Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,101 முறை படிக்கப்பட்டுள்ளது!

யதார்த்த மயக்கம்! – கவிதை

படுப்பதுவோ… போர்த்துவதுவோ… கண்ணடைப்பதுவோ அல்ல உறக்கம்,நடந்ததுவும்… நடப்பதுவும்… நடக்க இருப்பதுவும்- என நர்த்தனமாடும் மனச் சலனங்கள் ஓய்வதே… உறக்கம்!

திறந்த கண்களும்… பரந்த பார்வையும்… உரத்த நோக்கும் அல்ல விழிப்பு,

பிறர் வலி உணர்தலும்… உணர்ந்து நீக்கலும்… நீக்கி இருத்தலுமே விழிப்பு!

காண்பதும்… கேட்பதும்… நுகர்தலும்… மூச்சிழுத்து விடுவதும் அல்ல வாழ்க்கை

நினைப்பதும்… செய்வதும்… செய்ததை உலகம் நினைத்திருக்கச் செய்வதுமே வாழ்க்கை!

உயிர் கழிதலும்… உணர்வழிதலும்… மெய் வீழ்தலும்… அல்ல மரணம்,

உயிர்களுக்கு உதவாமல்… இல்லாமலிருத்தல்போல்… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,366 முறை படிக்கப்பட்டுள்ளது!

விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்

“கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது.

“இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,310 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு

நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்

ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,754 முறை படிக்கப்பட்டுள்ளது!

மேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று !

1500 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கில் உலக இருளைப் போக்க ஓர் ஜனநாயக ஒளி முகிழ்த்தது!

ஹீரா குகையில் தனித்து தியானம் செய்துகொண்டிருந்த ஒரு மகத்தான மனிதர் முன் வானவர் ஜிப்ரீல் வந்து வழங்கிய இறைக் கட்டளை ஒரே நேரத்தில் உலகுக்குக் கல்வியும் தந்தது; மனிதவாழ்வின் ஒவ்வோர் அசைவுக்கும் ஓர் அர்த்தத்தையும், அதனை உணர்ந்து செயல்படுத்துவதால் மனிதகுலத்துக்கு விளையும் இம்மை மறுமைப் பேறுகளையும் பிசிறில்லாமல் எடுத்தியம்பியது.

முகம்மது என்ற அந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,602 முறை படிக்கப்பட்டுள்ளது!

நிம்மதி தரும் மார்க்கம்!

இந்த உலகில் வாழும் அனைவர்களும் கஸ்டப்படுவது எல்லாமே நிம்மதிக்காகத் தான். ஒவ்வொருவரும் பணம், பதவி, அந்தஸ்து, பொழுதுபோக்கு, ஆடம்பரம், சொத்து போன்றவைகள் நிம்மதியைத் தரும் என்ற எண்ணத்தில் அலைகின்றனர். இவைகளபை் பெறுவதற்காக மனிதன் வாழ்க்கை முழுதையும் செலவழித்து பொருளையும் பதவியையும் பெற்று விடுகிறான். ஆனால் வாழ வேண்டிய வாழ்க்கையை முறையாக வாழாமல் நிம்மதியற்ற முதுமையை அடைந்து விடுகிறான். அப்படி என்றால் மனிதனைப் படைத்த இறைவன் தான், நிம்மதிக்கான வழியையும் காண்பிக்க வேண்டும்.. எப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்கிய கம்பெனியின் வழிககாட்டலின்படி அந்த இயந்திரத்தை இயக்க வேண்டுமோ அதேபோல் தான் மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டலில் தான் நாம் வாழ வேண்டும். அதன் அடிப்படையில் மனிதன் முறையாக வாழ, வழிகாட்ட வந்தது தான் மார்க்கமும் இறைவேதமும். நிம்மதிக்கு வழியைக் கூறும் சகோதரர் மெளலவி முஹம்மத் அஸ்ஹர் அவர்களின் உரையைக் கேட்டுப் பயன்பெறவும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,420 முறை படிக்கப்பட்டுள்ளது!

கால எந்திரம் என்னும் அதிசயம்

எந்திரம் ஒன்றின் மூலம், நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் செல்லமுடியுமா என்ற அற்புதமான கற்பனை மூலம் உருவானதுதான் இந்த “கால எந்திரம்” (Time Machine) என்னும் ஆராய்ச்சி. இந்த எந்திரம் உருவாக்கப்படுவது சாத்தியமா, இல்லையா என்கிற விவாதம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. சில விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளில் இன்னும் ஈடுபட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஒருவர் ஒளியின் திசைவேகத்தில் (அதாவது, ஒரு நொடிக்கு 1,86,000 கிலோமீட்டர்கள்) பயணம் செய்ய முடிந்தால் அவரால் இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,613 முறை படிக்கப்பட்டுள்ளது!

பகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக

நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில:

வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும். எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள். சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள். திட்டமிடுதலின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,073 முறை படிக்கப்பட்டுள்ளது!

அடையாள அட்டை!

பெயர்: வட்டி புனைப்பெயர்: இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிரைக்கொள்ளும் உயிர்க்கொல்லி உடன்பிறந்தோர்: ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டிகள், கந்துவட்டி,மீட்டர்வட்டி, இன்சூரன்ஸ்,லோன், பைனான்ஸ் நண்பர்கள்: பணக்காரர்கள்,சேட்டுகள், வட்டிக்காகக் கடன் கொடுப்போர், லாவாதேவிக்காரர்கள் எதிரி: தர்மம்,ஸகாத் தொழில்: பொருட்களைச்சுரண்டுதல் உபதொழில்: உயிரைப்பரித்தல்,நஷ்டஈடாக கற்பை சூறையாடுதல் சுற்றுலாத்தலம்: பேங்க், நகைக்கடை,அடகுக்கடை அலர்ஜி: வட்டியில்லாக்கடன் விரும்புவது: உயிர்,சொத்து விரும்பாதது: தனக்கெதிரான பிரச்சாரம் எதிர்காலத்திட்டம்: கோடிக்கணக்கான பணம்சேர்ப்பது, பொருள்சேர்ப்பது சாதனை: உலக வங்கியில் கடன் வாங்கியதில் இந்தியாவிற்கு முதலாவது இடம் பரிசு: . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,278 முறை படிக்கப்பட்டுள்ளது!

நொறுங்கும் எலும்புகள் (ஆஸ்டியோபோரோசிஸ்)

நவம்பர் 20ம் தேதி ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ நாள், அதாவது, எலும்புகள் நொறுங்கும் நோயை தடுக்க விழிப்புணர்வூட்டும் நாள்.

ஆஸ்டியோபோரோசிஸ் பற்றி சில புள்ளிவிவரங்கள் நம்மை அதிர வைக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது கால்சியம் சத்தில்லாமல், எலும்புகள் தேய்ந்து, நொறுங்கி, எலும்பு முறிவு ஏற்படுத்துவது என்பதே.

35 வயதுக்கும் மேல் குறிப்பாக பெண்களுக்கு எலும்பு தேய ஆரம்பிக்கும். 50 வயதை தாண்டினால், இத்தைகைய நோய் தலைதூக்க ஆரம்பிக்கும். ஆனால் எல்லாருக்கும் வராது. மிக மோசமான நிலையில் தான் வரும். ஒரு நாளைக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,113 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாம் அறிமுகம்

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 11

மன்னனை இழந்த சோகம் இன்னும் மக்களை விட்டுப் போகவில்லை. நடைப்பிணம் போல் களையிழந்து கிடந்த இயல்பு வாழ்கை மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியது.

விஜயனின் மனைவி மக்கள் தலை நகருக்குச் சென்று விட்டார்கள். கோட்டை பராமரிப்பின்றி வெறிச்சோடிக் கிடந்தது.

அதன் அருகே யாரும் போகவில்லை. போனால் பழைய நினைவு வரும் என்பதால்.

கால கட்டத்தில் பழைய சம்பவங்களும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,814 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க!

வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு, போய் ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று எழுந்து செல்பவரா நீங்கள்? சற்றுப் பொறுங்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை படியுங்கள். சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ, நீங்கள் உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ என்பது புரியும்.

முதலில் சில புள்ளிவிவரங்கள்.

உலகம் முழுவதும் தற்போது 110 கோடி பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. 2025வாக்கில் இந்த எண்ணிக்கை 160 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகில் 1 . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,155 முறை படிக்கப்பட்டுள்ளது!

கலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது?

எந்த விழாக்களானாலும் பார்ட்டியானாலும் சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர் பானங்கள் இடம் பெறாமல் இருப்பதில்லை. இந்த வண்ன திரவங்களால் உடலுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக அவற்றுள் அடங்கியுள்ள நச்சுப் பொருட்கள் உடலுக்கு கேடு செய்கின்றன என்ற விழிப்புணர்வாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

பற்கள் பாதிப்பு அடைகின்றன: பொதுவாக எல்லா குளிர் பானங்களும் அமிலச்சுவையுடன் இருக்கின்றன.இதில் கலந்துள்ள அமிலங்கள் பற்களின் எனாமலைப் பதம் பார்த்து கரைத்து விடுகின்றன.மேலும் அதிலுள்ள சர்க்கரை சத்து . . . → தொடர்ந்து படிக்க..