர்கிறோம், செய்த தவறுக்கு இறைவனிடமும் சம்பந்தப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம், மீண்டும் தவறுகள் நேராத வண்ணம் நமக்கு நாமே ஒரு வேலியை போட்டுக் கொள்கிறோம். நாம் சிந்திக்கின்றோம், உணர்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், பேசுகிறோம், ஆடுகிறோம், பாடுகிறோம், ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் சுற்றித்திரிகிறோம். அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அது அணுவாக இருந்த போதும் ஆராய்ச்சி செய்துபார்க்கிறோம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,951 முறை படிக்கப்பட்டுள்ளது!

கௌரவம் – சிறுகதை

“பார்த்தா பிச்சைக்காரி மாதிரித் தெரியுது. ஆனா நீங்க தான் வரச் சொன்னதா அந்தப் பொண்ணு சொல்லுது. பேரு காவேரியாம். வாட்ச்மேன் என்ன செய்யறதுன்னு கேட்கறான்”

வேலைக்காரி சொன்னவுடன் அமிர்தம் எதுவும் புரியாமல் விழித்தாள். “நான் ஏன் பிச்சைக்காரியை வரச் சொல்றேன்..” என்றபடி யோசித்தவளுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.

“நீங்க எழுதினதா ஒரு லெட்டரையும் கையில் வச்சிருக்காளாம்”

லெட்டர் என்றதும் அமிர்தத்தின் மூளையில் ஒரு பொறி தட்டியது. வீடு முழுவதும் ஏ.சி.யாக இருந்தாலும் அமிர்தத்திற்கு திடீரென வியர்த்தது. இதயம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,095 முறை படிக்கப்பட்டுள்ளது!

யதார்த்த மயக்கம்! – கவிதை

படுப்பதுவோ… போர்த்துவதுவோ… கண்ணடைப்பதுவோ அல்ல உறக்கம்,நடந்ததுவும்… நடப்பதுவும்… நடக்க இருப்பதுவும்- என நர்த்தனமாடும் மனச் சலனங்கள் ஓய்வதே… உறக்கம்!

திறந்த கண்களும்… பரந்த பார்வையும்… உரத்த நோக்கும் அல்ல விழிப்பு,

பிறர் வலி உணர்தலும்… உணர்ந்து நீக்கலும்… நீக்கி இருத்தலுமே விழிப்பு!

காண்பதும்… கேட்பதும்… நுகர்தலும்… மூச்சிழுத்து விடுவதும் அல்ல வாழ்க்கை

நினைப்பதும்… செய்வதும்… செய்ததை உலகம் நினைத்திருக்கச் செய்வதுமே வாழ்க்கை!

உயிர் கழிதலும்… உணர்வழிதலும்… மெய் வீழ்தலும்… அல்ல மரணம்,

உயிர்களுக்கு உதவாமல்… இல்லாமலிருத்தல்போல்… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,356 முறை படிக்கப்பட்டுள்ளது!

விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்

“கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது.

“இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,305 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு

நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்

ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,750 முறை படிக்கப்பட்டுள்ளது!

மேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று !

1500 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கில் உலக இருளைப் போக்க ஓர் ஜனநாயக ஒளி முகிழ்த்தது!

ஹீரா குகையில் தனித்து தியானம் செய்துகொண்டிருந்த ஒரு மகத்தான மனிதர் முன் வானவர் ஜிப்ரீல் வந்து வழங்கிய இறைக் கட்டளை ஒரே நேரத்தில் உலகுக்குக் கல்வியும் தந்தது; மனிதவாழ்வின் ஒவ்வோர் அசைவுக்கும் ஓர் அர்த்தத்தையும், அதனை உணர்ந்து செயல்படுத்துவதால் மனிதகுலத்துக்கு விளையும் இம்மை மறுமைப் பேறுகளையும் பிசிறில்லாமல் எடுத்தியம்பியது.

முகம்மது என்ற அந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,593 முறை படிக்கப்பட்டுள்ளது!

நிம்மதி தரும் மார்க்கம்!

இந்த உலகில் வாழும் அனைவர்களும் கஸ்டப்படுவது எல்லாமே நிம்மதிக்காகத் தான். ஒவ்வொருவரும் பணம், பதவி, அந்தஸ்து, பொழுதுபோக்கு, ஆடம்பரம், சொத்து போன்றவைகள் நிம்மதியைத் தரும் என்ற எண்ணத்தில் அலைகின்றனர். இவைகளபை் பெறுவதற்காக மனிதன் வாழ்க்கை முழுதையும் செலவழித்து பொருளையும் பதவியையும் பெற்று விடுகிறான். ஆனால் வாழ வேண்டிய வாழ்க்கையை முறையாக வாழாமல் நிம்மதியற்ற முதுமையை அடைந்து விடுகிறான். அப்படி என்றால் மனிதனைப் படைத்த இறைவன் தான், நிம்மதிக்கான வழியையும் காண்பிக்க வேண்டும்.. எப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்கிய கம்பெனியின் வழிககாட்டலின்படி அந்த இயந்திரத்தை இயக்க வேண்டுமோ அதேபோல் தான் மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டலில் தான் நாம் வாழ வேண்டும். அதன் அடிப்படையில் மனிதன் முறையாக வாழ, வழிகாட்ட வந்தது தான் மார்க்கமும் இறைவேதமும். நிம்மதிக்கு வழியைக் கூறும் சகோதரர் மெளலவி முஹம்மத் அஸ்ஹர் அவர்களின் உரையைக் கேட்டுப் பயன்பெறவும். . . . → தொடர்ந்து படிக்க..