அடிப்படையில் நாம் அறிய வேண்டியது ஒரு அமல் அல்லாஹ்விடம் ஏற்கப்பட வேண்டுமென்றால் இரண்டு நிபந்தனைகள்
- அது நபி ஸல் அவர்களால் வழிகாட்டப்பட்டு இருக்க வேண்டும்.
- அல்லாஹ்விற்காக என்ற இக்லாஸ் (உள்ளத்தூய்மை) வேண்டும்.
மார்க்கத்தின் சில அடிப்படைகள்:
- இந்த மார்க்கம் அல்லாஹ்விற்கு உரியது. அதன் வரைமுறைகளை அவன் மட்டுமே தருவான் நபிகளார் மூலமாக.
- நபிகளாரை விட மிகச் சிறந்த மனிதர் இந்த உலகில் இல்லை.
- அவர்கள் உம்மத்தார்கள் மீது காட்டிய அன்பை விட வேறு யாரும் காட்ட முடியாது.
- தன் சமுதாயத்தில் அதிகமானவர்கள் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்று அதிகமாக ஏக்கம் உள்ளவர்கள் அதற்காக பாடுபட்டவர்களில் நபிகளாரை விட சிறந்தவர் யாருமில்லை.
- அவர்கள் தானாக எதையும் செய்யவோ சொல்லவோ மாட்டார்கள் அல்லாஹ் வழிகாட்டுதல் இன்றி.
- நாம் நமது உயிரை விட அண்ணலாரின் மீது அன்பு செலுத்தாத வரை பூர்த்தியான ஈமான் கொள்ள முடியாது.
அவர்களின் வழிகாட்டல்களை செய்வதன் மூலம் நபிகளார் மீது அன்பு கொள்ள வேண்டும். உலக ஆதாயத்திற்காக நபிகளாரின் வழிகாட்டல்களுக்கு எதிராக மாற்றமாக செய்வது அவர்களுக்கு துரோகம் என்பதை உணர வேண்டும்.
உதாரணமாக நம்ம ஊருல 11 மணிக்கு ஆட்கள் சும்மா இருக்காங்க … எனவே புதிதாக ஒரு பஜ்ழுஹர் என்று தொழுகையை ஒரு ஆலிமஷா ஏற்படுத்தி அதை நடைமுறைப்படுத்தினால். யாராவது தொழுகை தானே.. சூரா பாத்திஹா மற்றும் குர்ஆன் ஆயத்துகள் ஓதுவது தவறில்லையே. ஆலிமஷா ஓதிப்படித்தவராயிற்றே. பெரிய தாடி வைத்துள்ள சூபியாயிற்றே. என்று நாம் அவரைப் பின் தொடர்ந்தால் ஏற்படும் வபரீதங்கள் என்ன?
- இந்த ஆலிம்ஷா அளவுக்கு, நபிகள் ஸல் அவர்கள் நம்மீது அக்கரை கொள்ளவில்லை
- வழிகாட்ட நபிகளாருக்குத் தெரியவில்லை அல்லது
- இந்த ஆலிம்ஷாவுக்கு தெரிந்தது நபிகளாருக்கும் ஸஹாபாக்களுக்கும் தெரியாமல் போய்விட்டதே! அல்லது
- நபிகளார் இந்த மாதிரி நல்ல விசயங்களைக் கூறுவதில் பொறாமையும் கஞ்சத்தனமும் கொண்டு இருந்தார்கள்.
எனவே மார்க்கத்திற்காக அனுப்பப்பட்ட நபி ஸல் அவர்கள் கூறாதவைகள் மார்க்கமாக ஆக முடியாது. அவர்கள் வழி தவிர மற்றவை நமக்கு நன்மை தராது என்பதை நாம் உணர வேண்டும்.
அதை விட்டு விட்டு குர்ஆன் ஓதுவது தப்பா? அந்த நேரத்தில் வேறு பாவங்கள் செய்வதை இது தடுக்கின்றது அல்லவா? அப்ப இது நல்லது தானே என்று கூறினால் …
மார்க்கத்தை அவரவர் அறிவுக்கு ஏற்ப மாற்றுவார்கள். முந்தைய சமுதாயம் வேதங்களையும் வழிமுறைகளையும தன் புத்திக்கு ஏற்ப மாற்றி அவர்கள் அல்லாஹ் கோபத்திற்கு ஆளானார்கள.
எனவே நபிகளார் நமக்கு எத்தணையோ நல்ல அமல்களை காட்டியுள்ள போது ஏன் சந்தேகமானவற்றை நாம் செய்ய வேண்டும்.
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 53:3-4)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவுவைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப் போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 59:7)
- அல்குர்ஆன் நீங்களாக தஜ்வீதுடன் ஓதுவதை யாரும் தடுக்கவில்லை.
- உலமாக்கள் மூலம் அதன் தர்ஜீமா, தப்சீர் ஓதும் முறையை கற்கலாம்.
- ஒரு சபையாக அமர்ந்து ஒரு ஆலிம் தலைமையில் ஓதுதலை சரிபடுத்தலாம்.
- மணப்பாடம் செய்ய சிலர்கள் அமர்ந்து ஓதலாம்.
- காலை மாலை ஓதக்கூடிய திக்ருகளை அர்த்தம் புரிந்து நிதானமாக ஓதலாம்.
- அல்லாஹ்விடம் உயிரோட்டத்துடன் துவா செய்யலாம் அவரவர் தேவைக்கு ஏற்ப – அழுது அழுது கேட்கலாம். உலக முஸ்லிம்களுக்காக ஊர் முஸ்லிம்களுக்காக பெற்றோர்களளுக்காக உதவி புரிந்தவர்களுக்காக என்று மனதில் நிறுத்தி துவா செய்யலாம். துவா என்பது உயிரோட்டமானதாக நாம் அல்லாஹ்விடம் அமைதியாக எதிர்பார்ப்புடன் செய்ய வேண்டும். அது ஒரு சிறந்த அமல்.
நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:
“யாரேனும் ஒருவர் எம்முடைய விஷயமொன்றில் புதுமையைச் சேர்க்கின்றாரோ, அது அந்த விஷயம் சார்ந்தது அல்ல, அது நிராகரிக்கப்பட வேண்டும்.” (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் தமது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை குத்பா உரைகளிலும், “மிகச் சிறந்த பேச்சு அல்லாஹ்வின் வேதத்தை(குர்ஆனை) உடையதே, மிக்க சிறந்த வழிகாட்டல் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் உடையதே, மிகவும் மோசமானவை நூதனக் கிரியைகள், நூதனக்கிரியைகள் யாவும் வழிகேட்டின்பால் இட்டுச் செல்பவைகளே” என்று மொழிவார்கள்.