தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாளி ஒழுகுகிறது!

வாளி ஒழுகுகிறது; எச்சரிக்கையாக இருங்கள்!

நீங்கள் அபாயா மற்றும் ஹிஜாப் அணிகிறீர்கள், ஆனால் அந்நியர்களை கவரும் விதத்தில் வாசனைகள் பூசி ஒப்பனையுடன் (மேக்கப்) இருக்கிறீர்கள்.

நீங்கள் மார்க்கத்தைப் பேணி தாடி வைத்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதில்லை.

நீங்கள் எல்லாத் தொழுகைகளையும் சரியான நேரத்தில் தொழுகிறீர்கள், ஆனால் உங்களிடம் அந்தத் தொழுகையில் ஒருமுகத்தன்மை (குஷூஃ) இல்லை. பிறர் பாராட்ட உங்கள் தொழுகையை பயன்படுத்துகிறீர்கள்.

நீங்கள் மக்களிடம் மிகவும் கனிவாகவும் மென்மையாகவும் பேசுகிறீர்கள், ஆனால் உங்கள் குடும்பத்தினரிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்கிறீர்கள்.

நீங்கள் விருந்தினர்களைக் கண்ணியப்படுத்தி நன்றாக உபசரிக்கிறீர்கள், ஆனால் அவர்கள் சென்ற பிறகு, அவர்களைப் பற்றிப் புறம் பேசுகிறீர்கள், அவர்களின் குறைகளைப் பற்றிப் பேசுகிறீர்கள்.

நீங்கள் ஏழைகளுக்கு அதிக தர்மம் (ஸதகா) செய்கிறீர்கள், ஆனால் அவர்களை இழிவுபடுத்துகிறீர்கள், காயப்படுத்துகிறீர்கள்.

நீங்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகிறீர்கள், நோன்பு நோற்கிறீர்கள், ஒவ்வொரு நாளும் அல்குர்ஆன் ஓதுகிறீர்கள், ஆனால் உங்கள் உறவுகளைத் துண்டித்து வாழ்கிறீர்கள்.

நீங்கள் நோன்பு நோற்கிறீர்கள், பசி மற்றும் தாகத்தின் வேதனையைப் பொறுத்துக் கொள்கிறீர்கள், ஆனால் நீங்கள் திட்டுகிறீர்கள், அவமதிக்கிறீர்கள், சபிக்கிறீர்கள்.

நீங்கள் மற்றவர்களுக்கு உதவுகிறீர்கள், ஆனால் அதை அவர்களிடம் இருந்து எதையாவது பெறுவதற்காகச் செய்கிறீர்களே தவிர, அல்லாஹ்வின் திருப்திக்காகச் செய்யவில்லை.

நீங்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நற்செய்திகளைப் பதிவிடுகிறீர்கள், ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்கள் (Followers) உங்களுக்கு இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் அதை புகழுக்காகச் செய்கிறீர்களே தவிர, அல்லாஹ்வை மகிழ்விப்பதற்காக அல்ல.

மொத்தத்தில் உங்கள் நற்செயல்கள் அனைத்தையும் ஓர் ஒழுகும் வாளியில் சேகரிக்கிறீர்கள். நீங்கள் அதை நிரப்ப மிகவும் சிரமப்படுகிறீர்கள், ஆனால்…
“அது ஓட்டைகளின் வழியாக வெளியேறி விடுகிறது.”
எச்சரிக்கையுடன் இருங்கள்!

#ஜேஎஸ்ரிஃபாயீ