Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,398 முறை படிக்கப்பட்டுள்ளது!

மழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;

வரலாறு காணாத மழையை பார்த்தாச்சு. ‘மழை வருமா’ என, வானிலை அறிக்கை கொடுக்க ரமணன் இருக்கார்; ஆனால், ‘மிஸ் கொசு’ உபயத்தால், எளிதில் பரவும் மழைக்கால நோய்கள் பற்றி, நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் நலனை கருதி, இதோ…

மஞ்சள் காய்ச்சல்: கிருமி: ப்ளாவி வைரஸ் பரவும் முறை: தொற்றுநோய் கொசுக்களால் மட்டும் பரவும். இதில், மூன்று நிலைகள் உள்ளன.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,214 முறை படிக்கப்பட்டுள்ளது!

காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு கமாண்டோ படையினர், இரவும், பகலும் சிறப்பாக பணியாற்றி, கைக்குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என, மொத்தம், 500 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களின் சேவையை சக போலீசாரும், பொதுமக்களும் மனதார பாராட்டி வருகின்றனர்.

கனமழைக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானது. தாம்பரம், முடிச்சூர், வரதராஜ புரம், மணிமங்கலம் பி.டி.சி., குடியிருப்பு, திருநீர்மலை, திருமுடிவாக்கம், கவுல்பஜார், அனகாபுத்துார், பொழிச்சலுார், கொளப்பாக்கம் உள்ளிட்ட . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,497 முறை படிக்கப்பட்டுள்ளது!

குவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி!

தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் குவிகிற குப்பைகளின் அளவு 14,000 மெட்ரிக் டன்! இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். ஒருமாதத்திற்கு… ஒரு வருடத்திற்கு.. பத்து ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் கூட உண்டாகலாம்!! குப்பையின் அளவு இன்று பத்தாயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பனிரெண்டாயிரமாக பத்து நூறாக நூறு ஆயிரமாக உயரும்..! அதை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா?

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,751 முறை படிக்கப்பட்டுள்ளது!

விண்வெளியில் பிளாட்டினம் வேட்டை!

பொதுவாக பிளாட்டினம் தான் அதிக மதிப்புமிக்கது, விலை அதிகமானது எனறும் தங்கத்தை விட மதிப்புமிக்கது என்று கருதுகிறோம். ஆனால் இதன் குழுவில் இதற்கு சமமாக அரிதான மற்றும் மதிப்புமிக்க உலேகங்களும் உள்ளன. இந்த உலோகங்கள் ருத்தேனியம், ரோடியம், பல்லேடியம், ஆஸ்மியம் மற்றும் இரிடியம் ஆகும். இவை அதிக நிலைத்தன்மைகள் கொண்டவகைளாகம். இரசாயன தாக்குதல் மற்றும் உயர் வெப்பநிலை போன்றவற்றால் பாதிக்கபடாது. இந்த குணங்கள் இவற்றை மின்னணு பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. இதனால். ஒரு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,788 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு

மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் ‘மூலிகை பெட்ரோலை’ உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன் பிறகு ராமர்பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு அலைக்கழிப்புகள்ஸ தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.

இதற்கிடையே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,327 முறை படிக்கப்பட்டுள்ளது!

எது சிறந்த சட்டம்?

தனக்கு உரிமையுள்ளவை மட்டுமல்லாது அதற்கு மேலுள்ளவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனநிலையில் உள்ள ஒரு சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட உபயோகப்படும் ஒரு கருவியாக சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டமே அநீதிக்குள்ளாக்கப்பட்டால்…? இதுதான் ஷரீஅத்தின் நிலை!

ஒருசில வர்க்கத்தினரிடம் ஷரீஅத் என்ற பெயரைச் சொல்லிப் பாருங்கள். அவர்களது முகங்களில் ஓர் இனம் புரியாத மாற்றம் வெளிப்படும். நீங்கள் அவர்களிடம் ஷரீஅத் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கேட்டுப் பாருங்கள். நீங்களே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,214 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா ??

கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை உள்ளுக்குள்,ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீ ரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,143 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேண்டும் இங்கே ஒரு கல்வி புரட்சி!

இன்று, உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், வர்த்தக நிறுவனங்களின் உயர் பதவிகளை, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய உதாரணம், பிரபல கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற உயர்ந்த ஸ்தானத்தை எட்டியிருக்கும் தமிழரான சுந்தர் பிச்சை.

இருந்தும் உலகளவில் தரம் வாய்ந்த, 200 பல்கலைகளின் வரிசையில், இந்தியாவிலுள்ள ஒன்று கூட இடம் பெறவில்லை.இன்று, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் கல்விமுறை தான், உலகிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,437 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்!

உலகில் 80 சதவீதம் பேர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம். முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள நீரும், வழுவழுப்பான சதையும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று தேயாமல் தடுக்கின்றன. இவை, முதுகு தண்டு வடத்துடன் ஒட்டிய சதை மற்றும் ஜவ்வுகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன.

நாம் நிமிர்ந்து நிற்கும் போது, தண்டுவடத்தின் கீழ் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,272 முறை படிக்கப்பட்டுள்ளது!

மது போதையில் சிக்கும் மாணவியர்!

பள்ளி மாணவியரும் மது போதையில் சிக்கும் விபரீதம், தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. கோவையில், பள்ளிச் சீருடையில் மாணவி நடத்திய ரகளையால், இது அம்பலமாகியுள்ளது. கலாசார சீரழிவைத் தடுக்க, பெற்றோர், ஆசிரியர் மட்டுமின்றி, அரசும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ கடைகளின் வரவு, இளைஞர்களை மது போதைக்கு அடிமையாக்கி வருகிறது. அதையும் தாண்டி, பள்ளி மாணவியரும் போதை பழக்கத்துக்கு ஆளாகும் அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. கோவையில் நடந்த சம்பவமே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,516 முறை படிக்கப்பட்டுள்ளது!

இனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை!

இனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை!

சென்னை புத்தகத் திருவிழா! மாலை நேரம். கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐ எஃப் டி அரங்கில் அமர்ந்திருந்தேன்.

ஒருவர் என்னருகில் வந்து, “சார், நான் மணிவண்ணன், _____ நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக இருக்கின்றேன்! ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ இங்கு எங்காவது இருப்பார்களா?” என்றார்.

எனது முகக்குறிப்பைப் பார்த்து விட்டு அவரே தொடர்ந்தார்:

“சார், அவர் ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,630 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்!

இங்கிலாந்தின் தலைமை மருத்துவர் டேம் டேவிஸ் சொல்வதைப் பார்த்தால் உலக அழிவு பாக்டீரியா கிருமிகளால் வரப் போகிறது என்பது போல் பயமுறுத்துகிறார் இன்னும் இருபதே வருஷத்தில், ஆஸ்பத்திரிக்குப் போய் ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் அறுவை செய்துகொண்டால் கூட நோயாளி இறப்பதற்கான சான்ஸ் மிக அதிகம். ஊரில் ஒரு காலரா, டி.பி பரவினால் மக்கள் கும்பல் கும்பலாகச் செத்து மடிந்து விடப் போகிறார்கள் என்கிறார்.

ஏன், இதற்கெல்லாம் தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடித்தாகி . . . → தொடர்ந்து படிக்க..