Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2011
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,599 முறை படிக்கப்பட்டுள்ளது!

யாருக்குப் பெருநாள்?

  • உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
  • பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
  • காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
  • புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்…!
  • தன் ஆணவத்தை அடக்கி
  • அலட்சியப் போக்கை அழித்து
  • பகலில் பட்டினி கிடந்து
  • இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
  • பசி, தாகத்தால் இச்சையை வென்று
  • இறை கடமைகளை நிறைவேற்றி
  • தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்…!
  • வறியவர்களின் தேவைகளை கவனித்து
  • பட்டினியையும், பசியையும் அடக்கி,
  • நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
  • ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
  • ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
  • இறைவனுக்காக நோன்பிருந்த
  • இறைமறையை ஓதி உணர்ந்த
  • இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்…!
  • ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
  • கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
  • சிறியவர்களை போற்றி – பாராட்டி
  • பெரியவர்களை மதித்து நடந்து
  • அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
  • செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
  • இனி பாவமே செய்யமாட்டேன்
  • என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
  • எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
  • எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
  • எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
  • எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
  • எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
  • என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்…!
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்!

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ