Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2013
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,716 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருந்துக்கு பதில் கீரை

keeraiyo_keerai1காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர்தான் மாற்ற வேண்டும்.

சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.
கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

சில வகை ளின் மருத்துவ குணங்கள்

முருங்கைக்கீரை- இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். சிறு நீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.

புளிச்ச கீரை: உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.

சிறுகீரை– உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிகலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.

வெந்தயக்கீரை– முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சயமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.

அரைக்கீரை: நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தை பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.

அகத்திக் கீரை-வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.

பசலைக்கீரை-பருப்புக்கீரை

குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக்கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.

மணத்தக்காளி கீரை- அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டாஇ நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.

பாலக்கீரை– உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு நல்லது.

குமட்டிக் கீரை– இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப் படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.

தொய்யல் கீரை– தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.