தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். `இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்’ என மோரின் மேன்மையை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். கிராமத்து வயல்வெளிகளில் கூலிவேலைக்குச் செல்பவர்கள், பழைய சாதத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மோர் மிளகாய் வகையறாக்களுடன் மதிய சாப்பாடு எடுத்துச் செல்வார்கள். உழைத்துக்களைத்து உச்சி வெயிலில், வயல்வரப்புகளில் அமர்ந்தபடி இந்த உணவை ரசித்து ருசித்து உண்பார்கள்.
மோர்
எந்தவொரு கல்யாணப் பந்தியும் மோர் இல்லாமல் முடிவதில்லை. சாம்பார், காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு, ரசம், மோர் . . . → தொடர்ந்து படிக்க..