Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,874 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரயில் மோதி கர்ப்பிணி பெண் சாவு ஆனால்..

ரயில் மோதி கர்ப்பிணி பெண் சாவு! ஆனால் வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன்

அதிகாலையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி, ரயில் மோதி உடல் சிதறி இறந்தார். ஆனால், வயிறு கிழிந்து தண்டவாளத்தில் தொப்புள் கொடியுடன் விழுந்த ஆண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. தர்மபுரி மாவட்டம், மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலன்.

இவரது மனைவி குப்பம்மாள்(32); இருவரும் கட்டடத் தொழிலாளிகள். சில ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி கோவை வந்தவர்கள் சங்கனூர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,425 முறை படிக்கப்பட்டுள்ளது!

எல்லாம் தகரும் தருணங்களில்….!

விதி வலியது. அது சில சமயங்களில் நம் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு விடும். அந்த சமயங்களில், இருந்தது எல்லாம் தகர்ந்து போய் ஒரு பூஜ்ஜியமாய், எதிர்கால வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாய் போய் விடுவதுண்டு. இனி ஒன்றுமில்லை, வாழ ஒரு வழியுமில்லை என்கிற நிலைக்கு வந்து நமக்கு நேர்ந்ததை ஜீரணிக்கவும் முடியாமல் நம்மை திகைக்க வைத்து விடுவதும் உண்டு. அது போன்ற ஒரு நிலை பிரபல ஆங்கில எழுத்தாளர் ஒருவரின் நல்ல கதை ஒன்றில் முக்கியப் பாத்திரத்திற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,069 முறை படிக்கப்பட்டுள்ளது!

‘ஆமாம் சாமி’ சபையா?

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கு இடையே யுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவது அல்ல. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகத் தீர்த்துவைத்து அதன் மூலம் போர் மூளாமல் தடுப்பதும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காப்பதும்தான்.

கடந்த இருபது ஆண்டுகளாக, ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,202 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹேக்கிங் என்றால் என்ன?

இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.

ஹேக்கிங் என்றால் என்ன?

உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,762 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹஜ் புனிதப் பயணம் (2011) விண்ணப்பங்கள்

ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,431 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜப்பான் கற்றுத் தரும் பாடம்!

மகத்தான தொழில்நுட்ப வல்லமையால் உலகின் பணக்கார நாடு என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது ஜப்பான். அந்த தேசத்துக்கு, ‘செயற்கையான தொழில்நுட்பங்களைவிட நான் வலிமைமிக்க சக்தி’ என்று உணர்த்தியிருக்கிறது இயற்கை. அடுத்தடுத்துத் தொடரும் வலிமையான நிலநடுக்கங்கள், சுழற்றியடித்த சுனாமி, இவற்றின் விளைவுகளால் சீறத் தொடங்கியிருக்கும் எரிமலை என இயற்கை தன் இருப்பை முகம் காட்டி ஞாபகப்படுத்தி இருக்கிறது. சுனாமி எச்சரிக்கைத் தொழில்நுட்பம் ஓரளவுக்கு இருப்பதாலும், நிலநடுக்கங்களைத் தாங்கக்கூடிய கட்டிட அமைப்பாலும், நிலநடுக்கங்களின்போது தற்காத்துக்கொள்வது எப்படி என்பதை அறிந்து வைத்திருந்ததாலும் உயிரிழப்புகளை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,062 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிக்கன் 65? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்…..!

ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,756 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய ரூபாய்க் குறியீடு வடிவமைப்பாளர் திரு. த. உதயகுமார்

உலகளவில் வளர்ந்த நாடுகளுக்குப் போட்டியாக உருவெடுத்து வரும் நம் இந்திய ரூபாய்க்கு தனிக்குறியீடு அவசியம் என்பதை பலரும் உணர்ந்ததின் அடிப்படையில் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது ரூபாய்க்கான புதிய குறியீடு.

உலக நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் வேளையில் நாம் மட்டுமே ஏறுமுகமாக இருந்து வருகிற தருணத்தில் ரூபாய்க்கு தனிக்குறியீடு கண்டிருப்பதின் மூலமாக சர்வதேச அளவில் இனி நம் இந்திய ரூபாய்க்கு தனி மதிப்புக் கிடைக்கப் போகிறது.

அமெரிக்க (டாலர்), ஐரோப்பிய நாடுகள் (யூரோ), . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,064 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் பயணநேரம்!

கிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் விரைவு பஸ்கள் மூன்று மணி நேர தூத்துக்குடிக்கு 5மணி நேரம் பயணம்

கிழக்கு கடற்கரை சாலையில் தூத்துக்குடி செல்லும் பஸ்கள் பழைய கால அட்டவணை அடிப்படையில் செல்வதாக கூறி, மூன்று மணி நேரத்தில் போகும் இடத்திற்கு ஐந்து மணி நேரமாக்குவதால் பயணிகள் உடல் வலியுடன் அவதிபடுகின்றனர்.ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து தூத்துக்குடிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுன் பஸ்களின் கால அட்டவணை பல ஆண்டுகளுக்கு முன் தயார் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,351 முறை படிக்கப்பட்டுள்ளது!

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் – டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன்

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று துவா செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு. இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,869 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுதந்திரமா, பெண்ணுக்கா?

உலகத்தின் பெண்சுதந்திரம் உலகமும், இந்தியாவும் கண்ட பெண் சுதந்திரம் என்ன சுதந்திரமாம்? கண்ணும் , மனதும் கூசும் பள்ளியிலே ஆரம்பிக்கிறது பெண் குழந்தைகளின் சுதந்திரம், அருவருப்பான பாடலுக்கு ஒரு ஆட்டம் கேட்டால் பள்ளி இறுதி கொண்டாட்டம்!

மாநிலத்தில் அழகி போட்டி! உலகளவில் ஒரு அழகி போட்டி! பெண்ணின் அங்கங்களை அளந்து ஒரு பூனை நடை! ஒரு எலி நடை! பெண்களின் உடலை மதிப்பிட்டு மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க வக்கிரம் கொண்ட ஆண்கள் புடை சூழ – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,264 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்கள் மற்றும் அரவாணிகள் நலத்திட்டங்கள்

பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பெண்களுக்கு உதவ தமிழக அரசு நலத் திட்டங்ள் பல உள்ளன. குறிப்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் மூலம் மணப்பெண்ணின் பெற்றோருக்கு ரூ.20,000/- கிடைக்கும். மணப்பெண் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது போன்று இன்னும் பல திட்டங்கள் உள்ளன.

மற்ற சமூகங்கள் இதனை முறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த நாட்டின் முக்கிய அங்கமாக உள்ள முஸ்லிம்கள் இதனைப் பயன்படுத்துவது இல்லை என்பது மிக வருத்தமான . . . → தொடர்ந்து படிக்க..