வெங்காயம் – 3,
தக்காளி – 2,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்துப் பொடித்தது – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
உப்பு – தேவைக்கேற்ப.
பக்கோடா செய்ய…
கடலைப் பருப்பு – 100 கிராம்,
இஞ்சி – 1 துண்டு,
காய்ந்தமிளகாய் – 2,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு,
பெரிய வெங்காயம் – 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பட்டை, லவங்கம், சோம்புத் தூள் சேர்த்து வதக்கவும். தண்ணீர் விட்டுக் கொதி வந்ததும் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துச் சேர்த்துக் கொதிக்க விட்டால் குருமா ரெடி.
கடலைப் பருப்பை ஊறவைத்து வடைக்கு அரைப்பது மாதிரி அரைத்து இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து எண்ணெயில் பக்கோடாவாக போட்டு பொரித்தெடுக்கவும். இந்த பக்கோடாவை கொதித்த குருமாவில் போட்டுக் கலந்து இறக்கவும்.
நன்றி: தினகரன்