Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2015
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,845 முறை படிக்கப்பட்டுள்ளது!

காலிக் ( யுவன்) திருமணத்தில் எழும் சர்ச்சைகள்

 yyy (1)யுவன் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து இன்று வரை அவரை படாதபாடு படுத்தி வருகின்றனர் பலரும். அவரது பதிவுக்கு போய் அநாகரிகமான கமெண்டுகளை இடுவது. மூன்றாம் கல்யாணம் பண்ணுவதற்காக மாறி விட்டாய் என்று குதர்க்க வாதம் பேசுவது என்று இன்று வரை அவரை விடாமல் தொந்தரவு செய்கின்றனர் இந்துத்வவாதியினர்.

‘எதுக்குடா இந்த பொய் வேஷம்?” – saran

“dai odi poiru..unalam role model ah vachathuku ena serupala adichikanum….i hate u….” – aniruth joy

“பூனை குட்டி வெளியே வந்து விட்டது. எதற்காக மதம் மாறினார் என்ற உண்மையும் தான்”- சுரேஷ்

இது போன்று நாள்தோறும் அவதூறுகளை பரப்புபவர்களுக்கு யுவனின் குடும்பத்திலிருந்தே பதில் வந்துள்ளது.

யுவனின் தங்கை பவதாரிணி தனது ட்விட்டர் தளத்தில் என்ன சொல்கிறார்?

‘ஆம் என் அண்ணன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். எங்களது குடும்பம் அவரது முடிவை பரிபூரணமாக ஆதரிக்கிறது. எங்கள் தந்தையும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டு விட்டார். சிறு வயதிலிருந்தே மது, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வளர்ந்தவர் என் அண்ணன். தனது கடின உழைப்பால் 100 படங்களுக்கு மேல் இசை அமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர் என் அண்ணன். இப்படிப் பட்ட நல்லொழுக்கம் உள்ள ஒருவரை பலரும் வார்த்தைகளால் காயப்படுத்துகின்றனர். அவரின் குடும்பத்தவரான எங்களுக்கு இது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. எந்த முடிவை எடுத்தாலும் ஒரு சிறந்த மனிதனாக வாழுவதில்தான் உள்ளது. எனது அண்ணன் அதில் கண்டிப்பாக வெற்றி பெற்று பலருக்கு பாடம் புகட்டுவார்’ என்று பொரிந்து தள்ளியுள்ளார்.

“Yes.. My brother yuvan converted to islam nd myself , Karthik Raja and dad have started accepting his decision.. All that matters in our family is his happiness.. And yes.. He willl get married for the third time cos his first and second marriage dint work out cos of personal reasons.. He dint have kids or he dint cheat anybody.. He dosent drink or smoke.. From the age of 15 he has been doing music and he dint follow my dad’s way of music.. He created his own style and he is doing music now for more than 100 movies and still he is being successful for his hard work.. It’s hard to see even his own family people teasing and criticising him.. He has proved, he will prove and he willl keep proving… All that matters is wether u r a good human being??? Nd yuvan is..” in twitter. bhavadharini sister of yuvan shankar raja

யுவனின் மூன்றாம் திருமணத்துக்குப் பிறகு அவரின் தங்கை பவதாரிணி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்….

.”Yuvan wanted to get married to a girl from a Muslim family. He had asked his friends to find a suitable match for him. His friends in Malaysia looked for a suitable alliance and arranged this wedding. Yuvan’s happiness has always been the family’s first priority. He looked happy at his wedding, and that’s all we want,” says Bhavatharini.

‘யுவன் இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடிக்க ஆசைப்பட்டார். அவரது நண்பர்களிடம் தனக்கு தோதான ஒரு முஸ்லிம் குடும்பத்தை தேர்ந்தெடுக்க சொல்லிக் கேட்டுக் கொண்டார். இவரது நண்பர்கள் மலேசியாவில் பொருத்தமான இஸ்லாமிய பெண்ணை தேர்ந்தெடுத்து யுவனிடம் ஆலோசனையைக் கேட்டனர். அந்த பெண்ணை யுவனுக்கும் பிடித்துப் போகவே இன்று திருமணம் இனிதே நிறைவேறியுள்ளது. எப்போதுமே யுவனின் சந்தோஷத்துக்கு நாங்கள் குறுக்கே நின்றதில்லை. இந்த திருமணத்தால் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அதுதான் நமக்கு வேண்டியது’ என்று மிக அழகிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் இது காதல் திருமணம் அல்ல. இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு அவரது நண்பர்கள் மூலமாக கிடைத்த சம்பந்தம் என்பது தெளிவாகிறது. ஆனால் இணையத்திலும், பத்திரிக்கைகளிலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் இஸ்லாத்தை ஏற்றார் என்று நெஞ்சறிந்து பொய் சொல்கிறார்கள்.

இந்துத்வாவாதியினர் யுவனின் மேல் கோபப்படுவதில் அர்த்தம் உள்ளது. பார்பனர்களான தங்களுக்கு அடிமை சேவகம் புரிந்த ஒருவன் விடுதலையாகி இஸ்லாத்தில் ஐக்கியமாகி விட்டானே? இனி நமது மதிப்பு என்னாவது? என்று அவரது மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களைப் பொருத்த வரை அது அவர்களுக்கு நியாயமாகவும் படலாம்.

ஆனால் விபரம் புரியாமல் பல பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களும் இவரது மன மாற்றத்தைக் கண்டு கோபமடைவதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு பல சிரமங்கள் இருக்கலாம். பல தேவைகள் இருக்கலாம். இஸ்லாத்தை ஏற்றால் பல பாதிப்புகள் உங்களுக்கு வரலாம். எனவே உண்மையை விளங்கியும் மனதுக்குள் புளுங்கிக் கொண்டு இந்து மதத்திலேயே காலம் கடத்தும் பல இந்து நண்பர்களை நான் அறிவேன்.

நீங்கள் அனைவரும் யுவனை விமரிசிப்பதற்கு முன் அதற்கான காரணம் என்ன என்று தேடி அதைக் களைய முயற்சி செய்யுங்கள். சொந்த பந்தங்களை எல்லாம் விட்டு இப்படி தனி ஆளாக திருமணம் முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவரைத் தள்ளியது அவர் பிறந்த மதத்தில் உள்ள வர்ணாசிரம கோட்பாடுகள் அல்லவா? அதை அல்லவா முதலில் களைய நீங்கள் முயற்சித்திருக்க வேண்டும்?

இந்து மத ஆன்மீகத்தில் கரை கண்ட இவரது தந்தை இளையராஜா திருவையாறு தியாகராஜ சன்னதியில் பாட அனுமதிக்கப்படுவாரா? அதற்கு ஆகம விதிகள்தான் ஒத்துக் கொள்ளுமா? இப்படி நிறைய இருக்கிறது.

இசைக்கு இஸ்லாத்தில் இந்து மதத்தைப் போன்ற மரியாதை இல்லை: பெரும்பான்மை இந்து சமூகத்தில் மதம் மாறினால் தனது இசைத் தொழிலுக்கு பாதிப்பு: தந்தையின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும்: பலரும் பெண்ணுக்காக மாறியதாக கதை கட்டுவர்: என்று பல பின்னடைவுகள் இருந்தும் இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த வழி என்று தடைகளை உடைத்து வெளி வந்திருக்கும் யுவனை பாராட்டா விட்டாலும் தயவு செய்து தூற்றாமல் இருங்கள்! ஒரு மனிதனின் மனதை கீறி காயப்படுத்திப் பார்க்கும் மனோ நிலையானது மனிதத் தன்மையற்றது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

“இன்னும் இத்தகையோர் இத்தூதர் மீது இறக்கப்பட்ட குர்ஆனை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். ‘எங்கள் இறைவனே! நாங்கள் இவ் வேதத்தின் மீது நம்பிக்கை கொண்டோம் எனவே, இவ்வேதம் சத்தியமானது என்று, சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 5:83)

‘ஆம் இந்த குர்ஆனை படித்தவுடன் எனது கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. இரவு முழுவதும் அழுது கொண்டே தூங்கிப் போனேன். காலையில் எழுந்தவுடன் எனது உள்ளம் தூய்மையானது. இஸ்லாத்தை உடன் ஏற்றுக் கொண்டேன்’

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.

யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:

“எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.

எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது, அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார் ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான் உயிரோடு இருந்தார்.

எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். “நீ தற்போது மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்” எனக் கூறி ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்) எனக்குத் தந்தார். “இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது இதில் உட்கார்ந்து பார்” என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.

சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில் நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.

முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். ’எனது பாவங்களை மன்னியுங்கள் அல்லா’ என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில் ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன். ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.

படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். “நான் குரானை படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது” என்றேன். அவர், “யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை” என்றார். ஆனால் எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.

இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக் கொண்டு, “யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என அவர் சொல்வதாக எனக்குப் பல முறை தோன்றியுள்ளது.” என்று கூறியுள்ளார்.