- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

அன்னாசியின் அருமை

[1]அழகான அமைப்புடைய அன்னாசிபழம் தோன்றியது தென் அமெரிக்க நாடான பிரேசில். அங்கிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு பரவியது. கொலம்பஸ் இந்தியாவென்று எண்ணி மேற்கிந்திய தீவுகளுக்கு வந்தவர் இந்த அன்னாசியை ஐரோப்பியாவுக்கு கொண்டு சென்றார். பதினாறாம் நூற்றாண்டில் இந்தப்பழம் உலகெங்கும் பரவியது. 1548 ல் ஐரோப்பிய வியாபாரிகளால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று ஹவாய் தீவுகளில் தான் அன்னாசி, உலகிலேயே அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
உலக உற்பத்தியான 1.75 மில்லியன் டன்களில் 45 சதவிகிதம் ஹவாய் தீவுகளில் பயிரிடப்படுகிறது. ஹவாய் தவிர, கரீபியன் (மேற்கிந்திய) தீவுகள், பிரேசில், க்யுபா, மெக்சிகோ இவைகளில் அதிகமாக பயிரிடப்பட்டாலும், தற்போது உலகெங்கும், இந்தியா உட்பட பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் 25,000 ஹெக்டேர் பரப்பில் அன்னாசி பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 900 எக்டரில் பயிரிடப்பட்டு சராசரி 36,635 டன் உற்பத்தி ஆகிறது.
நீளமான இலைகளுடைய அன்னாசி, அதன் பழத்தின் மேல் உள்ள கொண்டை, பக்கவாட்டில் கிளைக்கும் குருத்தையும் அல்லது அடிக்குருத்தையும் நட்டு வளர்க்கப்படுகிறது. நட்ட ஒரு வருடத்தில் பூக்கள் தோன்றும். பூத்த பின் 4 அல்லது 5 மாதங்களில் பழங்கள் பழுக்கும். தலைமேல் கற்றாழை போன்ற இலைக்கொத்து, வெளியில் முள் போன்ற முடிச்சுகள் உடைய அன்னாசி ஒரு தனிப்பழமல்ல! பல பழங்கள் கொண்ட கலவை அன்னாசிப்பழம் இனிப்பும், புளிப்பும் சேர்ந்த சுவையுடையது. அன்னாசியில் 5 வகைகள் உள்ளன. அன்னாசியில் புரோமெலைன் என்ற என்சைம் உள்ளது. தவிர வைட்டமின் ‘ஏ’ வும் ‘சி’ யும் செறிந்தது.
அன்னாசியின் பொதுப் பயன்கள்

100 கிராம் அன்னாசியில் உள்ள சத்துக்கள்
ஈரப்பசை – 87.8 கி, புரதம் – 0.4 கி, கொழுப்பு – 0.1 கி, நார்ச்சத்து – 0.5 கி, கார்போஹைடிரேட் – 10.8 கி, கால்சியம் – 20 மி.கி, பாஸ்பரஸ் – 9 மி.கி, இரும்பு – 2.4 மி.கி, கரோடீன் – 18 மைக்ரோ கிராம், தியாமின் – 2.0 மி.கி, ரிபோஃபிளேவின் – 0.12 மி.கி, நியாசின் – 0.1 மி.கி, விட்டமின் சி – 39 மி.கி, கோலின் – 8 மி.கி, மெக்னீசியம் – 33 மி.கி, சோடியம் – 34.7 மி.கி, பொட்டாசியம் – 37 மி.கி, செம்பு – 0.13 மி.கி, மங்கனீஸ் – 0.56 மி.கி, துத்தநாகம் – 0.11 மி.கி, சல்ஃபர் – 20 மி.கி.
எச்சரிக்கை
கர்ப்பிணி பெண்கள் அன்னாசி பழத்தை தவிர்க்க வேண்டும். கருச்சிதைவு உண்டாகலாம். மாதவிடாய் நாட்களிலும் பெண்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் அன்னாசியை தவிர்க்க வேண்டும். தவிர மூலநோய் உள்ளவர்களும், காய்ச்சல் உள்ளவர்களும் அன்னாசியை சாப்பிட வேண்டும்.
அன்னாசி சாக்லேட்
தேவை
செய்முறை
அன்னாசி இனிப்பு வதக்கல்
தேவை
செய்முறை

உணவு நலம் ஆகஸ்ட் 2010