Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2014
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,061 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேராசிரியர் செந்தில்குமார் – இளம் விஞ்ஞானி விருது

திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக் பிரிவு தலைவர் செந்தில்குமார், 31, கண்டுபிடித்த ‘பிரிக் ஷன் வெல்டிங் ஆப் டியூப் டூ டியூப் பிளேட்’ என்ற புது தொழில்நுட்பத்திற்கு, மத்திய அரசின் ‘இளம் விஞ்ஞானி விருது’ கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் ‘வெல்டிங்’ பணியில் புதிய ‘மைல் கல்’. விருது தொகையாக 25.76 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

weldingஇரண்டு முறைஅணுமின் நிலையங்கள், விமான தயாரிப்பு ஆலை உட்பட சில இடங்களில் மட்டுமே, உராய்வுகள் மூலம் இரு வேறு உலோகங்களை இணைக்கும் ‘வெல்டிங்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.தற்போது இரண்டு முறைகளில் ‘வெல்டிங்’ பணி மேற்கொள்ளப்படுகிறது. ‘மில்லிங்’ இயந்திரம் மூலம் ஒரே மாதிரியான இரண்டு வடிவங்களை உடைய உலோகங்கள் இணைக்கப்படுகின்றன. இதில், குழாயும் குழாயும் (டியூப்–டியூப்) அல்லது கம்பியும் கம்பியும் (ராடு–ராடு) மட்டுமே இணைக்கப்படுகின்றன. வெவ்வேறு வடிவிலான உலோகங்கள் ‘ஆர்பிட்டல் டிக் வெல்டிங்’ என்ற பழைய முறையில் இணைக்கப்படுகின்றன. இதில் குழாயும் கம்பியும் (டியூப்–ராடு) இணைக்கப்படுகின்றன. இரு வேறு உலோகங்களை இணைக்க முடியாது. உதாரணமாக, இரும்புடன் வேறு உலோகத்தை இணைக்க முடியாது. புது நுட்பம்’மில்லிங்’ இயந்திரத்தில் சில மாற்றங்களை செய்து, வெவ்வேறு உலோகங்களையும், வேறு வடிவிலான உலோகங்களையும் இணைக்கும் நுட்பத்தை செந்தில்குமார் கண்டுபிடித்துள்ளார். இவர், பி.இ., எம்.டெக்., பி.எச்.டி., படித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘ஆர்பிட்டல் டிக் வெல்டிங்’ என்ற பழைய முறையில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது; இதில் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். தீங்கு ஏற்படுத்தாத வகையில் புது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தேன். இதற்காக ‘மில்லிங்’ ெமஷினிலும் சில மாற்றங்களை செய்துள்ளேன். இதற்கு, ‘இன் ஹவுஸ் டெவலப்டு மில்லிங் ெமஷின்’ என பெயர். இதில், இரு வேறு உலோகங்களையும் இணைக்க முடியும். மேலும், ‘ஐ கார்பன் ஸ்டீல்,’ டங்ஸ்டன்’ என புது கருவிகளை உருவாக்கியுள்ளேன். பழைய முறையில் இரும்பு பொருட்களை இணைக்க மூன்றரை மணி நேரம் ஆகும். இதில், குழாயுடன் தட்டை வடிவ உலோகத்தை (டியூப்–பிளேட்) சரியாக இணைக்க முடியாது; அதிர்வு ஏற்படும்போது இணைப்பு பிரிந்து பிளவு ஏற்படும். இந்த பிளவால், அணுமின் நிலையங்கள், விமானம் தொழில்நுட்பத்தில் பெரும் ஆபத்து ஏற்படும். இந்த தொழில்நுட்பத்திற்கு, திறன்மிக்க தொழிலாளர்கள் தேவை. பழைய முறையால், ஆந்திராவில் ‘பாய்லர் பவர் பிளாண்ட்’ தொழிற்சாலையில் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, தொழில்நுட்ப வல்லுனர்கள் இறந்துள்ளனர்.புது தொழில்நுட்பத்தில் 45 வினாடிகள் மட்டுமே தேவைப்படுவதால், காலவிரயம் தவிர்க்கப்படும். இணைப்புகள் பலமாக இருக்கும். இயந்திரத்தில் தேய்மானம் குறைவாக இருக்கும். மின்சார தேவையும் குறையும். இதை சாதாரணமாக அனைவரும் இயக்கலாம்.இவ்வாறு கூறினார்.இவருடன் பேச: 99656 32100.

இளம் விஞ்ஞானி விருது

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ‘இந்திய அறிவியல் தொழில்நுட்ப கழகம்’, இளம் விஞ்ஞானிகளை தேர்வுசெய்து விருது வழங்குகிறது. ‘இளம் விஞ்ஞானி விருது’ பெற 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.செந்தில்குமாருக்கு வழங்கப்பட்ட தொகையில் ‘வெல்டிங்’ குறித்து மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு மாதந்தோறும் தலா 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மூன்றாம் ஆண்டில், 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தினமலர்