- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சூப்பர் சோனிக் விமானம் – யுனைடெட் ஏர்லைன்ஸ்

சூப்பர்சோனிக் வணிக ரீதியிலான பயனம் மேற்கொள்பவர்கள் சூப்பர் சோனிக் விமானத்தில் பயணிக்க அதிக டாலர் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யுனைடெட் ஏர்லைன்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் அமெரிக்காவை சேர்ந்த பூம் டெக்னாலஜி இன்க் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.

15 சூப்பர் சோனிக் ஜெட்

15 சூப்பர் சோனிக் ஜெட் 2029 ஆம் ஆண்டு பயணிகளை ஏற்றிச் செல்ல சூப்பர் சோனிக் விமானம் தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த பூம் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை வாங்க யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. சுமார் 15 சூப்பர் சோனிக் ஜெட் விமானங்களை விமான நிறுவனம் வாங்கும் என நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

சூப்பர்சோனிக் விமானம்

சூப்பர்சோனிக் விமானம் சூப்பர்சோனிக் விமானத்தின் மதிப்பு குறித்து பார்க்கையில், ஒரு சூப்பர் சோனிக் விமானம் மதிப்பு சுமார் 200 மில்லியன் டாலராக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அடிப்படையில் இதன் விலை சுமார் 3 பில்லியன் டாலராக மதிப்புடையதாகும். இதில் பூம் நிறுவனம் தள்ளுபடி வழங்காது என விமான மேம்பாட்டு நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ப்ளேக் ஷால் கூறினார். யுனைடெட் நிறுவனம் மேலும் 35 விமானங்களுக்கான கொள்முதல் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

88 பேரை அமர வைக்க முடியும்

88 பேரை அமர வைக்க முடியும் ஓவர்ச்சரின் அறிமுக ஆபரேட்டராக யுனைடெட் திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதில் 88 பேரை அமர வைக்க முடியும். யுனைடெட் நிறுவனத்திற்கு இது தனித்துவ பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் வணிக ரீதியிலான பயனம் மேற்கொள்பவர்கள் சூப்பர் சோனிக் விமானத்தில் பயணிக்க அதிக டாலர் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் சோனிக் விமானம் தடை

சூப்பர் சோனிக் விமானம் தடை யுஎஸ் நிலத்தில் சூப்பர் சோனிக் விமானம் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் யுனைடெட் நிறுவனம் நியூஜெர்சியில் இருந்து லண்டனுக்கு மூன்றரை மணிநேர பயணங்களையும், சான் பிரான்சிஸ்கோவில் இருந்து டோக்கியோவிற்கு ஆறு மணி நேர பயணங்களையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை கோபுர தாக்குதல் இரட்டை கோபுர தாக்குதல்

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் 2003 ஆம் ஆண்டு கான்கார்டு சூப்பர் சோனிக் விமானம் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. யுனைடெட் நிறுவனத்தின் சூப்பர்சோனிக் விமானம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பயண நேரம் பாதியாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விமான சேவை அறிவிப்பின் முதற்கட்டமாக பிசினஸ் கிளாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு பயணம்

நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு பயணம் மேலும் தொடக்க சேவையாக நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு பயணம் என்பதை உறுதியாகக் கொண்டிருப்பதாகவும் அதையும் மீறி சூழ்நிலைகளே பயணத்தை தீர்மானிக்கும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. பூம் நிறுவனம் இதுவரை 250 மில்லியனுக்கும் அதிகமான தொகையை திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓவர்டூரின் முதல் விமானத்தை நிஜமாக்குவதற்கான மேம்பாட்டு செலவுகள் 8 பில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ஒலியை விட வேகமாக பயணம்

ஒலியை விட வேகமாக பயணம் சூப்பர்சோனிக் விமானம் குறித்து பார்க்கையில், இது ஒலியை விட வேகமாக பயணிக்கும் என கூறப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு சூப்பர் சாப்ரே எனும் சூப்பர் சோனிக் போர் விமானம் வடிவமைக்கப்பட்டது. சோவியட் யூனியன் தான் முதன்முதலமாக சூப்பர் சோனிக் விமானத்தை தயாரித்து பயன்பாட்டிற்கு வந்தது. சூப்பர் சோனிக் விமானம் தயாரிக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் நிறுவனம் விமானம் கொள்முதல் செய்யத் தொடங்கியது. சூப்பர் சோனிக் விமானம் பயன்பாட்டுக்கு வந்தால் பயண நேரம் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிக ரீதியிலான பயணம் மேற்கொள்ளும் பயணர்கள் இதை அதிகம் பயன்படுத்துவார்கள் என கூறப்படுகிறது.

நன்றி: gizbot/tamil