Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2014
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,469 முறை படிக்கப்பட்டுள்ளது!

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

avoid after foodசிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு. இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா?

சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது. அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே
நல்லது.

சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.

சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.

சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.

சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் முச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.

சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது. அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஸோ… எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள்.

சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.

மேலும் சாப்பிட்டவுடன் உடன் வேகமாக நடந்தால் வயிறு இழுத்துபிடித்த து போல் ஒரு நிலை ஏற்படும். வயிற்று சென்ற அதிக அளவு ரத்ததை அப்போதைய தேவையான நடப்பதற்கு உடனடியாக திருப்பி அனுப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது!

இன்னொரு முக்கியமான விஷயம்… சாப்பிட்ட உடன் உறவு வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, உறவு பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு உறவு வைத்துக்கொள்வதே நல்லது.